தமிழ்விசை நீட்சி 0.3 வெளியீடு
Google Buzz Logo

அண்மையில் தமிழ்விசை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் 0.3 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட்சியின் நிரலாக்கத்தில் பங்கேற்றதற்காக மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதன் முந்தைய 0.2 பதிப்பினை நான் பயன்படுத்த ஆரம்பித்த நாள் முதல் சில மேம்பாடுகளை செய்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதுண்டு. முகுந்த் அவர்களை சந்தித்த போது இந்த மேம்பாடுகளைக் குறித்து சொன்னேன். உடனடியாக அவர் எனக்கு நிரல் மாற்ற உரிமையளித்ததோடு எந்த ஒரு தடையுமின்றி எனது விருப்பம் போல செயல்பட அனுமதித்தார். அதற்காக அவருக்கு எனது நன்றி.

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களின் முந்தைய நிரலை பார்வையிட்டபோது மலைத்தேன். அப்பாடா! என்ன ஒரு நுட்பம்!! அவரின் நிரலிலிருந்து புதிதாய் பலவற்றை கற்றுக் கொண்டேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

முன் வெளியீட்டுக் கோப்புகளை "கட்டற்ற தமிழ்க் கணிமை" குழுவுக்கு அளித்தபோது முழு ஈடுபாட்டோடு வழுக்களை கண்டறிந்து உடனுக்குடன் சொன்ன ரவி, திவே மற்றும் சேது ஆகிய அன்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அவர்கள் இல்லையேல் இந்த வெளியீடு முழுமை பெற்றிருக்காது.

இனி இந்த வெளியீடு பற்றி:

1) தமிழ் கீ நிரலாக்கத் திட்டத்தின் பெயர் "தமிழ்விசை" என மாற்றப்பட்டுள்ளது.
2) தமிழ்விசையமைப்புகள் வலது சொடுக்கி பட்டியலில் துணைப் பட்டியலாக இணைக்கப்பட்டுள்ளது.
3) தமிழ்விசை 0.2 பதிப்பின் வழுக்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டன.
4) பாமினி, மற்றும் புதிய/பழைய தட்டச்சு விசையமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.
5) குறுக்கு விசைகள் மாற்றப்படுள்ளன : "Alt + F8" லிருந்து "Alt + F12" வரை.
6) குறுக்கு விசைகளை பயனரே தெரிவு செய்து கொள்ள இயலும்.

தமிழ்விசை 0.3யின் xpi கோப்பினை http://tamilkey.mozdev.org/installation.html என்ற சுட்டியிலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். விரைவில் https://addons.mozilla.org/firefox/2994/ என்ற சுட்டியிலும் கிடைக்க வகை செய்யப்படும்.

இந்தப் பதிப்பில் வழுக்கள் இருந்தால் அதனை தமிழ்விசை வழுப் பட்டியலில் சேர்த்திடுங்கள். உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பின்னூட்டமிடுங்கள்.

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி
Google Buzz Logo

சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றி உருவாக்கப்பட்டது.

அதியமான் பயன்படுத்தும் போது சில வரையரைகள் இருந்தன.

அவற்றுள் சில:

  1. உள்நுழைவு(login) தேவைப்படும் வலைத்தளங்களில் பயன்படுத்த இயலாது.
  2. ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
  3. குக்கீஸ்(Cookies) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
இந்த குறைகளை களைய உருவாக்கப்பட்டதே அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி (Firefox Extension). இந்த நீட்சியை ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் மொஸில்லா தளத்திலிருந்து உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் எளிதாய் நிறுவிக்கொள்ளலாம். ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை நிறுவ Admin Rights தேவையில்லை.

இந்த நீட்சியின் மூலம், TSCIIஅல்லது TUNE தகுதரத்திலுள்ள வலைப்பக்கத்தை படிக்கும் போது Right Click செய்து Context Menuவில் Unicode தகுதர மாற்றத்தை தேர்வு செய்வதன் மூலம் எழுத்துரு நிறுவாமலேயே படிக்கலாம்.


இது போலவே Tools Menuவிலிருந்தும் தேவையான தகுதர மாற்றத்தை தேர்வு செய்யலாம்.



இந்த ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை உருவாக்க ஊக்கம் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதியன் பற்றி மேலும் அறிய : http://www.higopi.com/adhiyan/

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.

