அதியன் 2.0.2 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.2ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) TSCII -> Unicode மாற்றத்தில் ஒரு சிறிய வழு சரிசெய்யப்பட்டது.
2) ᮯᮯ போன்ற (Character Encoding -> UTF8 என்று வைத்த பின்னும்) படிக்க இயலாத எழுத்துக்களை மாற்றி படிக்க முடியும்.
(புது ப்ளாக்கரில் இந்த வழுவை சரி செய்ய எழுதிய நிரலில் சிறு மாற்றம் செய்து இணைத்துவிட்டேன் )

இந்த மாற்றங்கள் அதியமான் மாற்றியிலும் சேர்க்கப்பட்டுவிட்டன

இந்த வெளியீடு கூடிய விரைவில் மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். அப்போது ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

1 கருத்து(க்கள்):

கோபி(Gopi) |

SSL பயன்படுத்தும் (https:// என்று ஆரம்பிக்கும்) வலைத்தளங்களில் அதியனைப் பயன்படுத்தும் போது தெரிவு செய்த தகுதர மாற்றம் நிகழ்வதில்லை.

ஃபயர்பாக்ஸின் பாதுகாப்பு விதிகளின் காரணமாய் இது ஏற்படுகிறது. இப்போதைக்கு இந்த வழு குறித்து தொழில்நுட்ப வரையரை காரணமாய் ஒன்றும் செய்ய இயலாது.