கற்பனை இல்லம்
Google Buzz Logo

அட எத்தனைக்காலம்தான் அடுத்தவங்க வரைஞ்சதயோ இல்ல புகைப்படத்தையோ பார்த்து வரைவது. சுயமா வரைஞ்சி பாக்கலாம்னு முயற்சி பண்ணினேன். எத்தனை கத்துக்குட்டித்தனமா இருக்குதுன்னு புரிஞ்சது. ஓவியர்கள்ளாம் வரையறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னும் புரிஞ்சது.

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்





இந்த ஓவியத்திலுள்ள பலகுறைகளுள் சில
  1. தோளுக்கு கீழ் பகுதிகளில் அளவுகள் சரியாக இல்லை (கை, கால்,இடை )
  2. கூஜா, தம்ளர் ஆகியன மிகச்சிறிதாய் உள்ளது
  3. முப்பரிமானம் சரியாய் இல்லை
  4. ஊஞ்சல் சீராக இல்லை

இன்னும் குறைகளை கண்டுபிடியுங்கள்?

(நல்லாயிருந்தாலும் நல்லாயில்லைன்னாலும் நான் வரைஞ்சதில்லையா?)

ப்ளாக்கர் கமெண்ட் தனி வின்டோவில்
Google Buzz Logo

1) முந்தைய கமெண்ட்கள் என்னென்ன என்பதை இருக்கும் பக்கத்திலிருந்தே படிக்கும் (கொலாப்ஸிபில்) யுக்தியை ப்ளாக்கர் யுக்திகள் பக்கத்தில் சொல்லியது போல உங்கள் டெம்ப்லேட்டை மாற்றிக் கொள்ளவும்.

2) கீழேயுள்ளதை <HEAD> பகுதியில் சேர்த்துக் கொள்ளவும்

<script type="text/Javascript">

function popupcomments(postid)
{
win = window.open("",""+postid,'width=400,height=300');
win.document.open();
win.document.write(document.getElementById(postid).innerHTML);
win.document.close();
}
</script>

3) ப்ளாக்கர் யுக்திகள் பக்கத்தில்

<a href="javascript:togglecomments('c<$BlogItemNumber$>')">
என்று சொல்லியுள்ள இடத்தில் அதற்கு பதிலாக
<a href="javascript:popupcomments('c<$BlogItemNumber$>')">
என்று மாற்றிக் கொள்ளவும்.

4) தமிழ் கமெண்ட் அடிக்கனும்னா கொசப்பேட்டை குப்ஸு சின்னவூட்ல சொன்ன மாதிரி பண்ணிக்கங்க

5) சேவ் பண்ணி ரீ-பப்ளிஷ் பண்ணிங்கன்னா முடிஞ்சதுங்க. அவ்வளவு தான்!

மாருதி - ஹலோ!
Google Buzz Logo

குமுத வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் கருப்பு வெள்ளையாயினும் வண்ணமாயினும் புகைப்படத்தை போலவே இருக்கும். (அவரது ஓவியத்தைப் பார்த்து நான் வரைந்தது ஓவியம் போலவாவது இருக்கா ?)




படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

எப்படியாச்சி - 1
Google Buzz Logo

ரெண்டு சின்னப்பசங்க பேசிக்கிட்டாங்க. வயசானப்புறம் எப்படி செத்தா நல்லதுன்றது பத்தி பேச்சு திரும்புச்சி

சி1: நான் வயசனாக்க எங்க தாத்தாவோட நண்பர்கள் மாதிரி ஆ! ஊ! ன்னு கத்திகிட்டு மத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு வேதனையோட சாக விரும்பல, எங்க தாத்தா மாதிரி நிம்மதியா தூங்கும்போது அமைதியா சாகனும்னு விரும்பறேன்.
சி2: உங்க தாத்தாவோட நண்பர்கள்லாம் எப்ப எப்படி செத்தாங்க
சி1: ஒரு ராத்திரி வண்டியில எல்லாம் ஊருக்கு போயிட்டு திரும்பிக்கினு இருக்குறப்போ வண்டி வேகமா மரத்துல மோதி எல்லாரும் செத்து போயிட்டாங்க
சி2: சரி, உங்க தாத்தா எப்ப எப்படி செத்தாரு
சி1: அவரும் அப்பவேதான். அந்த வண்டிய ஓட்டிகிட்டு வந்தவரே அவர்தான்

கோடுகளும் வளைவுகளும்
Google Buzz Logo

ஏதோ ஒரு வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. வெறும் தடித்த கோடுகளை மட்டும் கொண்டு அழகான(?) ஓவியம் வரைய முடியும் என்று நிரூபித்திருந்தார் அந்த ஓவியர். நம்ம கை சும்மா இருக்குமா? வரைஞ்சிடுமல்லோ!

