ஃபயர்ஃபாக்ஸ் 3 பதிவிறக்க உலக சாதனை தினம் 18 ஜூன் 2008 - பங்குகொள்வீர்!
Google Buzz Logo

நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ் ஆர்வலரா? ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க வேண்டுமா? உங்களால் அதற்கு உதவ முடியும்.

ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபயர்ஃபாக்ஸ் 3.0 வெளியீட்டை இன்று (18 ஜூன் 2008) பதிவிறக்க வகை செய்திருக்கிறது. ஒரே நாளில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் சாதனையை படைக்க இந்நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கு உங்களால் உதவ முடியும். இந்திய நேரம் 18 ஜூன் 2008 இரவு 11:46க்குள் http://www.spreadfirefox.com/en-US/worldrecord என்ற சுட்டியிலிருந்து ஃபயர்ஃபாக்ஸ் 3 ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் கணினிகளில் நிறுவிக் கொள்ளுங்கள்.

ஃபயர்ஃபாக்ஸ் உலக சாதனை படைக்க நீங்களும் பங்கு பெறுங்கள்.

10 கருத்து(க்கள்):

கோபி(Gopi) |

பின்னூட்டக் கயமை.


உண்மைத் தமிழன்(15270788164745573644) |

ஹீரோ ஸாரே..

சவுக்கியந்தானா..?

'கோபியரெல்லாம்' பின்னூட்டக் கயமைத்தனம் பண்ற அளவுக்கு ஆகிப் போச்சா..?

நாங்கள்லாம் இருக்கோம்.. ஞாபகத்துல வைச்சிக்கிட்டா இப்படியெல்லாம் நடக்காது..

சரி.. சரி.. நானும் டவுன்லோட் பண்றேன்..


கோபி(Gopi) |

உண்மைத் தமிழன்,

உங்களைப் போய் மறப்பேனா?

என்ன பண்றதுங்க.. தொழில்நுட்பம் எப்பவுமே சூடானதுன்னாலும் தொழில்நுட்ப வலைப்பதிவுகள் எப்பவுமே சூடான இடுகையில வர்றதில்லை.

அதான் நானும் கயமையில் இறங்கிட்டேன். முதலில் தலைப்பு கூட பரபரப்பா வைக்கலாம்னு இருந்தேன். அப்புறம் வேணான்னு விட்டுட்டேன்.


இராம்/Raam |

இந்த விசயத்தைதான் எல்லாருக்கும் மெயில் அனுப்பி, Chat Status message'லாம் போட்டு வைச்சா இதுனாலே என்ன பிரயோசனமின்னு கேட்குறாய்ங்கே.... எல்லாருக்கும் IE'தான் நல்லாயிருக்காம்....

என்னத்த சொல்ல... :(


தமிழ் பிரியன் |

நானும் பதிவிறக்கி விட்டேன். நன்றி... :)


மணியன் |

நான் எனது அலுவலக கணினியில் தரவிறக்கி விட்டேன். மாலை வீடு சென்றதும் அங்கும் இறக்கிக் கொள்கிறேன்.

தமிழ் எழுத்துக்கள் அழகாகவே தெரிகின்றன.
நன்றி!


வடுவூர் குமார் |

உபுண்டுவில் அதுவே கேட்டு இறக்கிமுடிச்சிடுச்சி.


செல்வராஜ் (R.Selvaraj) |

நேற்றே தரவிறக்கிக் கொண்டேன். நன்றாக இருக்கிறது. align=justifyல் தமிழ் உடையாதிருப்பதைப் பார்க்க மகிழ்ச்சி.


கோபி(Gopi) |

இராம்,தமிழ்பிரியன்,மணியன்,வடுவூர் குமார்,செல்வராஜ் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் 3.0 உலாவியில் இந்த இடுகையை இப்போது பார்க்கும் அனைவருக்கும்

நன்றி.

சுமார் 8 மில்லியன் பதிவிறக்கம் ஒரே நாளில் செய்யப்பட்டிருக்கிறது. கின்னஸ் நிறுவனத்துக்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

சாதனை படைத்திருக்கும் என நம்புவோமாக.


பெயரில்லா |

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்