கனவில் வந்த பாலாபாய் (பா.க.ச பதிவு)
Google Buzz Logo

பா.க.ச மக்களே, நேத்து ராத்திரி கனவுல நம்ம பாலாபாய் வந்தாரு. (அவனவனுக்கு நமீதா, திரிஷா, ஜோதிகா, பூமிகா, அசின் இவங்க எல்லாம் கனவுல வருவாங்க. அட, 'சமீபத்துல' பொறந்தவங்களுக்கு கூட அட்லீஸ்ட் ஒரு ஜெயமாலினி, ஜோதிலட்சுமியாவது வருவாங்க... ஹூம்... என் நெலமயப் பாருங்க. )

சரி வந்தாரா... என்ன விசயம்னு கேட்டேன். சொந்தமா ஒரு எழுத்துரு செஞ்சிருக்கறதா சொல்லி அதைப் பயன்படுத்திப் பாத்து கருத்து சொல்ல சொன்னாரு. என்னடா இது... நாம இருக்குற எல்லா எழுத்துருவையும் ஒருங்குறிக்கு மாத்தச் சொல்லி பாக்குற எல்லாரையும் கேட்டுக்கிட்டு இருக்கோம்... இவர் என்னாடான்னா அவரே உருவாக்கி தராரே அப்படின்னு ஒரே சந்தோசமாயிடுச்சி.

சரின்னு நானும் அந்த எழுத்துருவை நிறுவி டைப் பண்ணிப் பாத்தேன். அது என்னடான்னா, எந்த கீயை தட்டினாலும் 'பா.க.ச... பா.க.ச... பா.க.ச...' இதத் தவிர வேற எதுவுமே வரமாட்டேங்குது.

அப்படி என்னத்தை இந்த எழுத்துருவில மாத்தியிருக்காருன்னு பாத்தா... அந்தக் கொடுமைய நான் ஏன் சொல்லனும்... நீங்களே பாருங்க...


அப்புறமா போன் பண்ணி அது என்னங்க காப்பி லெப்டு, ரைட்டு, டாப்பு, பாட்டம் அப்படின்னு பாலாபாய் கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்னது:

"அதாவது, ரைட்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டு. லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டுலெப்டு. மேல இருந்து காப்பி அடிச்சா அது காப்பிடாப்பு, கீழ இருந்து காப்பி அடிச்சா அது காப்பிபாட்டம்"

இந்த விளக்கத்தை கேட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சி போச்சிங்க. உங்களுக்கு ?

அதியன் 2.0.4 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.4ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) குமுதம், தினகரன் ஆகிய வலைத் தளங்களின் சில வலைப்பக்கங்களில் திடீரென ஒருங்குறி மாற்றம் செயல்படவில்லை (மற்ற தளங்களிலிருந்து நேரடியாய் விளம்பரம் வெளியிடும் தளங்களில் Firefox Security Exception காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டது.) இவ்வழு இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

பி.கு: இந்த வெளியீடு சில நாட்களுக்கு முன்பே பதிவிறக்கக் கிடைத்தாலும் இது குறித்த அறிவிப்பை இன்றுதான் வெளியிட முடிந்தது (அலுவலகத்துல ஆணி அதிகமாயிடிச்சிங்க)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Google Buzz Logo

அப்பாடா... சென்னை வலைப்பதிவர் பட்டறை '07 நல்ல படியா முடிஞ்சதுங்க.

நிகழ்வுகளைப் பத்தி வந்த பதிவுகளை நீங்க படிச்சிருப்பீங்க. இன்னும் படிக்காதவங்க எல்லாம் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட்க்கு ஒரு நடை போய் பாத்து எல்லாத்தையும் ஒரே மூச்சுல படிச்சிட்டு வந்துருங்க பாக்கலாம்... (நானும் எல்லாத்தையும் திருப்பித் திருப்பி சொல்லி உங்கள ப்ளேடு போட வேண்டியிருக்காதில்ல...)

சரி சுருக்கமா சொல்றேன்.

நெறய பேரை முதல் முறையா பாக்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க. தொலைபேசி மூலமா ரஜினி ராம்கி, தல பாலா அப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு கூட பேசியிருக்கேன்னாலும் நேரிலே பாக்கறதுன்றது வேற இல்லீங்களா...? ஆனா என்ன... யாரோடுமே அதிகமா பேச முடியலைன்ற ஒரே குறைதான்.

அப்புறம் நிகழ்ச்சியில யாரு பேசினாங்க என்ன பேசினாங்கன்றதெல்லாம் நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க. தட்டச்சுப் பயிற்சியிலும் செயல் விளக்க வகுப்பிலேயுமே அதிக நேரம் இருந்ததால அரங்கத்துலயும் வெளியேயும் நடந்த நெறைய விசயங்களை கவனிக்க முடியலை. பட்டறை சம்பந்தமான பதிவுகளை படிக்கும் போது தான் அடடா! இவ்வளவு நடந்ததா? அப்படின்னு தெரியுது.

"துன்றத்துக்கு..." நல்லா இருந்துச்சி. தல பாலா தான் பாவம் ஒடஞ்சி போன தயிர்சாத பொட்டலத்தையெல்லாம் வழிச்சி தொடச்சிக்கிட்டு இருந்தார்.

புதுசா ஃப்ளாஷ் கத்துக்கிட்டேன். பினாத்தலாருக்கு நன்றி.

கடைசி வரைக்கும் எழுத்துரு மாற்றப் பயிற்சியை மட்டும் என்னால கொடுக்க முடியலைன்னு நான் பொலம்பிக்கிட்டு இருந்ததை பாத்து பாவம் போவட்டும்னு கடைசியா க்ருபாவும் பொன்ஸும் ஒக்காந்து கேட்டாங்க. எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாத்த இன்னும் நிறைய பேரை பிடிக்கனும். பாக்கலாம்...

இப்போதைக்கு வேற ஒன்னும் தோனலைங்க... அவ்ளோதான்...

அது சரி... தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன தொடர்புன்னு கேக்கறீங்களா? அரங்கத்துக்கு வந்தப்போ பெயரை கேட்டு பேட்ஜ் எழுதின ராஜா முதல், நிகழ்ச்சி முடிஞ்சி வீட்டுக்கு போற வரை எல்லாருமே "கோபி"ன்னு சொன்னா உடனே "ஹை கோபியா?" அப்படீன்னு கேட்டதால மனசுக்குள்ள கேட்ட சவுண்டு தாங்க அது... அட யாருமே இந்த இடுகையை படிக்கலையா... இல்ல... வேணுமின்னே கலாய்க்கறாங்களான்னு தெரியலை... ஏன்...? எதுக்கு இந்த கொல வெறி...?

சரி. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

அடுத்த பட்டறை எங்கேப்பா? சீக்கிரம் அதுக்கான வேலையை ஆரம்பியுங்க. முன்னாலயே நம்மளுக்கும் ஒரு கடுதாசி தட்டிடுங்க. (வந்து சேர வசதியா இருக்குமில்ல)