இந்த ஓவியத்துல ஒரு விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க ரெனால்ட்ஸ் பேனா மட்டும் வச்சி வரைஞ்சது




படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

பிள்ளையார் டான்ஸ் ஆடிய கதை
Google Buzz Logo

முன்னொரு காலத்துல மூனு மீனவ நண்பர்களிருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் கடல்ல மீன் பிடிக்கலாம்னு போனங்க. இதுல பாத்தீங்கன்னா ஒருத்தர் இந்து ஒருத்தர் முஸ்லீம் ஒருத்தர் கிருஸ்தவர். தூரமா போய் மீன் புடிக்கும்போது கடல்ல திடீர்னு புயல் வந்துருச்சி. கிறிஸ்தவர் "கர்த்தரே காப்பீர்"னு சொன்ன உடனே ஏசு வந்து அவரை காப்பாத்திட்டாரு. முஸ்லீம் "அல்லாவே அருள்"னு சொன்ன உடனே அல்லா வந்து அவரை காப்பாத்திட்டாரு. இந்துக்கு யாரைக்கூப்பிடனும்னு கொழப்பம் வந்துடுச்சி. கடைசியா முடிவு பண்ணி. "புள்ளையாரப்பா! நான் புள்ளகுட்டிக்காரன் என்னிய காப்பாத்து உனுக்கு 108 தேங்கா ஒடைக்றேன்"ன்னான். புள்ளையாரு வந்தாரு. ஆனா அவனை காப்பாத்த்றதுக்கு பதிலா, கடற்கரைல நின்னுகிட்டு "எத்தினி தபா என்னிய முழுகவுட்டு நீ டான்ஸ் ஆடியிருப்ப! இப்ப நீ முழுகு. நான் டான்ஸ் ஆடுறேன்"னு சொல்லி டான்ஸ் ஆடிட்டு போய்ட்டாரு

இந்த கதைய நம்ம முக்கிய பிரமுகருங்க(அவங்கல்ல பலபேர் அரசு சொத்தை அமுக்கியதால "அமுக்கிய பிரமுகர்"னு இல்ல கூப்பிடனும்) சில பேர் கிட்ட சொன்னா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணறாங்கன்னு பாக்கலாம்

சுப்ரமண்யசாமி: இது திட்டமிட்ட சதி. கோபிங்கற பேர்ல இந்தக் கதைய சொன்னது ஒரு இந்துவே இல்லை. போன வாரம் ஏசுவ நான் டீ பார்டிக்கு கூப்பிட போனப்ப அவர் கூட இதைத்தான் சொன்னாரு. வர்ற பிப்ரவரி 31 அன்னிக்கி இத நான் ப்ரூவ் பண்ணுவன்

தொல்.திருமாவளவன்: மீனவர் என்றாலே தலித். ஒரு கதையில் கூட தலித் நண்பன் மூழ்குவதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது. இதை எதிர்த்து போராட மரவெட்டி ஐயா மற்றும் சிலருடன் விவாதித்து முடிவு செய்வோம்

மரவெட்டி ஐயா: இந்தக் கதை சொல்வதற்கு முன் எங்களிடம் கோபி முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் இந்த கதை எழுதப்பட்ட வெப்சைட்டை அழிப்பார்கள். இதை செயல்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்படும் அதற்கு அன்புமணி தலைமை தாங்க வேண்டும் இதெல்லாம் கட்சி பொதுக்குழு செயற்குழு கூடி எடுத்த முடிவு

இ.மு இராமகோபாலன்: இதை எழுதியவரின் பெயரில் என் பெயரிலுள்ள "கோ" இருப்பதற்காக வெக்கப்படுறேன். இந்துக்களை காக்க வேணாம். இது போன்ற கதை எழுதுற ஆளுங்களை முஸ்லீம்களோட நாட்டுல இருந்தா நாடு கடத்தி இருப்பாங்க. இது குறித்து அன்பு சகோதரி ஜெயாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கேன்.