அதியமான் எழுத்துரு மாற்றி
Google Buzz Logo

இன்றைக்கு பல விதமான "தமிழ்கள்" இணையத்தில் உள்ளன. உதாரணமாக TSCII,TUNE,TAB/TAM,Unicode என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் ஒருங்குறி(Unicode)யை மட்டும் பல இயங்குதளங்கள்(OS), செயலிகள்(applications) ஆகியன எந்த எழுத்துருவும் நிறுவாமலேயே படிக்க கூடிய வசதியைத் தருகின்றன. மற்ற தகுதரங்களை(Encoding Standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும்.

சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்.

இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும், TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றி படிக்கலாம்.

இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை பயன்படுத்தும் வலைத்தள முகவரியை இட்டு, அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் தரத்தை தெரிவு செய்து, "Convert"ஐத் தட்டினால் அந்த தளம் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு தெரியும். தற்சமயம் உள்நுழைவு(login) தேவைப்படும் தளங்களை இந்த மாற்றியில் பார்க்க இயலாது.


மேலும், இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை கொண்ட எழுத்துக்களை (பொங்கு தமிழ் மாற்றியைப் போல) வெட்டி ஒட்டி ஒருங்குறிக்கு மாற்றவும் பயன்படுத்தலாம்.

பொங்குதமிழ் எழுத்துரு மாற்றியால் ஈர்க்கப்பட்டு செய்த இந்த மாற்றிக்காக, பொங்குதமிழ் மாற்றி அளித்த சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும் , இந்த மாற்றி உருவாக்க ஊக்கம் அளித்த முனைவர் நா.கணேசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதியமான் எழுத்துரு மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/adhiyaman/

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.

உமர் பன்மொழி மாற்றி
Google Buzz Logo

நம்மில் பலருக்கு இந்தி பேசத் தெரியும் ஆனால் படிக்கத் தெரியாது. உதாரணமாக BBC இந்தி வலைத்தளத்தில் (http://www.bbc.co.uk/hindi/) உள்ள‌ செய்தியை இந்தி பேச மட்டுமே தெரிந்தவர் புரிந்து கொள்ள தீர்வாக அமைந்ததே உமர் பன்மொழி மாற்றி. இந்தியில் உள்ள அந்த செய்தியை வெட்டி உமர் பன்மொழி மாற்றியில் ஒட்டி "தமிழுக்கு மாற்ற" தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த செய்தியின் இந்தி உச்சரிப்பை தமிழில் படிக்கமுடியும்.

இதே போல, எந்த ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பையும் மற்றொரு மொழியில் மாற்றி படிக்க இயலும்.

மேலும், தட்டச்சிடும் போது வேண்டிய மொழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரே இடத்தில் பல மொழிகளில் தட்டச்சிட முடியும்.

தேனீ இயங்கு எழுத்துருவையும், இன்னும் பல செயலிகளையும், ஆக்கங்களையும் தமிழ்க் கணிமை உலகுக்கு கொடையளித்த உமர் தம்பி அவர்களின் நினைவாக அவர் பெயரை இந்த பன்மொழி மாற்றிக்கு சூட்டியிருக்கிறேன்.

உமர் அவர்களோடு எனக்கு மின்னஞ்சல் தொடர்பு (அவரின் எழுத்துருவை தகடூருக்கு பயன்படுத்த அனுமதி பெறுவது தொடர்பாக) மட்டுமே இருந்தது. தன்னலமற்ற அவரின் அமைதியான தமிழ் கணிமைப் பணிகளை பாராட்ட வரிகளே இல்லை. அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பலர் அவர் குறித்து பேசும் போது, புகழ் விரும்பாத அவர் வாழ்ந்த காலத்தில் நானிருந்ததை பெருமையாய் நினைக்கிறேன்.

இந்த மாற்றியை உருவாக்க ஊக்கம் அளித்த‌ முனைவர் நா.கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/ucedit/Multi.html

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சலிடுங்கள்.

தகடூர் - உங்கள் வலைத்தளத்தில்
Google Buzz Logo

உங்கள் வலைத்தளத்தில் தகடூர் தமிழ் மாற்றி போல ஒரு தமிழ் தட்டச்சுப் பெட்டியை வைக்க வேண்டுமா?

இந்தச் சுட்டியில் உள்ள எளிய வழிமுறைகளில் உள்ளபடி வேண்டிய நிரல் துண்டுகளை உங்கள் வலைப்பக்கத்தில் சேர்ப்பதன் மூலம் தகடூர் தமிழ் மாற்றியை உங்கள் வலைத்தளத்திலேயே செயல்படுத்தலாம்.

இந்த மாற்றியின் நிரலை தனியாய் தரவிறக்கம் செய்து தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்துவோர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவ்வப்போது நிரல் மாற்றம் செய்யும் போது அவர்களுக்கு அறிவிக்க வசதியாய் இருக்கும்.

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

தீவிரவாதிகளாம்...
Google Buzz Logo

Warning:- Content not advisable to children, heart patients and mentally challenged.

மும்பையில் யாரேனும் தும்மினாலும் செய்தியாக்கும் (அட.. கடல் தண்ணி இனிக்குதாம்பா! நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி!) நமது தொலைக்காட்சிகள், இதை ஒரு செய்தியாக பொருட்படுத்தாத‌து ஏன்?

http://207.210.104.162/~yarl/chencholai.asf

இந்த சம்பவம் நடந்தேறிய நாள் முழுதும், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில், அமேரிக்காவில் உள்ள ஏதோ ஒரு மூலையில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், ஒரு முதலை குட்டி வெள்ளையாக இருப்பதை நூறு முறை வாசித்து காட்டினர்.

அட புலிகளைப் பத்தியோ இலங்கை ராணுவத்தை பத்தியோ கூட சொல்ல வேணாம்.. சக தமிழர் சாவு பத்தி் கூடவா முக்கியம் இல்லாம போச்சி? மனிதாபிமானமே இல்லியா? மனசு வலிக்குதுங்க.

தமிழ் மாற்றியில் சில மாற்றங்கள்
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

த‌க‌டூரின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்துள்ளேன். சில‌ பிழைக‌ளை ச‌ரி செய்துள்ளேன், ஒரு வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து.

ச‌ரி செய்ய‌ப்ப‌ட்ட‌ பிழைக‌ள்
1) க‌ர்ச‌ர், த‌ட்ட‌ச்சு செய்யும் வ‌ரியில் நிற்காம‌ல் ப‌த்தியின் க‌டைசியில் நிற்கிற‌து.
2) வ‌ரியின் இடையில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ இய‌ல‌வில்லை.

இப்போது நீங்க‌ள் வ‌ரியின் இடையில் புதிய‌ வார்த்தைக‌ளை த‌ட்ட‌ச்சு செய்ய‌ முடியும். பத்தியின் கடைசிக்கு சென்று கர்சருடன் ஓடிப் பிடித்து விளையாடத் தேவையில்லை :-)

புதிய‌ வ‌ச‌தி
த‌மிழ் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - த‌மிழ் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ Tamil Typewriter (Tamilnet99 பழைய தமிழ் தட்டச்சுப் பலகை வசதி யளனகப - Remington) தெரிவு செய்துகொள்ள‌லாம்.

இந்த மாற்றங்களை அறிவிக்கும் இச் சமயத்திலே ஆரம்ப காலத்தில் நிரலை மேற்பார்வை செய்து வழிநடத்திய சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும், தகடூருக்காக வலைத்தளத்திற்கான இடம் அளித்து உதவிய நண்பர் சாகரன் அவர்களுக்கும், தகடூரின் மாற்றங்களுக்கு யோசனை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ் மாற்றியின் சுட்டி:

http://www.higopi.com/ucedit/Tamil.html

நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ரிஸ்க்
Google Buzz Logo

நானும் ரொம்ப யோசிச்சுப் பாத்தனுங்க. என் மூளைக்கு எட்டலை (இருந்தாத் தானேங்கறீங்களா... அதுவும் சரிதான்)

சரி. எனக்குத்தான் தெரியலையே, தெரிஞ்சவங்க யாரு கிட்டயாவது கேட்டுப் பாக்கலாம்னு கேட்டா, யாருக்குமே தெரியலை. அதனால கடைசியா உங்ககிட்ட கேட்டுடலாம்னு...

