தமிழ் மாற்றியில் சில மாற்றங்கள்
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

த‌க‌டூரின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்துள்ளேன். சில‌ பிழைக‌ளை ச‌ரி செய்துள்ளேன், ஒரு வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து.

ச‌ரி செய்ய‌ப்ப‌ட்ட‌ பிழைக‌ள்
1) க‌ர்ச‌ர், த‌ட்ட‌ச்சு செய்யும் வ‌ரியில் நிற்காம‌ல் ப‌த்தியின் க‌டைசியில் நிற்கிற‌து.
2) வ‌ரியின் இடையில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ இய‌ல‌வில்லை.

இப்போது நீங்க‌ள் வ‌ரியின் இடையில் புதிய‌ வார்த்தைக‌ளை த‌ட்ட‌ச்சு செய்ய‌ முடியும். பத்தியின் கடைசிக்கு சென்று கர்சருடன் ஓடிப் பிடித்து விளையாடத் தேவையில்லை :-)

புதிய‌ வ‌ச‌தி
த‌மிழ் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - த‌மிழ் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ Tamil Typewriter (Tamilnet99 பழைய தமிழ் தட்டச்சுப் பலகை வசதி யளனகப - Remington) தெரிவு செய்துகொள்ள‌லாம்.

இந்த மாற்றங்களை அறிவிக்கும் இச் சமயத்திலே ஆரம்ப காலத்தில் நிரலை மேற்பார்வை செய்து வழிநடத்திய சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும், தகடூருக்காக வலைத்தளத்திற்கான இடம் அளித்து உதவிய நண்பர் சாகரன் அவர்களுக்கும், தகடூரின் மாற்றங்களுக்கு யோசனை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ் மாற்றியின் சுட்டி:

http://www.higopi.com/ucedit/Tamil.html

நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

10 கருத்து(க்கள்):

thamillvaanan |

வணக்கம் கோபி அண்ணா
தமிழ் தட்டெழுதி நன்றாக இருக்கிறது.
நீங்கள் தமிழ்நெற்99 என ஒரு தட்டெழுதும் முறை ஒன்றை இணைத்திருக்கிறீர்கள். எனக்கு அதில் அவ்வளவு பழக்கமில்லை. ஆனால் பாமினி தட்டெழுதும் முறையுடன் பெரிதும் ஒத்திருக்கிறது. ஆனால் தமிழ்நெற்99 பாமினி தட்டெழுதும் முறையுடன் பெரிதும் மாறுபட்டது என நினைக்கிறேன்.

தொடரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்;கள்.
அன்புடன்
தமிழ்வாணன்


மஞ்சூர் ராசா |

அன்பு கோபி, உங்களின் கணினியில் தமிழ் தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. பல நண்பர்கள் தமிழில் தட்டச்ச திணறும்போது நான் உங்கள் சுட்டியை கொடுப்பது வழக்கம். மேலும் அதை தொடர்ந்து மேன்மையாக்கிவருவது சந்தோசத்தை தருகிறது. எங்கள் முத்தமிழ் குழுமத்திலும் பலருக்கு நாங்கள் உங்கள் சுட்டியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதோ இன்றைய உங்கள் பதிவையும் இடுகிறோம்.

வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz


தகடூர் கோபி(Gopi) |

தமிழ்வாணன்,

பாமினி தட்டச்சு வடிவமைப்பையும் இணைத்திட முயற்சி மேற்கொண்டுள்ளேன்.

வாழ்த்துக்கு நன்றி.

மஞ்சூர் ராஜா,

பயனர்களுக்கு இந்த மாற்றியை அறிமுகப்படுத்தி வருவதற்கு நன்றி.

பயனர்களின் ஊக்குவிப்பே மேன்மேலும் நிரல் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தை தருகிறது.


தகடூர் கோபி(Gopi) |

சிறு திருத்தம்:
மன்னிக்க, நிரல் படுத்தியுள்ளது, தமிழ்99 தட்டச்சுப்பலகை அல்ல. பழைய தமிழ் தட்டச்சுப் பலகை வசதி (யளனகப - Remington)

இந்த இடுகையிலும் திருத்திவிட்டேன்.


சேதுக்கரசி |

நானும் முன்பு கர்ஸருடன் ஓடிப்பிடித்து விளையாடியிருக்கிறேன் :-) வாழ்த்துக்கள் கோபி. உங்கள் சேவை வியக்கவைக்கிறது.


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி,

//நானும் முன்பு கர்ஸருடன் ஓடிப்பிடித்து விளையாடியிருக்கிறேன் :-) //
:-)

வாழ்த்துக்கு நன்றி.


கைப்புள்ள |

கோபி,
இந்த ஆறு பதிவு ஒன்னு நானும் போட்டிருக்கேன். நீங்களும் ஒரு ஆட்டம் ஆடனும்னு கேட்டுக்கறேன்.

http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html


முத்துநாடான் |

I am one of the users of Tamilmaatri. Recently I came across this news http://www.physorg.com/news77697303.html
I just wanted to let you know. Thanks for your wonderful service to Tamil. Good luck.


தகடூர் கோபி(Gopi) |

நித்திலன்,

குயில்பேட் குறித்து சில நாட்களுக்கு முன்பே அறிய வந்தது. பயன்படுத்திப் பார்த்தேன்.

மிக அருமையான மாற்றி... Auto Correct, Auto Complete போன்ற வசதிகள் உள்ளது. உலாவியில் திறந்து பயன்படுத்த முடியும் என்பதால் எதையும் நிறுவவேண்டியதில்லை. IE மட்டுமே பயன்படுத்த அறிவுருத்தப்பட்டாலும் இம் மாற்றி Firefoxலும் அருமையாய் பணி செய்கிறது.

குயில்பேட்டில் நான் கண்ட ஒரே குறை... இணைய இணைப்பில்லாத போது பதிவிறக்கி பயன்படுத்த முடியவில்லை.


நிலாரசிகன் |

குறையா அப்படீன்னா?

கோபி நண்பா
உங்கள் தமிழ் தட்டெழுதி தான்
என் கவிதைகள் அரங்கேறுவதற்கு
மிகவும் பக்கபலமான ஒன்று!

மிக்க நன்று.