கழகத்தின் காவல்தெய்வம்: உங்கள் சகோதரியின் பொன்னாட்சியிலே இது நடந்தது மிக வருந்தத்தக்கது. அந்த இந்து மீனவ குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ரு. 1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல எழுதுபவர்களை தடுக்க "கட்டாய எழுத்து தடுப்பு சட்டம்" கொண்டு வரப்படும்.

முத்தமிழ் காவலர்: உடன்பிறப்பே, நமது மீனவ நண்பன் மூழ்கியது வருந்தத்தக்கது. ஆனால் அவனை தேடி கண்டுபிடிக்காமல் அவன் இறந்துவிட்டதாக கூறி நிதியுதவி அளிப்பதாக நாடகமாடியிருக்கிறார் இந்த அம்மையார். மதச்சார்பற்ற நமது கழக ஆட்சி நடந்த போது இப்படியெல்லாம் நடந்ததா? இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தமிழக மக்களொன்றும் சொற்றாலடித்த் பிண்டங்களல்ல.சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்றும் மக்களின் முயற்சிக்கு தோள் கொடுக்க வெகுன்டெழுந்து வாராய்.

இந்திய சுங்கவரி - சில குறிப்புகள்
Google Buzz Logo

நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா? இந்தியாவுக்கு வருகிறீர்களா? இந்திய சுங்கவரி குறித்து உங்களுக்கு உபயோகமான சில குறிப்புகள் இங்கே

இப்போதுள்ள சுங்கவரி விதிகளின்படி:

1) வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் ஒவ்வொரு பயனியும் ஒரு லாப்டாப் (நோட்புக் கணினி) தங்களோடு சுங்கவரி செலுத்தாமல் எடுத்து வரலாம்

2) ஒவ்வொரு பயனியும் தன்னோடு ரூ. 25,000 வரை மதிப்புள்ள பொருள்களை சுங்கவரி செலுத்தாமல் எடுத்து வரலாம். மேற்கொண்டு எடுத்துவரும் பொருள்களின் மதிப்பில் 40% வரி செலுத்த வேண்டும்
(உ.ம்: உங்கள் பேகேஜில் உள்ள ஒரே பொருள் ரூ 50,000 மதிப்புள்ள ஒரு காமிரா என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் செலுத்த வேண்டிய சுங்கவரி ரூ. 10,000 (5,0000 - 25,000) X 40/100 = 10,000 )

3) தங்கம் கொண்டுவருபவர்கள் 10 கிராமுக்கு ரூ 250 வீதம் சுங்கவரி செலுத்தி ஒரு பயனிக்கு 10 கிலோ வரை எடுத்துவரலாம்

4) மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையத்தில் கெடுபிடிகள் குறைவு. (அடிக்கடி CBI ரெய்டு நடப்பதும் ஒரு காரணம்) காரணமில்லாமல் லஞ்சம் கேட்டால் கொடுத்துவிட்டு பொருள்கள் உங்களிடம் வந்து அடைந்த பின் CBI ஐ அனுகலாம்

5) தாய்லாந்து/அமெரிக்கா மற்றும் இன்னும் சில நாடுகளில் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கு மதிப்பு கூட்டு வரி (VAT) செலுத்தியிருந்தால், 6 மாதத்துக்கும் குறைவாக அந்நாட்டில் தங்கியிருந்திருந்தால, கிளம்பும்போது அந்நாட்டு விமான நிலையங்களில் அந்தத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், விபரங்களுக்கு அந்தந்த விமான நிலையத்தில் விசாரிக்கவும்


இன்னும் பல விபரங்களுக்கு கீழேயிள்ள சுட்டிகளைப் பார்க்கவும்:
http://www.geocities.com/indiancustoms/
http://www.cbec.gov.in/