நாமெல்லாம் தமிழ் வலைப்பதிவாளர்கள் இல்லியா... அதனால தமிழ்ல பூந்து விளையாடுவோம்னு நம்பி என் கிட்டையும் ஒருத்தர் இந்தக் கேள்விய கேட்டாருங்க.

அது வேற ஒன்னுமில்லீங்க... இந்த ரிஸ்க் அப்படிங்கறாங்களே... (டிஸ்யூம் படத்துல கூட ரிஸ்க் பாஸ்கர்னு கூப்பிடுவாங்களே.. அதுல வர்ற ரிஸ்க் தானுங்க...)



ரிஸ்க்ன்னா தனித்தமிழ்ல என்னாங்க...

தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்
Google Buzz Logo

தமிழ் வலைப்பூ உலகம் பரிணாம மாற்றத்தை சந்தித்துக் கொண்டுள்ளது.

இதை பரிணாம வளர்ச்சி என குறிப்பிட முடியாது.

ஏனெனில் :

சிலகாலம் முன் வரை வலைப்பூக்களில் கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ, புகைப்படமோ, குறும்பட சுட்டிகளோ இடப்பட்டால் அத்தகைய இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் வலைப்பதிவாளர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்.

உதாரணமாக, வருகையாளர் விரும்பிக் கேட்டதற்காக ஓய்வற்ற அலுவல்களுக்கிடையே கிடைத்த நேரத்தில் கதை, கவிதை ஆகியவை படைத்த வலைப்பதிவாளர்கள் பலர்.

பிறகு, வலைப்பூக்களை கொண்டு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டன. உதாரணமாக ஆடியோ ப்ளாகிங் மற்றும் ப்ளாஷ் படங்களை சொல்லலாம்.

இப்போதெல்லாம் வேறு வகையான இடுகைகளே வரவேற்பினை பெறுகின்றன. உள்வட்ட/வெளிவட்ட மனப்பான்மையும் தனிமனித துவேஷங்களும் மலிந்துவிட்டன. சிரங்கு பிடித்த கையை சொரிந்து சொரிந்து இன்பம் காண்பது போல (கடுமையான வார்த்தைப் பிரயோகத்திற்கு வருந்துகிறேன்) மேலும் மேலும் இத்தகைய இடுகைகளைத் தேடித் தேடி படிப்பதில் இன்பம் காணும், ஆதரித்தும் எதிர்த்தும் குழு சேர்த்தும் சேர்ந்தும் மகிழும் மனங்களை வக்கிர மனங்களாகவே நான் பார்க்கிறேன்.

இத்தகைய சூழலிலும் நன்மனம் கொண்டோர் பலர் உள்ளனர். இத்தகையோர் இடும் ஆக்கபூர்வமான (கதை, கவிதை, கட்டுரை) இடுகைகள், வேறு வகையான இடுகைகளுக்கு இடையே புதைந்து காணாமலேயே போய் விடுகின்றன அல்லது திசை திருப்பப்பட்டு வேறு வகையான இடுகைகளாக மாற்றப்பட்டுவிடுகின்றன.

துவேஷங்களை மனதில் கொண்டு செயல்படுவோருக்கு நான் சொல்வதெல்லாம்:

புத்திக்கு தகுந்த சுகம்.

குறைந்தபட்சம் துவேஷங்களையும் தனிமனித தாக்குதல்களையும் விரும்பாத வலைப்பதிவர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு சிரமம் தராமல் உங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.

புதிய வலைப்பதிவர்களுக்கு என் வேண்டுகோள்:

தயவு செய்து ஆக்கபூர்வமாய் வலைப்பதியுங்கள்.

பி.கு:
1) மேலுள்ள இடுகையில் கூறப்பட்டவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல.

2) இந்த இடுகைக்கு பின்னூட்டங்கள் அவசியமில்லை என நான் கருதியதால் பின்னூட்டப் பெட்டி வசதி எடுக்கப்பட்டது. அவசியமாய் கருத்து தெரிவித்தே ஆக வேண்டும் எனக் கருதுவோர் என் மின்னஞ்சல் முகவரிக்கு (higopi[at]gmail[dot]com) உங்கள் கருத்துக்களை அனுப்பலாம். (உங்கள் கருத்தை இந்த இடுகையில் பின்னூட்டமாக பதிப்பிக்க வேண்டுமானால் அதையும் மின்னஞ்சலில் குறிப்பிடவும்)

மேட்ரிக்ஸ்
Google Buzz Logo

படப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சின்னு கோடானுகோடி வருகையாளர்கள் (ஹி..ஹி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா) கேட்டுக் கொண்டதால் இந்த இடுகை.

