ரிஸ்க்
நானும் ரொம்ப யோசிச்சுப் பாத்தனுங்க. என் மூளைக்கு எட்டலை (இருந்தாத் தானேங்கறீங்களா... அதுவும் சரிதான்)
சரி. எனக்குத்தான் தெரியலையே, தெரிஞ்சவங்க யாரு கிட்டயாவது கேட்டுப் பாக்கலாம்னு கேட்டா, யாருக்குமே தெரியலை. அதனால கடைசியா உங்ககிட்ட கேட்டுடலாம்னு...
நாமெல்லாம் தமிழ் வலைப்பதிவாளர்கள் இல்லியா... அதனால தமிழ்ல பூந்து விளையாடுவோம்னு நம்பி என் கிட்டையும் ஒருத்தர் இந்தக் கேள்விய கேட்டாருங்க.
அது வேற ஒன்னுமில்லீங்க... இந்த ரிஸ்க் அப்படிங்கறாங்களே... (டிஸ்யூம் படத்துல கூட ரிஸ்க் பாஸ்கர்னு கூப்பிடுவாங்களே.. அதுல வர்ற ரிஸ்க் தானுங்க...)
ரிஸ்க்ன்னா தனித்தமிழ்ல என்னாங்க...
21 கருத்து(க்கள்):
அப்போ 'ரிஸ்க்'ங்கிறது தமிழ் வார்த்தை இல்லைங்களா ??
//அப்போ 'ரிஸ்க்'ங்கிறது தமிழ் வார்த்தை இல்லைங்களா ??//
அப்படீங்கறீங்க...? எனக்கு என்னவோ "டவுட்"டாவே இருக்குதுங்க.
அபாயம்.
சாரிங்க
அபாயம் - danger
அபாயச்செயல் - risk
இதுவாவது சரியா இருக்குமா?
ரிஸ்க் என்றால் அபாயம், ஆபத்து, இடரார்ந்த நிலை, பேரிடர் உருவாகும் வாய்ப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்மனம்,
அபாயம், அபாயச்செயல் எல்லாம் சொல்லிப் பாத்துட்டேங்க. அதெல்லாம் Danger,Dangerous Taskக்கு தமிழ் வார்த்தை, ரிஸ்க்ன்னா என்னன்னு மறுபடி கேக்கறாரு.
டோண்டு ஐயா,
//இடரார்ந்த நிலை, பேரிடர் உருவாகும் வாய்ப்பு.//
இடரார்ந்த நிலைன்னா Troubled State பேரிடர் உருவாகும் வாய்ப்புன்னா Posibility of Disaster,
ரிஸ்க்ன்னா என்னன்னு மறுபடி கேக்கறாரு.
ம்ம்ம்... என்னவா இருக்கும்....
என்னங்க கோபி. என் 'சொல் ஒரு சொல்' வலைப்பூவை ஹைஜாக் பண்றீங்க. இது சரியில்லை. ஆமாம். :-)
-----
risk ( P ) Pronunciation Key (rsk)
n.
The possibility of suffering harm or loss; danger.
A factor, thing, element, or course involving uncertain danger; a hazard: “the usual risks of the desert: rattlesnakes, the heat, and lack of water” (Frank Clancy).
The danger or probability of loss to an insurer.
The amount that an insurance company stands to lose.
The variability of returns from an investment.
The chance of nonpayment of a debt.
One considered with respect to the possibility of loss: a poor risk.
---
It is taken from Dictionary.com; so, it seems what Dondu Sir has said is correct.
சாதக பாதகம் ?
இராம.கியின் சொல்லாக்கம்: risk = இக்கு
இக்கட்டு - risk எடுப்பதால் மாட்டிக்கொள்ளும் கஷ்டமான ஒரு நிலைமை = trouble
குமரன்,
//என்னங்க கோபி. என் 'சொல் ஒரு சொல்' வலைப்பூவை ஹைஜாக் பண்றீங்க. இது சரியில்லை. ஆமாம். :-) //
ஹைஜாக்ன்னா கடத்தல் தானுங்களே... (ஆஹா. உங்க வலைப்பூவுக்கு இன்னோரு இடுகை) :-)
லதா,
சாதக பாதகம் ? Pros Cons/Advantage Disadvantage
பத்ரி,
"இக்கு"ன்னு சொன்னதுக்கு யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு... (அப்பாடா... ஒரு வழியா நான் தப்பிச்சாச்சி)
"அது சரி... வழக்குல இருக்குற தனித்தமிழ் வார்த்தை ஏதாவது இருக்கா"ன்னு கேக்கறாருங்க. :-O
எங்களூரில் இப்படி சொல்வார்கள்
கரணம் தப்பினால் மரணம்
-theevu-
டேஞ்சரான கேள்வியாருக்குதுபா...இந்த ரிஸ்க் எல்லாம் நமக்கு வேணாம்...அந்தளவு எஜுகேசனும் நமக்கில்லை...
