மன்றம்(FORUM) சேவை துவங்கப்பட்டது
Google Buzz Logo

எனது வலைத்தளத்தில் உலாவியவர்கள் அதில் FORUM பகுதியை பார்த்திருக்கக் கூடும். இது நாள் வரை கட்டமைப்பில் இருந்த அந்தப் பகுதியில் இப்போது மன்றம்(FORUM) சேவை துவங்கப் பட்டுள்ளது.

http://www.higopi.com/forum/

எனக்கு வரும் மடல்களில் பல ஒரே தொழில்நுட்பக் கேள்வியை கேட்டு வரும். ஒரே பதிலை நானும் திரும்பத் திரும்ப அனுப்பி வைப்பேன். இதைத் தவிர்க்கவும், பொதுவான தொழில்நுட்பக் கேள்விகளை பொதுவில் வைத்து விடையளிக்கவும் வசதியாக இந்த மன்ற சேவையை துவங்கினேன். இதன் மூலம் நான் மட்டுமல்ல, ஒருவருக்கு தெரியாத கேள்விகளுக்கு இதர உறுப்பினர்கள் கூட பதில் அளிக்க இயலும்.

தற்போது தொழில்நுட்ப சந்தேகங்கள் மற்றும் தமிழ் மென்பொருட்கள் என முழுவதும் கணினி தொழில்நுட்பம் சார்ந்த இரு பகுதிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இனி வரும் காலத்திலும் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த மன்றமாகவே செயல்படும்.

ஏற்கனவே பல வலைத்தளங்களில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த மன்ற சேவைகளுக்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எனது வலைத்தளத்தில் இருக்கிறது என்பதைத் தவிர.

இந்த மன்ற சேவையில் உள்ள தலைப்புகளை/பதில்களை பார்வையிட உறுப்பினர் ஆக வேண்டிய கட்டாயமில்லை. புதிய தலைப்பு தொடங்கவோ அல்லது பதிலளிக்கவோ உறுப்பினரால் மட்டுமே முடியும்.

இந்த மன்றத்தின் செய்தியோடை http://higopi.com/forum/extern.php?action=active&type=RSS என்ற சுட்டியில் கிடைக்கும்.

இந்த மன்ற சேவையைப் பயன்படுத்த அனைவரையும் அழைக்கிறேன்.

13 கருத்து(க்கள்):

ரவி |

நல்ல முயற்சி...வரவேற்கிறேன் கோபி...


வடுவூர் குமார் |

நன்றாக இருக்கு முகப்பு.
அவ்வப்போது வந்து கேள்வி கேட்கிறேன்.


தகடூர் கோபி(Gopi) |

செந்தழல் ரவி,

நன்றி. புதுசா ஒன்றுமில்லைங்க... இது ஏற்கனவே பல வலைத்தளங்களில் இருக்கும் வசதி தான்...

வடுவூர் குமார்,

கண்டிப்பா கேளுங்க.

:-)


cheena (சீனா) |

அழைப்பிற்கு நன்றி - அவ்வப் பொழுது வந்து ஐயப்பாடுகளைக் கேட்கிறேன்.


ரசிகன் |

நல்லா இருக்கு.
வாங்களேன் என் வீட்டுக்கு..நான் நாய்களிடம் த்னியா மாட்டின வீரக் கதையெல்லாம் சொல்லியிருக்கேன்.உங்க கருத்த சொல்லுங்களேன்


உண்மைத்தமிழன் |

தம்பி அஜீத்து.. நான் நேத்தே சேர்ந்துட்டேன். எதுனாச்சும் டவுட் வந்தா கொஸ்டீனை போட்டு வைக்குறேன்.. கடைசியா ஏதோ RSS FEED-ன்னு ஒண்ணு சொல்லிருக்கியே. அதை வைச்சு நான் என்ன பண்றது? அதுக்கு ஒரு விளக்கம் சொல்லிரேன்... அப்புறம் நம்ம fourm-த்துல பாலிடிக்ஸ் பேசலாமா.. கை அரிக்குது...


