யார் இந்த ஹாய் கோபி/ஹைகோபி ?
Google Buzz Logo

வலைப்பதிவு உலகில் சிலருக்கு ஹாய் கோபி/ஹைகோபின்னா யாரு, என்ன விவரம் அப்படின்னு தெரிஞ்சிக்க ஆவல் இருந்திருக்கும். இந்த ஹாய் கோபி/ஹைகோபின்னு சொல்றாங்களே யாருங்க அது? அதைத் தெரிஞ்சிக்க எனக்கும் கூட ஆவலாத்தான் இருந்துச்சி.

கோபிங்கற பேரு திடீருன்னு எப்படி ஹாய் கோபி/ஹைகோபின்னு மாறுச்சி? என்னோட பதிவர் விவரப் பக்கத்துல கூட நான் "கோபி(Gopi)"ன்னு தானே குறிப்பிட்டு இருக்கேன்? யாருகிட்டயும் நான் என்னை ஹாய் கோபி/ஹைகோபி அப்படின்னு அறிமுகப்படுத்திக்கிட்டதில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி எனக்கு திடீர்ன்னு ஹாய் கோபி/ஹைகோபின்னு பேரு வச்சாங்க?

யோசிச்சி பாத்தா தான் தெரியுது அது என்னோட வலைத்தளப் பெயரால வந்ததுன்னு. வலைத்தளம் பதிவு செய்யும் போது http://www.gopi.com/ என்ற பெயரில் ஒரு வலைத்தளம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதுன்னு சொன்னாங்க. பொதுவா வலைத்தளப் பெயர்கள் எளிதாக தட்டச்சு செய்ய வசதியாக சில எழுத்துக்களில் இருக்கவேண்டும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் இருக்கனும். என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்ப "Say Hi to Gopi" என்று பொருள் வரும் வண்ணம் http://www.higopi.com/ என்று பதிந்தேன்.

அட எனக்கு ஒரு "Hi" சொல்லச் சொன்னா என்னையே ஹாய் கோபி/ஹைகோபி ஆக்கீட்டீங்களே.

சரி விசயத்துக்கு வருவோம். இன்றைக்கு வலைப்பதிவுலகத்தில் பல "கோபி"க்கள் இருக்கோம். அதனால் வெறும் "கோபி" என்று சொன்னால் குழப்பம் வரும் என்பதால் என்னை ஹாய் கோபி/ஹைகோபி என்று அழைத்திருப்பீர்கள். ஆனால் தமிழில் ஹாய் கோபி/ஹைகோபி என்று சொல்லும்போது அது ஒரு நல்ல பெயர்ச் சொல்லாகவோ அல்லது அர்த்தமுள்ள சொல்லாகவோ இல்லை.

எனவே, என்னை குறிப்பாக வேறுபடுத்தி விளிக்க விரும்புவோர் "தகடூர் கோபி"என அழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

11 கருத்து(க்கள்):

கானா பிரபா |

உங்களுக்கு இவ்வளவு சிக்கல் இருக்குதா ;-), சரி நீங்க சொன்னதைக் கருத்தில் எடுத்தோம்


- யெஸ்.பாலபாரதி |

முடியாது...

"தகடூர் தல" ன்னு வேணும்மா சொல்லிக்கலாம். ஓகேவா! ;)


தகடூர் கோபி(Gopi) |

கானா பிரபா,

நன்றி.

பாலபாரதி,

என்னாது? தலயா? அடப்பாவிங்களா.. எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?

இதுக்காகவே பா.க.ச மெம்பராவப் போறேன்.


G.Ragavan |

பெத்தவங்க அப்பிடி இப்பிடி யோசிச்சி ஒரு பேரு வெச்சா....அத அப்படியே பயன்படுத்த முடியலை பாத்தீங்களா! நானும் வந்த புதுசுல எல்லாரும் ராகவனையும் டோண்டு ராகவனையும் கொழப்பிக்கிட்டிருந்தாங்க. அப்ப படம் கூடப் போடலை. நட்சத்திர வாரத்துக்குப் படம் போட்டேன். அப்பத்தான் ராகவன் டோண்டு ராகவன் அல்ல..ஜி.ராகவன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க. என்னங்க இது? நாந்தான் என்னோட பேரப் போட்டு போட்டவப் போட்டு எழுதுறேனே...அப்புறம் எதுக்கு இன்னொரு ஐடி. ஜிராவுக்கு அதெல்லாம் தேவையில்லை. சரியோ தப்போ...தனக்குத் தெரிஞ்சத தானே சொல்லீட்டுப் போறதுதான் எனக்குப் பிடிக்கும். சரி விடுங்க.

