அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி
Google Buzz Logo

சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றி உருவாக்கப்பட்டது.

அதியமான் பயன்படுத்தும் போது சில வரையரைகள் இருந்தன.

அவற்றுள் சில:

  1. உள்நுழைவு(login) தேவைப்படும் வலைத்தளங்களில் பயன்படுத்த இயலாது.
  2. ஜாவாஸ்கிரிப்ட்(JavaScript) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
  3. குக்கீஸ்(Cookies) பயன்படுத்தும் சில தளங்கள் சரியாக பார்க்க இயலவில்லை.
இந்த குறைகளை களைய உருவாக்கப்பட்டதே அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி (Firefox Extension). இந்த நீட்சியை ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் மொஸில்லா தளத்திலிருந்து உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் எளிதாய் நிறுவிக்கொள்ளலாம். ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை நிறுவ Admin Rights தேவையில்லை.

இந்த நீட்சியின் மூலம், TSCIIஅல்லது TUNE தகுதரத்திலுள்ள வலைப்பக்கத்தை படிக்கும் போது Right Click செய்து Context Menuவில் Unicode தகுதர மாற்றத்தை தேர்வு செய்வதன் மூலம் எழுத்துரு நிறுவாமலேயே படிக்கலாம்.


இது போலவே Tools Menuவிலிருந்தும் தேவையான தகுதர மாற்றத்தை தேர்வு செய்யலாம்.



இந்த ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியை உருவாக்க ஊக்கம் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதியன் பற்றி மேலும் அறிய : http://www.higopi.com/adhiyan/

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

Use Padma
Padma supports following font encodings,
* TSCII
* TAM
* TAB
and fonts uses in the following
* Vikatan (same as TAM)
* Kumudam (same as TAM)
* Dinamalar
* Dailythanthi

TUNE/TANE is not currently supported by padma.


தகடூர் கோபி(Gopi) |

சரவணன்,

பத்மா நீட்சி பல மொழிகளுக்கானது, அதியன் நீட்சி தமிழுக்காக எளிமை படுத்தப்பட்டது. இரண்டின் context menuவினைப் பார்த்தாலே இது புரியும்

நன்றி


பெயரில்லா |

Yes Padma supports all major languages. That is the greatest strength of Padma. Padma has the option of disabling languages. If you dont want Telugu, Kannada or any other languages then you can disable in the Padma preferences dialog box.

One of the core unix philosophy is
Don't reinvent the wheel. If there's already a tool that does what you want to do, use it. If you need to extend its functionality, script it with another tool or tools.

So my request is it to join Padma project to improve it instead of duplicating the same work in a different tool.


தகடூர் கோபி(Gopi) |

சரவணன்,

பத்மா 0.4.9 நீட்சியை பயன்படுத்திப் பார்த்துள்ளேன். பத்மா நீட்சியில் நீங்கள் சொல்வது போல தமிழ் மட்டும் தெரிவு செய்து பயன்படுத்த இயலும் என்பதை அறிவேன்.

நீங்கள் சொல்வது போல அதியன், பத்மாவின் "Reinventing Wheel" அல்ல. பத்மாவின் செயல்பாடுகளும் அதியனின் செயல்பாடுகளும் வேறுபட்டவை.

உதாரணமாக, அதியனில் ஒரு முறை வேண்டிய தகுதர மாற்றம் செய்ய தெரிவு செய்துவிட்டால் தொடர்ந்து வரும் பக்கங்களிலும் அனைத்து கீற்று(Tab)க்களிலும் அம்மாற்றம் நடப்பில் இருக்கும். பத்மாவில் வலது சொடுக்கி(Rigth Click context menu) பின் வேண்டிய தகுதர மாற்றம் செய்ய வேண்டும் அல்லது வலைப்பக்க முகவரியை தானியங்கு மாற்றப் பட்டியலில் இடவேண்டும். பத்மாவில் தெரிவு செய்த வரிகளை மட்டும் தகுதர மாற்றம் செய்ய இயலும். ஆனால் அதியனில் தகுதர மாற்றம் முழு பக்கத்துக்கு மட்டுமே நிகழும். இது போல பல வேறுபாடுகளைச் சொல்லலாம்.

மேலும். இத்தகைய வேறுபாடுகளையும் அடுத்த பதிப்புக்கான திட்டங்களையும் நோக்கும் போது பத்மாவும் அதியனும் வேறு திசைகளில் பயனிப்பதை அறிய இயலும்.

பத்மாவின் அடுத்த பதிப்பில் எனது பங்கு தேவைப்படுமானால் நிரலாக்கத்தில் என்னை இணைத்துக் கொள்ளது குறித்து எனக்கு மாறுபட்ட கருத்தும் ஏதும் இல்லை.

பத்மாவும் அதியனும் வெவ்வேறு என்பதை எனக்குத் தெரிந்த அளவில் விளக்கிவிட்டேன் என நினைக்கிறேன்.

நன்றி.