இரண்டு ஜோக்குகள்
Google Buzz Logo

ஒன்றுக்கொன்று தொடர்புடையவையோ இல்லாதவையோ

இந்தப் பதிவில் Blogger குளறுபடிகள் காரணமாய் இதை மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்துள்ளேன்.

*********************************

ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார்.

அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்

"போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு

"அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன்

"என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு

*********************************

ஒரு மருத்துவர் மனநோயாளியைப் பரிசோதிச்சிக்கிட்டு இருந்தாரு

ஒரு வட்டம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னான்

அதிர்ந்து போன அவர் "ச்சே! என்ன ஆளுய்யா நீ... இவ்வளவு அசிங்கமா சிந்திக்கறே"ன்னாரு

உடனே அவன் சொன்னான் "நீ மட்டும் என்ன.. நானும் அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்க்கேன் அசிங்கம் அசிங்கமா வரைஞ்சிக்கிட்டு இருக்கே"

5 கருத்து(க்கள்):

தகடூர் கோபி(Gopi) |

இதுவரை வந்த பின்னூட்டங்கள்:

ஜனவரி 29, 2006 9:57 PM சுரேஷ் (penathal Suresh)

Thalai, joke super; athile vara characters supero super!@!

ஜனவரி 29, 2006 10:10 PM முகமூடி
யப்பா, எவ்ளோ நாளாச்சி.. இருக்கட்டும் இருக்கட்டும். தப்பில்ல ;)

*

தொடர்புள்ளது/இல்லாதது பதிவு வந்தும் ரொம்ப நாளாச்சி

*

அப்புறம் இப்பதிவு பற்றி : ஹிஹி ;)

ஜனவரி 29, 2006 10:26 PM குமரன் (Kumaran)

சரி கோபி. ஒரு ஜோக் இங்க இருக்கு. இன்னொன்னு எங்கே? அது தான் இதுன்னு கடுப்படுச்சுடாதீங்க :-)

ஜனவரி 29, 2006 10:36 PM கோபி(Gopi)

குமரன்.. இன்னொன்னை கரகாட்டக்காரன்ல செந்தில் பண்ண மாதிரி Blogger முழுங்கிடுச்சிங்க.. இப்ப மறுபதிவு செஞ்சிருக்கேன்

ஜனவரி 29, 2006 11:46 PM Chameleon - பச்சோந்தி

எனக்கு ஒண்ணுதான் ஜோக்காவே தெரியுது. இன்னொண்ணு கத மாதிரியில்ல இருக்கு.

நல்லாத்தான் இருக்கு.

ஜனவரி 30, 2006 12:07 AM enRenRum-anbudan.BALA

கோபி வாங்க, வாங்க !!!

ரொம்ப நாள் கழிச்சு வந்தவுடன் "A" ஜோக்கா ? நடத்துங்க ;-)

ஜனவரி 30, 2006 1:11 AM Agent 8860336 ஞான்ஸ்

படம் போட்டு எழுதாத பதிவுகள் முழுமை அடைவதில்லை!

அட்லீஸ்ட் அந்த வட்டம் சதுரம் முக்கோணம் படங்கள் (மட்டுமாச்சும்) போட்ருக்கலாம்ல!

;-)

ஜனவரி 30, 2006 8:04 AM கோபி(Gopi)
பினாத்தல் சுரேஷ்,

நன்றி. (அப்றம்... உலகத்துல ஒரே தல நம்ம அஜீத்து தானுங்க. நாமெல்லாம் வாலுங்க தான் :-P)

முகமூடி

//யப்பா, எவ்ளோ நாளாச்சி.. இருக்கட்டும் இருக்கட்டும். தப்பில்ல ;)//

அலுவலக வேலை தான் இவ்வளவு நாள் வலை பதியாததுக்கு காரணம்ன்னா நம்பவா போறீங்க.. ம்.. ஆகட்டும்.. ஆகட்டும்.. (அப்றம்.. தமிழில் தட்டச்சு செஞ்சி ரொம்ப நாளாச்சிங்களா.. உங்க பேரை தட்டச்சு செஞ்சா முகமீடி, முகமூட், முகமூடுன்னெல்லாம் தப்பு தப்பா அடிக்க வருது :-) )

பச்சோந்தி,

கதைன்னீங்கன்னா கதைங்க.. இல்லைன்னா இல்லீங்க. அதே மாதிரி தொடர்பிருக்குன்னா இருக்குங்க, தொடர்பில்லைன்னா இல்லீங்க.

எ.அ. பாலா,

//ரொம்ப நாள் கழிச்சு வந்தவுடன் "A" ஜோக்கா ? நடத்துங்க ;-)//

அடக்கடவுளே! என்னங்க நீங்க ரெண்டாவது ஜோக்ல வர்ற மாதிரியே கேக்கறீங்க.. (அதுல நீங்க மருத்துவரா.. நோயாளியா :-P)

ஞான்ஸ்,

வந்தவுடனே படம் போட்டா படம் காட்டுறான் பாருன்னு தப்பா பேசுவாங்கல்ல.. :-)

(ஹூம்..இந்த சமூகம் உன்னைய தப்பாவே நெனைக்குதுடா கோபி)


பரஞ்சோதி |

வாங்க கோபி,

எப்படி இருக்கீங்க, பார்த்து ரொம்ப நாள் ஆகுது. வாழ்க்கை எப்படி போகுது.

அன்புடன்
பரஞ்சோதி


தகடூர் கோபி(Gopi) |

பரஞ்சோதி,

வாழ்க்கை அருமையா போகுதுங்க. வலைப்பதிவுகள் பக்கமா இப்பத்தான் வரமுடியுது.

இந்த இடைப்பட்ட காலத்தில் படிக்கத் தவறிய சிறுவர் பூங்கா, ஜென் கதைகள், காமராஜ்101 இன்னும் பல பதிவுகளை இனிமேல்தான் தொடர்ந்து படிக்கனும்.


Murali |

Hello Gopi

Good to see you back after a while :).

Keep blogging.
Murali


மஞ்சூர் ராசா |

நல்ல ஜோக்குகள் சிரிக்கவைத்தன. ஆனால் கொஞ்சம் பழைய ஜோக்குகள் என நினைக்கிறேன்.