மொழிமாற்றிகள் 3.2 வெளியீடு
அனைவருக்கும் வணக்கம்.
தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிரலில் சில மாற்றங்கள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.2 வெளியிடப்படுகிறது.
இந்த வெளியீட்டில் உள்ள புதிய வசதிகள்
- பாமினி தட்டச்சு பலகை - தமிழக அரசு அலுவலகங்களிலும் புலம்பெயர் தமிழர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் பாமினி தட்டச்சு அறிந்தோர் எளிதில் தட்டச்சு செய்ய வசதியாக இந்த பாமினி தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ளலாம்.
- வானவில் தட்டச்சு பலகை - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானவில் தட்டச்சு அறிந்தோர் எளிதில் தட்டச்சு செய்ய வசதியாக இந்த வானவில் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ளலாம்.
- தமிழ் மாடுலார் தட்டச்சு பலகை - சில அச்சு ஊடக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மாடுலார் தட்டச்சு அறிந்தோர் எளிதில் தட்டச்சு செய்ய வசதியாக இந்த தமிழ் மாடுலார் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ளலாம்.
மொழி மாற்றிகளின் சுட்டி:
- உமர் (பன்மொழி மாற்றி)
- தகடூர் (தமிழ்)
- கோதாவரி (தெலுங்கு)
- காவேரி (கன்னடம்)
- சேரன் (மலையாளம்)
- காமராஜ் (ஹிந்தி)
- கலிங்கா (ஒரியா)
- காந்தி (குஜராத்தி)
- மஹாகவி (பெங்காலி)
- குரு(பஞ்சாபி)
நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன