ராஜ் FM இணைய வானொலி
Google Buzz Logo

ராஜ் FM நிறுவனம், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இணையம் மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்ய திட்டமிட்டு, முதற்கட்டமாய் தமிழ் திரைப்பட பாடல்களை http://www.rajfm.com/ மூலமாக கடந்த தைத் திங்கள் முதல் ஒலிபரப்பி வருகிறது.

ஒலியின் தரம் வியக்கத்தக்க வகையில் அருமையாய் இருக்கிறது. (எனது இணைய இணைப்பு அகலப்பட்டை. இன்னும் சாதாரண இணைய இணைப்பில் எவ்வாறு இருக்கிறது என்று சரிபார்க்கவில்லை)

இந்த 24x7 ஒலிபரப்பாகும் இந்த இணைய வானொலியில், நேயர் விருப்ப பாடல் நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி காலை 9:00 மணி முதல் இரவு10:00 வரை ஒலிபரப்பப்படுகின்றன. இரவு10:00 முதல் காலை 9:00 மணி வரை பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒலிபரப்ப படுகின்றன.

நேயர் விருப்ப பாடல்களை:

1) http://www.rajfm.com/request.php என்ற சுட்டியின் மூலமாகவோ
2) Google உரையாடலில் rajfmlive(at)gmail(dot)com மூலமாகவோ
3) Yahoo உரையாடலில் rajfmlive(at)yahoo(dot)com மூலமாகவோ
4) MSN உரையாடலில் live(at)rajfm(dot)com மூலமாகவோ

சமர்பிக்கலாம்.

உரையாடலில் சமர்ப்பிக்கும் போது ஏறகுறைய தொலைபேசியில் பேசிய உணர்வு ஏற்படுகிறது

இனிய அதிர்ச்சி: விருப்பப் பாடலுக்காக நான் உரையாட தொடர்பு கொண்டபோது என்னோடு உரையாடியது வேறு யாருமல்ல. விபாகை! அன்புடன் குழும அன்பர்! இவர் ராஜ் FM நிறுவனத்தில் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

இந்த முயற்சி வெற்றி பெற ராஜ் FM நிறுவனத்தின் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது மண்ணின் மணம் வீசும் கிராமியப் பாடல்களை ஒலிபரப்பும் "தமிழ் மண்ணிசைப் பாடல்கள்" நிகழ்ச்சி.