வெளையாட்டுப் புள்ளயா நீங்க?
Google Buzz Logo

வலைப் பதியறவங்களே, வலை மேயறவங்களே,

வலைப் பதியற, வலை மேயற நேரம் போக தமிழ்ச் சேவையெல்லாம் செஞ்சி களைச்சி போயிருப்பீங்க. இதுல சில பேர் என்ன செய்யறதுன்னே தெரியாம சும்மா ஒக்காந்து யாரை வம்புக்கு இழுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க. அட, ரொம்ப போரடிக்குதா? வாங்க சும்மா ஒரு விளையாட்டு ஆடிட்டு வருவோம்.

இது வரைக்கும் http://www.higopi.com/ வலைத்தளத்துக்கு மொழி மாற்றிகள், எழுத்துரு மாற்றி ஆகியவற்றை பயன்படுத்தவும், தரவிறக்கவும் மட்டுமே வந்திருப்பீங்க. இனி அங்கே விளையாடவும் வரலாம்.

புதிதாய் சேர்க்கப்பட்டுள்ள http://www.higopi.com/games/ பகுதியில் இப்போதைக்கு Tic-Tac-Toeனு ஒரு விளையாட்டுக்கு நிரல் எழுதி சேர்த்திருக்கேன். Tetris, Snake போல இன்னும் சில விளையாட்டுக்களைச் சேர்க்கலாம்னு இருக்கேன்.

பின்னூட்டத்தில் பொன்ஸ் அளித்த யோசனைப்படி தமிழ் விளையாட்டுக்களை சேர்க்கலாம்னு இருக்கேன்

முடிஞ்சா Sudoku போன்ற விளையாட்டுக்களையும் சேர்க்கலாம்னு நெனைச்சிருக்கேன். ஏற்கனவே இணையத்தில் இது போன்ற விளையாட்டுக்களுக்கு இருக்கும் நிரல்களை சேர்க்காமல் நானே நிரல் எழுதிச் சேர்க்க நினைப்பதால் கொஞ்சம் தாமதமாகலாம்.

விளையாடிப் பாருங்க. உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு ஏதும் இருந்தா சொல்லுங்க. இந்தப் பகுதியில சேர்த்திடலாம்.

6 கருத்து(க்கள்):

பொன்ஸ்~~Poorna |

நேயர் விருப்பம்: கில்லி கோலி, கல்லாங்காய், பல்லாங்குழி?? ;)

டெட்ரிஸ், டிக் டாக் டோ எல்லாம் கொடுக்க நிறைய சைட் இருக்கே..


தகடூர் கோபி(Gopi) |

பொன்ஸ்,

அட ஆமாங்க, இது எனக்குத் தோனவேயில்லை...

சரி உங்க விருப்பப்படி தமிழ் விளையாட்டுக்களை சேர்க்க முயற்சிக்கிறேன்.

பல்லாங்குழியை JavaScriptல் செய்ய முடியும். மத்ததுக்கெல்லாம் Flash தான் சரிவரும். ;)

இன்னும் வேற விளையாட்டுக்கள் இருந்தா சொல்லுங்க.


வடுவூர் குமார் |

இன்னும் சில கட்டங்கள் அதிகமாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.


தகடூர் கோபி(Gopi) |

//இன்னும் சில கட்டங்கள் அதிகமாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.//

அதுக்கென்ன, தாராளமா செய்யலாம் 5x5 போதுங்களா? இன்னும் ஓரிரு நாட்களில் செஞ்சிடுறேன்.


வடுவூர் குமார் |

போதும் என்று நினைக்கிறேன்.
இதெல்லாம் எப்படி பண்ணுகிறீர்கள் என்று போடுங்களேன்,தெரிஞ்சுகிறோம்.
இப்போது தான் உங்கள் ஜாவா பகுதிக்கு போய் வந்தேன்.
நன்றி


தகடூர் கோபி(Gopi) |

வடுவூர் குமார்,

இந்த விளையாட்டுக்கள் எல்லாமே JavaScript என்பதால் வலைப்பக்கத்தை "View -> Page Source" செய்து பார்த்தாலே விளங்கும். Tic-Tac-Toeக்கான நிரல் இங்கே கிடைக்கும்.

பிற்காலத்தில் Flashஐ கொண்டு விளையாட்டுக்களை செய்யும் போது மூலநிரலையும் கண்டிப்பாக தேவைப்படுவோர் அனைவருக்கும் அளிக்கிறேன்.