யூத்ஃபுல் விகடனில் தகடூர் நிரல்
Google Buzz Logo

சமீபத்தில் லக்கிலுக்கின் டமாரு கொமாரு கதையை படிக்க யூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் பெயர் பதிந்தேன். பெயரை தமிழில் தட்டச்சிட வசதி செய்திருந்தனர். ஆர்வத்துடன் நிரலை பார்த்தபோது மகிழ்ந்தேன். அது தகடூரின் நிரல்.

GPL கட்டற்ற உரிமத்தின் அடிப்படையில் வெளியீட்டுள்ள இந்த நிரலில் கூறப்பட்ட விதி:

"Further to the terms mentioned you should leave this copyright
notice intact, stating me as the original author."
என்பதை மதித்து நிரலில் GPL கட்டற்ற உரிம உரையை நீக்காமல் பயனர் பதிவு பக்கத்தில் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக பாராட்டுக்கள்.

அதே சமயத்தில் பின்னூட்டப் பெட்டியில் தமிழ் தட்டச்சிட வசதி செய்த நிரலாளருக்கு கட்டற்ற மென்பொருளின் அடிப்படை தெரியவில்லை என நினைக்கிறேன். தகடூரின் நிரலை மாறிகளின் பெயரை மட்டும் குறுக்கி GPL கட்டற்ற உரிம உரையை நீக்கிவிட்டு பயன்படுத்தியுள்ளனர்.

யூத்ஃபுல் விகடன், தகடூர் தமிழ் மாற்றியின் நிரல் பயன்பாட்டின் ஒரு பகுதியில் GPL கட்டற்ற உரிமத்தின் விதிகளை பின்பற்றியதற்கு பாராட்டுக்களையும் இன்னொரு பகுதியில் அதன் விதிகளை மீறியதற்காக கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

விகடன் தரப்பிலோ அதன் நிரலர் தரப்பிலோ தகடூர் நிரலை பயன்படுத்துவது குறித்து இது வரை எனக்கு மின்மடல் ஏதும் அனுப்பப்படவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எனக்கு மின்மடலிடுவது கட்டாயமில்லை எனினும் தகடூர் நிரலை பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரத்துக்கும், நிரலை புதுப்பிக்கும் போது பயனர்களுக்கு புதிய நிரல் குறித்து அறிவிக்கவும் இது உதவும்.

8 கருத்து(க்கள்):

Kasi Arumugam - காசி |

கோபி,

ஒரு படைப்பு பலரையும் சென்று சேர்வதும், அதற்குரிய அங்கீகாரம் அடையாளம் மறுக்கப்படாமல் கிடைப்பதும் நிச்சயம் மகிழ்ச்சி தரும் விசயங்களே. வாழ்த்துக்கள்.

அரைகுறையான அங்கீகாரத்தையும் முறையாகச் செம்மைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இதனால் இதுபோல மேலும் படைப்புகளை அளிக்க இன்னும் உத்வேகம் கிடைக்கும் அல்லவா?.


செந்தழல் ரவி |

இன்னும் டெவலப்மெண்ட் ஸ்டேஜில் உள்ளது என்று நினைக்கிறேன்...

உங்கள் நிரலை பயன்படுத்துவதற்கான அனுமதியையும் (மேலும் உங்களுடைய உதவியையும் :)) ) கேட்பார்கள் என்று நினைக்கிறேன்...


கோபி(Gopi) |

காசி,

இரு பக்கங்களும் வேறு வேறு நிரலர்களால் உருவாக்கப்பட்டதென்று நினைக்கிறேன். கட்டற்ற மென்பொருள் தத்துவத்தை எல்லா நிரலர்களும் சரியாய் புரிந்து கொள்வதில்லை. ஒரு நிரலர் GPL ஐ மதிக்கிறார். இன்னொருவர் மிதிக்கிறார் (அல்லது இரண்டும் ஒருவரே எனின் Split Personalityயோ ? ) :-)

செந்தழல் ரவி,

//இன்னும் டெவலப்மெண்ட் ஸ்டேஜில் உள்ளது என்று நினைக்கிறேன்..//

அப்படித்தான் தெரிகிறது.

GPL அடிப்படையிலான கட்டற்ற மென்பொருள் என்பதால் இதைப் பயன்படுத்த என்னிடம் அனுமதி பெறத்தேவையில்லை. ஒரு தகவலுக்காக என்னிடம் தெரிவிக்கத்தான் கேட்கிறேன்.

GPL மென்பொருளின் பயனர்கள் GPL உரிம உரையை நிரலில் இருந்து நீக்கினால் க்ணூ உரிம மீறலாக புகார் தெரிவித்து GNU மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனினும் அப்படி ஏதும் செய்யும் எண்ணமில்லை.

விகடன் நிரலர் குழுவில் என்னை விட சிறந்த நிரலர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். எனவே அவர்களுக்கு எனது உதவியெல்லாம் தேவைப்படாது. நிரலில் என் பெயரை நீக்காமல் பயன்படுத்தினால் சரி. :-)


புருனோ Bruno |

//அரைகுறையான அங்கீகாரத்தையும் முறையாகச் செம்மைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இதனால் இதுபோல மேலும் படைப்புகளை அளிக்க இன்னும் உத்வேகம் கிடைக்கும் அல்லவா?.//
வழிமொழிகிறேன்


SurveySan |

If you all say is this
//This is the complete set of the Online unicode converters hosted in this website. If you don't have an internet connection and want to compose unicode messages, you can download and unzip this ucedit.zip file in your machine. //

Why do you expect them to email you?

I personally, don't email anyone on free-downloaded tools. :)


கோபி(Gopi) |

Dr.புருனோ,

நன்றி

SurveySun,

//I personally, don't email anyone on free-downloaded tools. :)//

தனியொருவர் தரவிறக்கிப் பயன்படுத்துவதற்கும் மற்றொரு வலைத்தளம் தரவிறக்கி நிரலை சற்று மாற்றிவிட்டு பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மின்னஞ்சல் கட்டாயமில்லை என்று தான் இப்போதும் சொல்கிறேன். எனக்கு அறிவித்தால் நான் அடுத்த வெளியீட்டின் போது பயனர்களுக்கு தனிமடலில் அறிவிக்க வசதியாய் இருக்கும். இல்லாவிட்டால் பயனர்களே அறிந்து புதுப்பிக்கப் போகிறார்கள் அவ்வளவே. :-)

ஆனால் ஓரிடத்தில் உரிம உரையை நீக்காமல் மற்றொரு இடத்தில் உரிம உரையை நீக்க வேண்டிய தேவை என்ன என்பதுதான் புரியவில்லை.


லக்கிலுக் |

கோபி!

யூத்ஃபுல் விகடன் டாட் காமுக்கு இந்த பதிவில் உரல் அனுப்பப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கை கட்டாயம் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்!


கோபி(Gopi) |

லக்கிலுக்,

யூத்ஃபுல் விகடன் குழுவுக்கு இது குறித்து தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. :-)