புது ப்ளாக்கரில் à®à¯à®ªà®¿ பிரச்சனை
புது ப்ளாக்கருக்கு மாறிய வலைப்பதிவுகளி்ல் சில இடுகைகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.
புதிய இடுகைகளின் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் சரியாக தெரிகிறது. எனினும் பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.
இது குறித்து ப்ளாக்கரின் Known Issues பக்கங்களில் பார்த்தால் "ஆங்கிலமல்லாத வலைப்பதிவுகளுக்கான ஆதரவு தருவது மிகப்பெரிய வேலை... சென்று கொண்டிருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்கள்.
நமது வலைப்பதிவின் வார்ப்புருவில் மாற்றம் செய்து பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயரை சரியாக தெரிய வைக்கலாம்.
உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்பதற்கு முன்னால் கீழ்க்காணும் நிரல்த் துண்டை சேர்த்திடுங்கள்:
<script>
function asc2uni(istr)
{
retstr = "";
i = 0;
while( i < istr.length)
{
if(istr.charCodeAt(i) < 128 || istr.charCodeAt(i) > 255 )
{
retstr += String.fromCharCode(istr.charCodeAt(i));
i++;
}
else
{
chr = istr.charCodeAt(i+2);
if(istr.charCodeAt(i+1) == 175)
chr += 64;
retstr += ""+ tohex(chr)+";";
i+=3;
}
}
return retstr;
}
function tohex(i)
{
hexarr = '0123456789ABCDEF'.split("");
a2 = '';
ihex = Math.floor(eval(i +'/16'));
idiff = eval(i + '-(' + ihex + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
while( ihex >= 16)
{
itmp = Math.floor(eval(ihex +'/16'));
idiff = eval(ihex + '-(' + itmp + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
ihex = itmp;
}
a1 = hexarr[ihex];
return a1 + a2 ;
}
</script>
பின்னர் வார்ப்புருவில்பழைய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:
<$BlogCommentAuthor$> என்பதைத் தேடி அதை கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொள்ளுங்கள்:
<script>
document.write(asc2uni('<$BlogCommentAuthor$>'));
</script>
புதிய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:
ஜெகத் கைமண்ணளவு பதிவில் சொல்லியபடி செய்யுங்கள்
வார்ப்புருவை சேமித்திடுங்கள். அவ்வளவு தான்! இப்போது உங்கள் வலைப்பதிவின் பின்னூட்டப் பெயர்கள் "à®à¯à®ªà®¿ (Gopi)" என்பது போல் சிதறாமல் "கோபி (Gopi)" என்பது போல் சரியாய் காட்டும்.
பி.கு:
1) இது உங்கள் இடுகையிலுள்ள பின்னூட்டப் பெயர்களை மட்டுமே சரியாகக் காட்டும். ப்ளாக்கர் பின்னூட்டப் பெட்டியில் சரி செய்ய இயலாது.
2) இது ஒரு தற்காலிக தீர்வே. இப் பிரச்சனையை ப்ளாக்கர் சரி செய்துவிட்டால் தேவைப்படாது.
3) இந்த நிரல் ஒருங்குறியி்லுள்ள எல்லா மொழிகளுக்குமானதல்ல. தமிழுக்கு மட்டுமே சரியாய் செயல்படும்.