மருது - பெண்ணே நீயும் பெண்ணா
சுந்தரவடிவேல் நேயர் விருப்பமாக சொன்னதையடுத்து ஓவியர் மருது வரைந்த ஓவியம் ஒன்றை வரைந்துள்ளேன். ஓவியர் மருது கணினி ஓவியங்களிலும் வல்லவர்.
சத்தியமா அவர் இந்த ஓவியத்துல என்ன சொல்ல வர்றார்னு புரியல உங்களுக்கு புரியுதா?
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 18:04 3 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
யாதுமாகி நின்றாய் தோழி!
என் ப்ரியமான தோழி, நட்பின் பெருமையை உணர்த்த அடிக்கடி ஃப்ரெண்ட்ஷிப் கார்ட் கொடுப்பார். (கார்ட் வாங்கியே பழக்கமில்லாத என்னை "நன்றி" கார்ட் வாங்க வைத்தே பிச்சைக்காரனாக ஆக்கியவர்). அவர் கொடுத்த கார்ட்களுள் என்னை மிகமிகக் கவர்ந்த ஒன்றை வரைந்தேன்.
3' x 2' அளவில் எனது அலுவலக மேஜையை அலங்கரிக்கும் ரெண்டாவது ஓவியம் இது (தங்கம்! உங்கள் ரெண்டாவது ஓவியம் கேள்விக்கு விடை கிடைத்ததா?)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 21:00 2 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
சின்னஞ்சிறு அனாதைகள்
விகடன் வார இதழில் பரிசுக் கவிதை ஒன்றின் ஓவியம் இது. பணக்கார சிறுமியுடன் பிறந்த நாள் பரிசாக பெற்றோர் அவளுக்களித்த கண் திறக்காத குட்டி நாய் (கவிதையும் ஓவியமும் மனதை என்னவோ செய்தது. அதனால் வரைந்தேன். எனது அலுவலக மேஜையிலிருக்கும் இரு ஓவியங்களுள் இது ஒன்று)
பல சமயங்களில் ஏனோ என்னை இந்தச் சிறுமி போல உணர்கிறேன். ஆனால் என்னோடு ஒரு நாய்க்குட்டி கூட இல்லை என்ற உண்மை உறைக்க மீண்டும் மனதில் ஓர் வெறுமையே மிஞ்சுகிறது
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 09:29 1 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
ஸ்யாம் - இஷ்ட தேவதை கோவிலில்
இந்த அம்மணி மூஞ்சி மட்டும் ஓவியர் ஸ்யாம் வரைஞ்சிருந்தாரு. நாம முழுசா வரையலாம்னு ஆரம்பிச்சா கடைசில கொழுக் மொழுக்னு ஒரு அம்மணி வந்து நிக்குது. இதப் பாத்த என்னோட சித்தி "லட்சனமா இருக்காடா! கோயிலுக்கு அனுப்பு"ன்னு சொன்னாங்க, கைல அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து அனுப்பிட்டேன்.
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 00:00 4 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
கற்பனை இல்லம்
அட எத்தனைக்காலம்தான் அடுத்தவங்க வரைஞ்சதயோ இல்ல புகைப்படத்தையோ பார்த்து வரைவது. சுயமா வரைஞ்சி பாக்கலாம்னு முயற்சி பண்ணினேன். எத்தனை கத்துக்குட்டித்தனமா இருக்குதுன்னு புரிஞ்சது. ஓவியர்கள்ளாம் வரையறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னும் புரிஞ்சது.
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
இந்த ஓவியத்திலுள்ள பலகுறைகளுள் சில
- தோளுக்கு கீழ் பகுதிகளில் அளவுகள் சரியாக இல்லை (கை, கால்,இடை )
- கூஜா, தம்ளர் ஆகியன மிகச்சிறிதாய் உள்ளது
- முப்பரிமானம் சரியாய் இல்லை
- ஊஞ்சல் சீராக இல்லை
இன்னும் குறைகளை கண்டுபிடியுங்கள்?
(நல்லாயிருந்தாலும் நல்லாயில்லைன்னாலும் நான் வரைஞ்சதில்லையா?)
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 13:30 6 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
மாருதி - ஹலோ!
குமுத வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் கருப்பு வெள்ளையாயினும் வண்ணமாயினும் புகைப்படத்தை போலவே இருக்கும். (அவரது ஓவியத்தைப் பார்த்து நான் வரைந்தது ஓவியம் போலவாவது இருக்கா ?)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 09:00 7 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
கோடுகளும் வளைவுகளும்
ஏதோ ஒரு வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. வெறும் தடித்த கோடுகளை மட்டும் கொண்டு அழகான(?) ஓவியம் வரைய முடியும் என்று நிரூபித்திருந்தார் அந்த ஓவியர். நம்ம கை சும்மா இருக்குமா? வரைஞ்சிடுமல்லோ!
இந்த ஓவியத்துல ஒரு விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க ரெனால்ட்ஸ் பேனா மட்டும் வச்சி வரைஞ்சது
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 21:27 6 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
ம.செ (மணியம் செல்வன்)
ம.செ (மணியம் செல்வன்) ஓவியங்களிலே ஒரு வித நளினம் தென்படும். இந்த ஓவியத்திலே ஒரு வித மெல்லிய சோகமும் இருந்தது. அன்று நான் வேறு மூட் அவுட். சரி வரைஞ்சிப்பாக்கலாம்னு தோனிச்சி
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 21:26 3 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
விமல் நங்கை
விமல் துணி விளம்பரத்தைப் பார்த்தவுடன் வரைய வேண்டும் என்று தோன்றியது (இந்த அம்மணி போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிச்சோ. என் பென்சில்ல மாட்டிக்கினு முழிக்கனும்னு இருக்கு)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 21:17 2 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
முதல்வன்
எப்போதாவது தனிமை கிடைத்தால் (முக்கால்வாசி நேரம் வெட்டி ஆபீசர் உத்தியோகத்தில் போய் விடுவதால்) நான் கூட ஓவியம் வரைகிறேன் என்று எதையாவது தீட்டுவதுண்டு. பொதுவாக ஏற்கனவே ஓவிய ஜாம்பவான்கள் வரைந்தவற்றையோ அல்லது புகைப்படத்தையோ மாதிரியாக வைத்து வரைவேன் (சுய கற்பனையில் வரையலாம் என்று உட்கார்ந்தால், சதுரமும் வட்டமும் தவிர வேறெதையும் கற்பனை செய்ய முடியவில்லை)
இது முதல்வன் படத்தில் மனீஷாவின் புகைப்படத்தை பார்த்து வரைந்தது (மனீஷா மாதிரி இல்லன்னாலும் மனுஷி மாதிரி இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 21:04 2 கருத்து(க்கள்)
குறிச்சொற்கள் ஓவியம்
















