தமிழ் விசை 0.3.2 வெளியீடு
Google Buzz Logo

தண்டர்பர்ட் மின்னஞ்சல் செயலியின் புதிய வெளியீடான 2.0.0.0 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய செயலியில் பதிப்பு வேறுபாடுகள் காரணமாய் தமிழ்விசை 0.3.1 இயங்க மறுத்தது.

இந்த வழுவை சரி செய்து தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.3.2 இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும். இந்த வெளியீட்டில் புதிய வசதிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. எனவே, ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் தமிழ் விசை 0.3.1 லிருந்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.3.2 தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

பிற்சேர்க்கை: இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

7 கருத்து(க்கள்):

Voice on Wings |

கோபி, தொடர்ந்து இந்த நிரலை மேம்படுத்திக் கொண்டிருப்பதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் லினக்ஸுக்கு மாறியதால், இதையன்றி தமிழில் உள்ளிட வேறு வழியில்லாமலிருக்கிறது. SCIM இருந்தாலும் அதில் எனக்குப் பழக்கப்பட்ட தமிழ்-99 ஆதரவில்லாததால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை.

இன்னொன்று, லினக்ஸில் Alt+F9 குறுக்குவிசை minimise செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், முதலில் அதைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறினேன். பிறகுதான் தெரிந்தது, குறுக்குவிசைகளை customize செய்யும் வசதியைத் தந்திருக்கிறீர்கள் என்று. அதைக் கொண்டு தமிழுக்கு Ctrl+F9 என்று மாற்றிய பின், எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. மேலும், F9 குறுக்குவிசை ஆங்கிலம் <-> தமிழ் என்று toggle ஆவதுவும் மிகவும் பயனுள்ள வசதி.

உங்கள் உழைப்பு பலருக்கும் பயன்படுமென்று நம்புகிறேன்.


தகடூர் கோபி(Gopi) |

Voice on Wings,

நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நீங்கள் பங்களித்த தமிழ் விசை 2.0 நிரலைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. :-)


- உடுக்கை முனியாண்டி |

கோபி, VoW, முகுந்த்

உங்கள் மூன்று பேருக்குமே நன்றி.

தமிழ் விசை உண்மையிலேயே லினக்ஸில் தமிழ் பயன்பாட்டை எளிமையாக்கியுள்ளது. வெவ்வேறு உள்ளிடு முறைகள் இருந்தாலும் இதுவே எளிமையானதாக உள்ளது. உங்கள் உழைப்பிற்கும் நேரத்திற்கும் மீண்டும் நன்றிகள்


மா சிவகுமார் |

கோபி,

நானும் தமிழ்விசையைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். உங்கள் பணிக்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்


அ. இரவிசங்கர் | A. Ravishankar |

தமிழ்விசை லினக்சில் பெரிதும் உதவுகிறது என்றாலும், தமிழ்விசை லினக்சுக்கு மட்டுமானது என்று ஒரு தவறான கருத்து பரவவும் வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த அறிக்கைகளில் இது Firefox இயங்கும் விண்டோஸ் உள்ளிட்ட எந்தக் கணினியிலும் இயங்கும் என்றும் சில கூடுதல் வசதிகளால் எ-கலப்பையைக் காட்டிலும் சிறந்தது என்றும் கூட எடுத்துச் சொல்லலாம்.

firefox அடிக்கடி தமிழ்விசை நீட்சியை இற்றைப்படுத்துகிறது. பின்னணியில் நிறைய வேலை நடக்கிறதோ? உழைப்புக்கும் நேரத்துக்கும் நன்றி, கோபி. தமிழ்விசை இல்லாவிட்டால் என் பாதி இணையத்தமிழ் வாழ்க்கை முடங்கிப் போகும் :)


சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam |

நானும் பயன்படுத்துகிறேன். மிக்க நன்றி.


பெயரில்லா |

லினக்ஸை ஆரம்பத்திலிருந்து பயில ஒரு நல்ல முகவரியைத் தாருங்கள்.