ம.செ (மணியம் செல்வன்)
Google Buzz Logo

ம.செ (மணியம் செல்வன்) ஓவியங்களிலே ஒரு வித நளினம் தென்படும். இந்த ஓவியத்திலே ஒரு வித மெல்லிய சோகமும் இருந்தது. அன்று நான் வேறு மூட் அவுட். சரி வரைஞ்சிப்பாக்கலாம்னு தோனிச்சி



படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?
Google Buzz Logo

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரெண்டு பேர் இருந்தாங்க (டெண்டுல்கர், கங்குலின்னு வச்சுக்குவமே அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா). அவங்களுக்கு சொர்க்கத்துல கிரிக்கெட் மேட்ச் உண்டா இல்லையாங்கிற தீராத சந்தேகம் ஒன்னு இருந்தது. சரின்னு ரெண்டு பேர்ல யாரு மொதல்ல செத்தாலும் சொர்க்கத்துக்கு போய் அங்க கிரிக்கெட் உண்டான்னு பர்த்துட்டு ஆவியா வந்து மத்தவர் கிட்ட சொல்லனும்னு ஒரு ஒப்பந்தம் பண்ணாங்க.

வயசானப்புறம் டெண்டுல்கர் மொதல்ல செத்துப்போய் சொர்க்கத்துக்கு போனார்.

கொஞ்சநாள் கழிச்சி ஒரு நாள் கங்குலி பார்க்ல ஒக்கந்துகிட்டு இருந்தப்ப "சௌரவ்! சௌரவ்!" அப்பிடின்னு கொரல் கேட்டுச்சி திரும்பிப் பாத்தா திடீர்னு டெண்டுல்கர் ஆவியா அங்க நின்னுக்கிட்டிருந்தார்.

சந்தோஷத்துல கங்குலி அவரைப் பாத்து "சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?"ன்னு கேட்டார்.

டெண்டுல்கர் அதுக்கு அமைதியா அவரைப்பாத்து "உனக்கு ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி"ன்னு சொன்னார்.

கங்குலி "சரி மொதல்ல நல்ல விஷயத்தச் சொல்லு"ன்னாரு

"சொர்கத்துல கிரிக்கெட் இருக்கு" அப்பிடின்னாரு டெண்டுல்கர்.

"சூப்பர். இந்த சந்தோஷத்த எந்த கெட்ட சேதியும் கெடுக்க முடியாது. அது என்ன கெட்ட சேதி"ன்னாரு கங்குலி

"வர்ற வெள்ளிக்கெழமை சொர்க்கத்துக்கு நரகத்துக்கும் நடக்ற ஒன்டேல நீதான் சொர்க்கத்து சார்புல ஓபனிங்கு பேட்ஸ்மேன்"ன்னாரு டெண்டுல்கர்.

விமல் நங்கை
Google Buzz Logo

விமல் துணி விளம்பரத்தைப் பார்த்தவுடன் வரைய வேண்டும் என்று தோன்றியது (இந்த அம்மணி போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிச்சோ. என் பென்சில்ல மாட்டிக்கினு முழிக்கனும்னு இருக்கு)




படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

மாய மான் (சிறுகதை)
Google Buzz Logo

சென்னையின் புறநகர் பகுதிகளுள் ஒன்றான இந்தப் பகுதிக்கு நான் எஸ்.ஐயாகப் பதவியேற்று ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மனைவி, குழந்தைகளை கூட்டி வரவில்லை.

சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும் நகரின் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. பதவியேற்றவுடன் நான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக் இருந்தது ஊருக்குள் திருட்டுத் தொல்லை மலிந்துவிட்டது என்பதே.

முந்தய திருட்டுக்களில் துப்பு கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தேன். பொதுவாக இத்தகைய "மாஸ் தெஃப்ட்" கேஸ்களில் பெரும்பாலும் ஒரு கும்பலே சம்பந்தப்பட்டிருக்கும். அனைத்து திருட்டுக்களுக்கும் ஒருவித ஒற்றுமை இருக்கும். ஆனால் எஃப்.ஐ.ஆர் ஃபைல்களைப் புரட்டியதில் ஒன்றும் தேரவில்லை.