ஏஜென்ட் ஸ்மித்


மேட்ரிக்ஸ் குழு


(எளிதில் தொற்றும் திறமையுள்ள) ஏஜென்ட் ஸ்மித்கள்


மேட்ரிக்ஸ் புரட்சி(Revolution) குழு


நிஜம் அறியாமல் மாயையில்...


பி.கு: வலைப்பதிவுலகின் தற்போதைய நிகழ்வுகளையோ நபர்களையோ மேற்கண்ட படங்கள் நினைவூட்டினால் அது தற்செயலானதே. உள்குத்து ஏதுமில்லை என தெரிவித்துக் கொள்கிறேன்

வேலை.. வேலை.. வேலை..
Google Buzz Logo

சக பணியாளர்களை பணிநீக்கம் செய்துவரும் நிறுவனத்தில் வேலை பயத்தில் சிலர் உதிர்த்தது:

சூர்யா:தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம். என்னையும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கன்னு சொன்ன அது தன்னம்பிக்கை! என்னை மட்டும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கனு சொன்னா அது தலைக்கணம்!

வடிவேல்:எவ்வளவு நேரந்தான் வேலைல இருக்கற மாதிரியே நடிக்கறது.
நீங்க அவங்கள ஒன்னுமே பண்ணலையா?
வடிவேல்: எத்தினி வாட்டி வேலைய விட்டு தூக்கி்னாலும் வேலைக்கு வர்றான்டா.. இவன் ரொம்ப நல்லவன்னீட்டாம்மா..

ரஜினி: கண்ணா, எப்ப வேலைக்கு வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்ட்டா வந்துடுவேன்.

அதிகமா வேலை செஞ்ச பொம்பளையும் கம்மியா சம்பளம் வாங்கின ஆம்பளையும் ஒரு கம்பெனியில இருந்ததா சரித்திரம் கெடியாது.

(அதெல்லாம் இருக்கட்டும் சார்.. நூறு பேரை வேலைய விட்டு தூக்கனும்னா என்ன செய்யலாம் சார்?)

கலைஞர்: உடன்பிறப்பே, கவலை தோய்ந்த உன் முகம் என் கண்ணை விட்டு அகலாத வேளையிலே உனது வேலை பற்றி அம்மையாரின் அராஜக ஆட்சி எடுத்த இந்த முடிவுக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இந்த இடத்தில் உனக்கு இடமில்லை என்று அம்மையார் சொல்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த போது மட்டுமல்ல எப்போதும் என் இதயத்திலே உனக்கு இடமுண்டு என்பதை நீ கருத்தில் கொள்வாய்.

குங்குமம் விளம்பரம்: கேன்டீன் சாப்பாடுன்னா சும்மாவா? குமுறுகிறார் கொழுக் மொழுக் கணிப்பொறியாளர் கனிகா. இந்த வாரமாவது வேலை இருக்குமா? மென்பொருள் பொறியாளர்கள் தூக்கம்!
வாங்கிவிட்டீர்களாாாாாா!

நாலடியார்
Google Buzz Logo

நாலு பேரு கூட வேடிக்கை பாத்துட்டு இருந்த என்னிய நாற்சந்தியில எறக்கி விட்டுட்டாரு கைப்புள்ள. அப்போலேர்ந்து எல்லாமே நாலு நாலாத் தெரியுதுங்க.

நான் பார்த்த நான்கு பணிகள்

1. மின்பொறியாளன்
2. வன்பொறியாளன்
3. மென்பொறியாளன்
4. மேலாளன் (மேல் மாடி காலி :-) )

மீண்டும் மீண்டும் பார்த்த நான்கு திரைப்படங்கள்

1. தில்லுமுல்லு
2. தம்பிக்கு எந்த ஊரு
3. பம்மல் K சம்பந்தம்
4. பஞ்சதந்திரம்

வசித்த நான்கு இடங்கள்

1. விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் (கனவுலதான் :-P )
2. சிங்காரச் சென்னை
3. நியுயார்க் (9/11க்கு முன்னாடியே எஸ்கேப்)
4. பாக்நகர் (ஹைத்ராபாத்துங்கோவ்...)