இருந்தாலும் வந்ததுக்கு ஒளறி வைக்கேன். "ரிஸ்க்னா ரிஸ்க்" அப்படின்னு "இசைன்னா இசை"ன்னு வடிவேலு ரேஞ்சுக்கு சொல்லி தெளிவுபடுத்தப் பாருங்க.
:)-
தீவு,
//கரணம் தப்பினால் மரணம்//
அம்மாடி! அவ்வளோ நீளமாவா சொல்லுவாங்க...
கைப்புள்ள,
//"ரிஸ்க்னா ரிஸ்க்" அப்படின்னு //
ஆரம்பிச்சதே அப்படித்தானே... :-)
பத்ரி மேற்கோளிட்ட இராம.கியின் பரிந்துரை - 'இக்கு'பற்றிய அவரின் பத்தி கீழே:
"இக்கு என்ற சொல் இங்கு பெரிதும் பொருந்தும். "இதில் ஒரு இக்கும் கிடையாது. There is no risk in this". "உங்களிடம் இக்கான வேலையை நான் சொல்லவில்லை. I am not telling you a risky job". "நீங்கள் ஏன் இவ்வளவு இக்கிக் கொள்ளுகிறீர்கள்? why do you risk yourself this much?"
பத்ரி/செல்வராஜ்,
மிக்க நன்றி.
"இக்கு" மிகப் பொருத்தமான சொல்.
இராம.கி ஐயாவின் பரிந்துரை பத்தியுடன் சொன்ன போது முதலில் யோசித்த நண்பர் பிறகு ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இன்னும் அவர் முகத்தில் ஒரு தேடல் தென்பட்டது. ஆங்கிலேயருக்கு முந்தைய தமிழகத்தில் ரிஸ்க்கு ஈடாய் புழங்கிய சொல் என்ன என கேட்கிறார்.
எனக்குத் தெரியவில்லை. அவரிடமே கேட்டால் அவருக்கும் தெரியவில்லை.
ரிஸ்க் - அய்யோ பயங்கரம்...உங்க பதிவ சொல்லலைங்க...
Risk in tamil is வீரெழல் அப்படியெனில் வீரமான முயற்சி. அடியேன் புதுசு எனது பதிப்புக்களை எப்படி பதிப்பது என்று இதற்காகவாவது சொல்லி தரக்கூடாதா.
அன்புடன் nambiaruran manian.
இக்கு நல்ல சொல் தான். ஆனால் அதற்குக் 'கரும்பு' என்றும் ஒரு பொருள் இருக்கிறதே. பக்கரை விசித்ரமணி என்று தொடங்கும் திருப்புகழ் பாடலிலும் வருமே - இக்கு அவரை நற்கனிகள் என்று. அங்கே இக்கு என்பது கரும்பு என்ற பொருள் தருகிறதே.
துணிந்து
வில்லங்கம்
"எண்ணித் துணிக கருமம்" என்பதில் துணிக என்பதை risk என்ற பொருளிலேயே கொள்ள வேண்டும். 'தைரியம் கொள்' என்று சொல்லும் பொழுதே கவலை கொள்ளும் விஷயம் ஏதோ உள்ளது என்பதைப் புரிந்து கொண்டு விடுகிறோம். There can be no success in share market without risk'- பங்கு சந்தையில் துணியாவிட்டால் வெற்றியில்லை'என்றே மொழிபெயர்க்கிறோம். ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. தமிழில் ரிச்க் என்பதற்கு 'துணி' என்றும் 'அபாயம்' என்றும் பயன்படும் இடத்தையொட்டி பொருள் கொள்ள வேண்டும்
நீங்க சொல்லுங்க