மாலையில் ரெகுலர் டியூட்டி முடிந்ததும் "நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்களுக்கு பின்னால் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

"நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்கள் சுமார் 3 மணியளவில் தூக்கம் வருவதைத் தவிர்க்க பஸ் ஸ்டான்ட் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு மீன்டும் 6 மணிவரை ரவுன்ட்ஸ் வந்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு "நைட் பீட்" முடிப்பர்.

முதல் இரண்டு நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததில் ஏதும் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாள் இரவு,

கான்ஸ்டபிள்கள் "நைட் பீட்"க்கு கிளம்பியவுடன் அவர்களுக்குத் தெரியாமல் வழக்கம் போல அவர்களைத் தொடர்ந்தேன். நான்கைந்து தெருக்கள் சுற்றியபின் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ரூட்டில் நடக்க ஆரம்பித்தார்கள். சற்றே இடைவெளி விட்டு நானும்.

திடீரென்று அவர்களைக் காணவில்லை. திரும்பி அவர்களைத் தேடி நடந்ததில் வழி தவறிவிட்டேன். சரி திரும்ப வந்த வழியிலேயே திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே நடந்தபோது "உர்ர்ர்ர்ர்ர்ர்..." என்றபடி என் மீது பாய்ந்தது அது.

சுதாரித்துகொண்டு எழுந்து பார்த்தேன். என் இடுப்புயரத்திற்கு ஜெர்மன் ஷெப்பர்டையும் ராஜபாளையத்தையும் கலந்து உருவாக்கிய மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த நாய். ஜெர்மன் ஷெப்பர்டா? ராஜபாளையமா? எங்கு தப்பு நடந்தது என்றெல்லாம் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த நேரமில்லை. ஆபத்து என அட்ரினலின் மூளைக்குணர்த்த ஓட ஆரம்பித்தேன்.

நான்காம் வகுப்பு படித்த போது ஒரு தெரு நாய் என்னைக் கடிக்கும் வரை நான் நாய்க்கு பயப்படாமல் தான் இருந்தேன். அன்று யாரோ அதற்கு உணவிடாமல் வம்பு செய்திருக்கிறார்கள் என்று எனக்கெப்படி தெரியும்? காரணமே இல்லாமல் அது என்னை கடித்துக் குதறியதில் மாலைமலரில் "சம்பவம் நடந்தபோது" என ஆரம்பிக்கும் நாலாம்பக்கச் செய்தியானேன்

அன்று முதல் இப்போது மிடுக்கான எஸ்.ஐ ஆன பிறகும் கூட எனக்கு நாய் என்றால் அடிமனதில் ஒரு கலக்கம்தான்.

நான் ஓட ஆரம்பித்தவுடன் நாய் மேலும் உற்சாகமாகி என்னைத் துரத்த ஆரம்பித்தது. ஓடி ஓடி களைத்து போன நான் கடைசியாக அந்த அபார்ட்மென்ட் பின்புறமாக இருந்த தென்னை மரத்தில் ஏறி மொட்டை மாடியில் குதிதேன். அடடா, கிராமத்தில் சிறுவயதில் மரமேற கற்றுக்கொண்டது எவ்வளவு நல்லதாய்ப் போச்சி என்று எண்ணியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். சற்று நேரம் உறுமிய நாய் ஏமாற்றத்தில் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி ஓடியது.

கீழே இறங்கி வர படிகளைத் தேடினேன். படிகளுக்கு போகும் வழியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. மொட்டை மாடியை சுற்றிப்பார்த்ததில் மழைநீர் சேகரிப்புக் குழாய் தெரிந்தது. போலீஸான என்னை இப்படி திருடன் போல குழாய் மூலம் இறங்க வைத்த நாயை சபித்த படி மெதுவாக குழாயை பிடித்தபடி இறங்க ஆரம்பித்தேன்.