விரும்பி பார்க்கும் நான்கு தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள்

1. Pogo - Just For Laugh Gags (எப்பவுமே சூப்பர்)
2. விஜய் டிவி லொள்ளு சபா (இப்ப வர வர அவ்வளவு நல்லாயில்ல)
3. விஜய் டிவி கலக்கப் போவது யாரு(என்னா டேலண்ட்.. எங்கெங்கையோ இருந்து வந்து கலக்குறாங்கபா)
4. Friends (செம காமெடிபா. புடிச்ச Characters - Joey மற்றும் Pheebee)

ஊர் சுற்றிய நான்கு இடங்கள்

1. ஒகேனக்கல் (நம்மூருக்கு பக்கமுங்க)
2. சபரிமலை (என்னை கேட்டிங்கன்னா பக்தர்கள் மட்டுமில்ல.. எல்லோரும் போகவேண்டிய பயணம் இது!)
3. Times Square நியுயார்க் (செம கலர்பா)
4. WTC நியுயார்க் (இனிமே யாரும் பாக்க முடியாது :-( )

விருப்பமான உணவு வகைகள் நான்கு

1. காராபூந்தியை தயிரில் கலந்து (என்ன பேருங்க இதுக்கு...)
2. இனிப்பு வகைகள் (எல்லாமே)
3. நூடுல்ஸ்
4. மீனும் முட்டையும்

பிடித்த விளையாட்டுக்கள் நான்கு

1. சேஸ் (சரியாப் படிங்கப்பா... ச்சே... மனசெல்லாம் அழுக்கு...)
2. கேரம் போர்டு (நாம எப்பவுமே ஜெயிக்கற கட்சிப்பா)
3. கில்லி (என்னா பெரிய கிரிக்கெட்டு.. நாங்கல்லாம் ஆடினா..)
4. வாலிபால் (பின்னே.. நக்சலைட்டுங்களையே சாதுவாக்கின விளையாட்டாச்சே!)

அழைக்க விரும்பும் நான்கு வலைப்பதிவாளர்கள்

1. பினாத்தல் சுரேஷ்
2. என்றென்றும் அன்புடன் பாலா
3. மாயவரத்தான்
4. துளசியக்கா

அப்பாடா ஒரு வழியா நம்ம வேலை முடிஞ்சது. இனி படிக்கறவுங்க பாடு..

சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்
Google Buzz Logo

ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சுனாமிக்காக நிதி திரட்டப் பட்டபோது எதிர்பார்த்ததை விட அதிகமாய் பொருளும் பணமும் திரட்டக் கிடைத்தது. அத்தொண்டு நிறுவனத்தால் சுனாமி நிவாரணப் பணிகளை சிறப்பாய் செய்ய முடிந்தது.

அதே நிறுவனம் ஒரு தனிப்பட்ட நபரின் அத்தியாவசியத் தேவைக்காக நிதி திரட்ட முற்பட்டது. அந்த நபரின் வேண்டுகோள் உண்மையானதா எனக் கண்டறிய நான் பணிக்கப்பட்டேன்.

ஸ்ரீதரன் என்ற பெயருடைய அவர் ஒரு 55 வயதான நபர். பல்வலி காரணமாய் துடித்த அவருக்கு அனைத்து பற்களும் நீக்கப்பட்டது. மீண்டும் DENTURES என்று சொல்லக்கூடிய பொய் பற்கள் கட்ட சுமார் 5000 ரூபாய்கள் செலவாகும். பொய் பற்கள் கட்டாமல் அவரால் சரிவர உணவருந்த முடியாது. அவருக்கு DENTURES பொருத்தும் மருத்துவர் தனது சேவைக்கான கட்டணத்தை அறவே விலக்கி மொத்த செலவை 4300 ரூபாய்கள் ஆக குறைத்தார். ஒரு தனியார் வழக்கறிஞரிடம் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் அவருக்கு இது மிகப் பெரிய தொகை.