தகடூர் கோபி(Gopi) |

சீனா,

நன்றி

ரசிகன்,

உங்க வீட்டை இப்போ தான் பார்த்தேன். கொஞ்சம் அகலமான Template தேர்ந்தெடுத்தீங்கன்னா இன்னும் நல்லாயிருக்கும்.

மக்களே,

ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன். இந்த மன்றத்தின் செய்தியோடை http://higopi.com/forum/extern.php?action=active&type=RSS என்ற சுட்டியில் கிடைக்கும். (பதிவின் கடைசியில் பிற்சேர்க்கையாக சேர்த்துவிட்டேன்)


தகடூர் கோபி(Gopi) |

உண்மைத் தமிழன்,

வாங்கண்ணா வாங்க, நீங்க தானா அது... :-)

RSS feed ங்கறது ஒன்னுமில்லீங்க, உங்ககிட்ட ஒரு Feed Reader இருந்தா அதுல இந்த பதிவுல இருக்கும் RSS சுட்டியை சேர்த்துக்கலாம். இதுனால என் வலைத்தளத்துக்கு வராமலேயே புதுசா யார் என்ன கேள்வி கேட்டிருக்காங்க அதுக்கு யார் பதில் சொல்லியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.

புதுசா யாராவது கேள்வி கேட்டா நானே இந்த வசதியை வச்சி தான் ThunderBirdல் படிச்சு தெரிஞ்சிக்கறேன். கூகிள் ரீடரிலும் இந்த RSS சுட்டியை சேர்த்துக் கொள்ள முடியும்.

//அப்புறம் நம்ம fourm-த்துல பாலிடிக்ஸ் பேசலாமா.. கை அரிக்குது...//

ஆகா, ஒரு திட்டமாத்தான் இருக்கீங்க போல... forum announcementல பாருங்க:

"Technical discussions/informative posts only"


உண்மைத்தமிழன் |

///அப்புறம் நம்ம fourm-த்துல பாலிடிக்ஸ் பேசலாமா.. கை அரிக்குது...//
ஆகா, ஒரு திட்டமாத்தான் இருக்கீங்க போல... forum announcementல பாருங்க: "Technical discussions/informative posts only"///

அட போப்பா.. டெக்னிக்கலுக்கெல்லாம் ஒரு மூளை வேணும்..

எனக்கு ஒரு சந்தேகம்.. சில பேரு இந்தக் கொண்டைய மறைங்கோண்ணா அப்படி ஒரு பிட்டை போட்டு பயமுறுத்துறாங்களே.. அந்தக் கொண்டையை மறைக்கிறது எப்படின்னு கொஞ்சம் டெக்னிக்கலை அள்ளிவிடேன்.. தெரிஞ்சுக்கிறேன்..


தகடூர் கோபி(Gopi) |

கொண்டைய மறைக்கறது பத்திதான் பல பேரு ஏற்கனவே எழுதிட்டாங்களே...

சரி உங்க ஆசையை ஏன் கெடுக்கனும். அதுக்கு ஒரு தலைப்பு ஆரம்பிச்சிட்டேன்.

சில வழிகளை நான் சொல்லியிருக்கேன். இன்னும் வேற வழி தெரிஞ்சவங்க அங்க வந்து சொல்லுங்கப்பா.


சேதுக்கரசி |

நல்ல முயற்சி கோபி.

//எனக்கு வரும் மடல்களில் பல ஒரே தொழில்நுட்பக் கேள்வியை கேட்டு வரும்//

ஊகூம் அது நானில்லை... நான் எப்பவும் வேற வேற கேள்வில்ல கேட்பேன் :-)


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி,

நன்றி.

//ஊகூம் அது நானில்லை... நான் எப்பவும் வேற வேற கேள்வில்ல கேட்பேன் :-)//

அதுமட்டுமில்லை. நீங்க பெரும்பாலும் அடுத்தவங்களுக்கு வர்ற சந்தேகத்தை தானே கேட்பீங்க :-)


Unknown |

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.