முதல் மாடியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றின் பின்புறம் வந்தபோது வென்டிலேட்டர் வழியாக சில பேச்சுக்குரல்கள் கேட்டது. சற்றே கவனித்ததில் நான்கைந்து பேர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

"இன்னிக்கு எம்.ஜி.ஆர் நகர்ல நாலஞ்சி மாய மான் செஞ்சி வச்சிருக்கேன்"

"நான் கடைவீதியில ஒரு மாய மான் பண்ணி வச்சிருக்கேன்"

"சரி எல்லாரும் ஆளுக்கொரு ராமனை எடுத்துக்கினு போய் ஒவ்வொரு மாய மானா அடிச்சிகினு வாங்க"

ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனதுக்குள் ஏதோ தப்பு நடப்பதாகப் பொறி தட்டியது. எட்டிப்பார்த்ததில் ஒரு மேஜை நிறைய பேனாக்களாக தெரிந்தது. எல்லாரும் ஆளுக்கு ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

எல்லாரும் சென்றபின் ஒருவன் மட்டும் அங்கேயே உறங்கிப்போனான்.

அப்பார்ட்மென்ட் நம்பர், பெயர் எல்லாவற்றையும் மனதில் குறித்துக்கொண்டு ஸ்டேசனுக்கு திரும்பினேன்.

மறுநாள் காலை அந்த அப்பார்மென்ட்டுக்கு சில கான்ஸ்சபிள்களொடு சென்றபோது முன்தினம் இரவு அங்கேயே உறங்கியவன் இருந்தான். விசாரனைக்கு வந்திருப்பதாகச் சொல்லாமல் புதிதாக ஊருக்கு வந்திருப்பதாகவும் இந்த வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஒரு ப்ரோக்கர் சொன்னதாகவும் சொல்ல, வாடகைக்கு இந்த வீடு கிடைக்காது என்று கூறினான். மெதுவாக பேச்சு கொடுத்தேன். அவன் நூதனப்பொருள் இறக்குமதி செய்து இன்டர்நெட் மூலம் விற்பனை செய்துவருவதாகச் சொன்னான்.

ஒரு பேனாவை எடுத்துக்காட்டிய அவன், "இது ஒரு மேஜிக் பேனா சார், எதுமேல வேணா எழுதலாம், எழுத்து சாதாரணமா கண்ணுக்கு தெரியாது. எழுதினத பாக்கனும்னா ரூபா நோட்டுல கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கரமில்லியா அந்த UV பேனா லைட்ட இதுமேல அடிச்சம்னா தெரியும்" என்றான்.

"மாய மானின்" அர்த்தம் எனக்கு மெதுவாக விளங்க ஆரம்பித்தது. அவனை பிடித்து "உரிய மரியாதை" கொடுத்து விசாரித்ததில் பகல் நேரத்தில் கினற்றுக்கு மருந்தடிக்க, குழாய் ரிப்பேர் செய்ய, ட்ரெய்னேஜ் சுத்தம் செய்ய என்று வீடுகளின் உள்ளே வந்து நோட்டமிட்டு வீட்டின் முன் சுவற்றில் இந்த மாயப் பேனா கொண்டு வீட்டின் அமைப்பு திருடிவிட்டு தப்பிக்க வசதியான வழிகள் எல்லாவற்றையும் எழுதிவிட்டு வந்து, இரவில் ஆளிலாத வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பதாக ஒப்புக்கொண்டான்.

நோட்டமிட்டவன் தானே கொள்ளையடிக்கப் போகிறான், இந்த பேனா கொண்டு எழுதவேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்ததில், திருடும் போது மாட்டிக்கொண்டால் உடனே மாட்டியவனை வேறு ஊருக்கு அனுப்பிவிடுவதாகவும் அது போல வேறு ஊரில் இருந்து புத்தாக இங்கு கொள்ளையடிக்க வருபவனுக்கு வசதியாக இருக்க அது போல எழுதிவைப்பதாக கூறினான்.

"ஆகா! ஒரு குரூப்பாத்தான்யா அலையறனுவ"ன்னு நடிகர் வடிவேலு பொல மனசுக்குள் நினைத்தபடி சம்பதப்பட்ட அத்தனை பேரையும் உள்ளே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டராகும் ப்ரமோஷன் கனவோடு வீடு திரும்பினேன்.