இந்த ஹாய் பாய் எல்லாம் வேண்டாம். தகடூர் இணைப்பு நல்லாத்தான் இருக்கு. அதியமான் நலமா? பேசாம ஒங்களத் தகடூரார்னு கூப்பிட்டுறலாமா?


பெயரில்லா |

பாலாபாய் கூறுவது சரி...'இன்னும்' 'தல' அஜீத் போல இளமையாக இருக்கிறீர்...உம்மை தகடூர் தல என்று அழைத்தல் பொருத்தம்...(கொடுமைடா !!! :))))))


ஜி |

நீங்க சொல்லுங்க

என்னன்னு??? தகடூர் தல ன்னா?


தகடூர் கோபி(Gopi) |

ஜி.ரா,

//இப்பவும் பாருங்க நாந்தான் இம்சை அரசின்னு சொல்றாங்க.//

சொல்லீட்டுப் போறாங்க விடுங்க. குழு மனப்பாண்மையும் ஆதிக்க எண்ணமும் கொண்டவங்களை திருத்த முடியாது. நாம இது எதுலயும் சம்பந்தப் படாம நம்ம வேலையை மட்டும் பாத்துட்டுப் போகலாம். அது தான் நல்லது.

//பேசாம ஒங்களத் தகடூரார்னு கூப்பிட்டுறலாமா?//

ஆகா,அரசியல்வாதியை கூப்பிடற மாதிரி ர்ர்ர்ர்ர் போடறீங்க... ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல.

செந்தழல் ரவி,

என்னா இது? இன்னும் மொக்கை மூட் போகலை போல இருக்கு?

கலாய்க்கப்படுதல் பாலாவுக்கு மட்டுமே சொந்தமானது. நம்மளயெல்லாம் பண்ணப்படாது. ஐ ஆம் தி எஸ்கேப்.

ஜி,

நீங்களுமா? அட இன்னுமா விளங்கலை?

ஸ்ஸ்ப்ப்ப்பாஆஆ... இப்பவே கண்ணைக் கட்டுதே...


- யெஸ்.பாலபாரதி |

தகடூராரா?... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா? வாரியார் மாதிரி சொல்லுதியலே!

ரவி... இதுல என்ன கொடுமை.. உமக்கு உம்மையும் மொக்கை இளவரசர்ன்னு சொல்லச் சொல்லிடுவோம்...

ஜி.. நீங்க வாங்க சாமி... தகடூர் தல என்ன சொன்னாலும் பயப்பிடாதீங்க!

என்னது பாகச-வா? அப்ப நீங்க இன்னும் அதுல சேரலையா? ம்ம் நானாகத்தான் வந்து மாட்டிக்கிட்டேனா..?

:-(


G.Ragavan |

// ♠ யெஸ்.பாலபாரதி ♠ | ஏப்ரல் 05, 2007 12:57 PM
தகடூராரா?... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா? வாரியார் மாதிரி சொல்லுதியலே! //

அதாகப்பட்டது யெஸ்பா...நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. தகடூன்னு செல்லமா பேரு வெச்சி ராரான்னு சொல்றதுதான் சந்திமுகி ஸ்டைலு. அதான் தகடூராரான்னு சொல்றது. தகடூரா அப்படீன்னு மரியாதையில்லாமலும் கூப்பிடலாம். தகடூராரா கோவிச்சிக்கப் போறாரு? ஹி ஹி.


தகடூர் கோபி(Gopi) |

பாலா,

//தகடூராரா?... என்ன ஜிரா... கோபி அவ்வளவு வயசானவரா? வாரியார் மாதிரி சொல்லுதியலே!//

க்ர்ர்ர்ர்ர்.... யாரங்கே! அர்ஜென்ட்டா பா.க.ச மெம்பர்சிப் பார்ம் ஒன்னு பார்சல்!

ஜி.ரா,

சமீபத்துல ஏதும் நம்ம மொக்கச்சாமிய (வேற யாரு செந்தழல் ரவிதான்) பாத்து பேசினீங்களா? அவர் காத்துப்பட்டுடுச்சி போல... இப்படி மொக்கை போடுறீங்க.

:-))


சேதுக்கரசி |

நானும் ஹாய்கோபின்னு சொல்லியிருக்கேன் முந்தி.. இனிமேல் தகடூர் கோபி தான். தகடூர்னா கூட பாருங்க, உங்க ஊரை விட உங்க தட்டச்சு செயலி தான் எப்பவும் நினைவுக்கு வரும் :-)

அதே மாதிரி, தகடூராரா-ன்னா சந்திரமுகி மட்டுமில்ல, காக்கிச்சட்டை சத்யராஜும் நினைவுக்கு வரார்.. தகடு தகடு! :-)