இந்த உண்மைகளை உறுதிசெய்த நான் எனது பங்காக ஒரு சிறு தொகையை நேரடியாய் அவரிடமே அளித்து இந்த நற்பணிக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் மேலும் நிதி திரட்ட சொன்னேன். ஆனால் சுனாமிக்கு என்றவுடன் அள்ளித்தந்த அனைவரும் இந்த தனிப்பட்ட நபரின் பல்வலிக்கு செவி சாய்க்கவில்லை.

சுனாமி என்பது ஈடு செய்ய இயலாத மிகப் பெரிய இழப்புதான். ஆனால் பல்வலியும் ஒரு இழப்புதானே?

அந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த நற்பணிக்கு நிதி திரட்ட இயலாத நிலையில் இன்னும் நிதியுதவி வரும் எனக் காத்துக் கொண்டிருக்கும் அந்த பல்வலிக்காரருக்கு உதவ உங்களால் முடியும்.

இந்த நற்பணிக்கு பண உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு[higopi(at)gmail(dot)com] தனிமடல் இடவும்.

நன்றி

ராஜ் FM இணைய வானொலி
Google Buzz Logo

ராஜ் FM நிறுவனம், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இணையம் மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்ய திட்டமிட்டு, முதற்கட்டமாய் தமிழ் திரைப்பட பாடல்களை http://www.rajfm.com/ மூலமாக கடந்த தைத் திங்கள் முதல் ஒலிபரப்பி வருகிறது.

ஒலியின் தரம் வியக்கத்தக்க வகையில் அருமையாய் இருக்கிறது. (எனது இணைய இணைப்பு அகலப்பட்டை. இன்னும் சாதாரண இணைய இணைப்பில் எவ்வாறு இருக்கிறது என்று சரிபார்க்கவில்லை)

இந்த 24x7 ஒலிபரப்பாகும் இந்த இணைய வானொலியில், நேயர் விருப்ப பாடல் நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி காலை 9:00 மணி முதல் இரவு10:00 வரை ஒலிபரப்பப்படுகின்றன. இரவு10:00 முதல் காலை 9:00 மணி வரை பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒலிபரப்ப படுகின்றன.

நேயர் விருப்ப பாடல்களை:

1) http://www.rajfm.com/request.php என்ற சுட்டியின் மூலமாகவோ
2) Google உரையாடலில் rajfmlive(at)gmail(dot)com மூலமாகவோ
3) Yahoo உரையாடலில் rajfmlive(at)yahoo(dot)com மூலமாகவோ
4) MSN உரையாடலில் live(at)rajfm(dot)com மூலமாகவோ

சமர்பிக்கலாம்.

உரையாடலில் சமர்ப்பிக்கும் போது ஏறகுறைய தொலைபேசியில் பேசிய உணர்வு ஏற்படுகிறது

இனிய அதிர்ச்சி: விருப்பப் பாடலுக்காக நான் உரையாட தொடர்பு கொண்டபோது என்னோடு உரையாடியது வேறு யாருமல்ல. விபாகை! அன்புடன் குழும அன்பர்! இவர் ராஜ் FM நிறுவனத்தில் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

இந்த முயற்சி வெற்றி பெற ராஜ் FM நிறுவனத்தின் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது மண்ணின் மணம் வீசும் கிராமியப் பாடல்களை ஒலிபரப்பும் "தமிழ் மண்ணிசைப் பாடல்கள்" நிகழ்ச்சி.

இரண்டு ஜோக்குகள்
Google Buzz Logo

ஒன்றுக்கொன்று தொடர்புடையவையோ இல்லாதவையோ

இந்தப் பதிவில் Blogger குளறுபடிகள் காரணமாய் இதை மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்துள்ளேன்.

*********************************

ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார்.

அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்

"போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு

"அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன்

"என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு

*********************************

ஒரு மருத்துவர் மனநோயாளியைப் பரிசோதிச்சிக்கிட்டு இருந்தாரு

ஒரு வட்டம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னான்

அதிர்ந்து போன அவர் "ச்சே! என்ன ஆளுய்யா நீ... இவ்வளவு அசிங்கமா சிந்திக்கறே"ன்னாரு

உடனே அவன் சொன்னான் "நீ மட்டும் என்ன.. நானும் அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்க்கேன் அசிங்கம் அசிங்கமா வரைஞ்சிக்கிட்டு இருக்கே"