சாம்பிளுக்கு எடுத்து வந்த UV லைட் பேனாவை முன் சுவற்றில் அடித்த போது. வீட்டின் மொத்த அமைப்பையும் விலாவரியாக எழுதியிருந்தது தெரிந்தது. "பி.கு: இது எஸ்.ஐயின் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் எனவே இந்த அமைப்பில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் எந்த மாற்றமும் இருக்காது" என்று வேறு எழுதியிருந்தது.

"அடப்பாவிகளா! அங்க கைவச்சி இங்க கைவச்சி அடிமடியிலயே கை வச்சிருப்பானுக போல இருக்கே!". முதல் வேலையாக இது போல எந்தெந்த வீடுகளில் எழுதியிருக்குன்னு கண்டுபிடிச்சி அழிக்க வழி பண்ணனும். நாளைக்கு வேற ஊர்ல இருந்து மனைவி, குழந்தைகள்ளாம் வர்றாங்க அதுக்குள்ள நம்ம வீட்ல மட்டுமாவது அழிக்கனும்னு நெனச்சிகிட்டேன்.

முதல்வன்
Google Buzz Logo

எப்போதாவது தனிமை கிடைத்தால் (முக்கால்வாசி நேரம் வெட்டி ஆபீசர் உத்தியோகத்தில் போய் விடுவதால்) நான் கூட ஓவியம் வரைகிறேன் என்று எதையாவது தீட்டுவதுண்டு. பொதுவாக ஏற்கனவே ஓவிய ஜாம்பவான்கள் வரைந்தவற்றையோ அல்லது புகைப்படத்தையோ மாதிரியாக வைத்து வரைவேன் (சுய கற்பனையில் வரையலாம் என்று உட்கார்ந்தால், சதுரமும் வட்டமும் தவிர வேறெதையும் கற்பனை செய்ய முடியவில்லை)



இது முதல்வன் படத்தில் மனீஷாவின் புகைப்படத்தை பார்த்து வரைந்தது (மனீஷா மாதிரி இல்லன்னாலும் மனுஷி மாதிரி இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்)

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

மாட்டிக்கிட்டியேடா மாதவா - 2
Google Buzz Logo

(கம்பெனியில நம்ப ஹீரோ மாதவன் வேலை நேரத்துல ஒரு பொண்ணு கூட யாஹூல அரட்டையடிச்சிகிட்டிருந்தார்)

மாதவன்: ஹலோ உங்க பேர்/வயசு/ஊர் என்ன ?
அகிலா: அகிலா/21/இந்தியா, நீங்க
மா: மாதவன்/24/நியூயார்க்,தொழில் மென்பொருள் - நீங்க?
அ: நானும். சேம் ஸ்வீட்

(இதற்குள் மாதவனின் மேனேஜர் அவன் மேஜையருகில் வருகிறார்)

மா: கொஞ்சம் பொறு. என் மேனேஜர் வர்றான். அப்றம் பேசுவம்
மேனேஜர்: ஹாய் மாதவன், எனக்கு ஒரு சந்தேகம். இந்த புள்ளிவிவரத்துல வர்ற எல்லாத்தையும் வரிசைப்படுத்த்றதுக்கு ஒரு கோட் எழுதித்தர முடியுமா?
மா: சாரிங்க. இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் உங்களுக்கு நாளைக்கு காலைல தர்றனே

(மேனேஜர் யோசித்தபடி தனது அறைக்கு திரும்புகிறார்)

மா: ஆங். சொல்லு கண்ணு. மேனேஜர் நாய் பொயிடிச்சி.
அ: இந்த மேனேஜருங்கனாலே கடியனுங்கதான் இல்ல
மா: ஆமா. அவனுங்களுக்கெல்லாம் புத்தியே கெடையாது
அ: அப்புறம், எனக்கு ஒரு சின்ன சந்தேகம்
மா: என்ன சொல்லு. தீத்து வச்சிடுவோம்
அ: எண்களை வரிசைப்படுத்த ஒரு ப்ரோக்ராம் வேனும், தரமுடியுமா? எவ்வளவு நேரமாகும்
மா: ஒரே நிமிஷம். இப்பொ தந்துர்றேன்
அ: தம்பி இதத்தானப்பா கொஞ்சநேரம் முன்னாடி நேர்ல கேட்டேன்
மா: !!!!????