தமிழ்விசை 0.4.0 வெளியீடு
Google Buzz Logo

தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.4.0 வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டில் களையப்பட்ட வழுக்கள்:

  1. சாட்ஜில்லாவில் தமிழ் விசை இயங்க மறுத்தது.
  2. தமிழ்விசை 0.3.2 புதிய ஜி-மெயிலில் இயங்க மறுத்தது.
  3. தமிழ் 99 விதிகள் 5,7,9,10,11 ஆகியவை இல்லை.
  4. தமிழ் 99 விசைப்பலகையில் (௺,௹) போன்ற சிறப்புக் குறியீடுகள் இல்லை.
  5. தமிழ் 99 ஆய்தம் 'ஃ' தட்டச்சிட முடியவில்லை.
  6. அஞ்சல் விசைப்பலகையில் qpyarqpaakS என தட்டச்சினால் 'ஃபயர்ஃபாக்ஸ்' என்று மாறவில்லை.
  7. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் கொம்பு, புள்ளி குறித்த வழுக்கள்.
  8. பாமினி,புதிய/பழைய தட்டச்சு விசைப்பலகைகளில் ஒகர ஓகார ஔகார canonical equivalences பிரச்சனை.
  9. பாமினி,புதிய தட்டச்சு விசைப்பலகைகளில் ஔகாரம் அடுத்துவரும் ஒற்று பிரச்சனை
  10. பாமினி விசைப்பலகையில் விடுபட்ட எழுத்துக்கள்.
இந்த வெளியீட்டில் புதிய வசதிகள்:

அ. வலைத்தள முன் தெரிவுகள்

குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு தேவையான விசைப்பலகைகளை முன் தெரிவு செய்ய இயலும். அவ்வலைத்தளங்களில் உலாவும் போது தானியங்கு முறையில் விசைப்பலகை தெரிவு செய்யப்படும்.

ஆ. காட்சியமைப்பில் மாறுதல்

தமிழ் விசைப்பலகைகள் தெரிவில் உள்ளபோது தட்டச்சு உரைப் பெட்டியின் பின்புலம் வெளிர்நீல நிறத்திலும், எல்லைக் கோடு நீல நிறத்திலும் மாறும்.

இ. இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை

இந்தப் பதிப்பில் புதிதாக இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

ஈ. அவ்வை விசைப்பலகை:

இந்தப் பதிப்பில் புதிதாக அவ்வை விசைப்பலகை சேர்க்கப்பட்டுள்ளது. இனி இந்த விசைப்பலகை பயனர்களும் தமிழ்விசை நீட்சியை பயன்படுத்த இயலும்.

உ. வலச்சொடுக்கிப் பட்டியல்

இப்போது எந்தெந்த விசைப்பலகைகளை வலச்சொடுக்கிப் பட்டியலில் காட்ட வேண்டும் என்பதை தெரிவு செய்ய இயலும். வலைத்தள முன்தெரிவில் தேர்ந்தெடுத்த விசைப்பலகைகள் ஏற்கனவே வலச்சொடுக்கிப் பட்டியலில் தெரிவு செய்யப்படாதிருந்தால் தானாகவே தெரிவு செய்துவிடும்.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும்.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.4.0 வெளியீடு தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

இந்த வெளியீட்டின் வழுக்களை சோதித்து விரிவான வழு அறிக்கை அளித்த தமிழா! கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவைச் சேர்ந்த சேது, மயூரேசன் ஆகியோருக்கும், மேம்பாடுக்கான யோசனைகள் அளித்து உதவிய சுரதா யாழ்வாணன், ரவிசங்கர், பாலபாரதி ஆகியோருக்கும் மற்றும் இதன் முன் வெளியீட்டு சோதனையின் போது பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உலகெங்கும் உலாவும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

8 கருத்து(க்கள்):

வடுவூர் குமார் |

லினக்ஸில் தமிழ் உள்ளீடு செய்ய இந்த தமிழ் கீ சரியான add-on.


ரவிசங்கர் |

மகிழ்ச்சியான செய்தி கோபி. இந்த வெளியீட்டில் தமிழ்99 விசைப்பலகைக்கான சிறப்புப் பரிந்துரை தரப்பட்டிருப்பதற்கு சிறப்பாக ஒரு தனி நன்றி :) ஒரு விசைப்பலகையையும் அறியாமல் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே வேறு பழகி இருப்பவர்களுக்கும் தமிழ்99 குறித்த விழிப்புணர்வு பரவ உதவும். இனி firefoxக்கும் பரப்புரை செய்தோமானால் தமிழ் விசை நீட்சியைப் பரப்பவும் உதவவும் :)

அதியன் எப்போ வருது?


Doctor Bruno |

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்


suratha |

முயற்சிக்கு நன்றி கோபி.

அலுவலகத்தில் கலப்பை பாவிக்கமுடிவதில்லை.உங்களதுதான் நேரடித்தட்டச்ச உபயோகப்படுத்துகிறேன்.

பிரபலமில்லாத மற்றைய தட்டச்சு முறைகளும் இருப்பது இதன் பலம்.


கோபி(Gopi) |

வடுவூர் குமார், டாக்டர் ப்ரூனோ, சுரதா,

நன்றி.

ரவி,

கண்டிப்பா, மற்ற விசைப்பலகைகளை விட தமிழ்99 தான் சிறந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதியனின் அடுத்த வெளியீட்டு அறிக்கையை இப்போது தான் வெளியிட்டேன். வெளியீட்டுக் கோப்பு அதியன் தளத்தில் கிடைக்கும்.


கா. சேது | K. Sethu |

கோபி

தமிழ்விசை / அதியன் திட்டமிட்ட நாளில் வெளியிட்டமைக்கு வாழத்துக்கள்.தைப்பொங்கல் பண்டிகைக் காலத்துக்கும் வாழத்துக்கள்.

ரவி: //இந்த வெளியீட்டில் தமிழ்99 விசைப்பலகைக்கான சிறப்புப் பரிந்துரை தரப்பட்டிருப்பதற்கு சிறப்பாக ஒரு தனி நன்றி :) ஒரு விசைப்பலகையையும் அறியாமல் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே வேறு பழகி இருப்பவர்களுக்கும் தமிழ்99 குறித்த விழிப்புணர்வு பரவ உதவும்.//

ரவி கூறிய தமிழ்99 க்கான சிறப்புப் பரிந்துரை தங்கள் வலைப்பதிவிலோ tamilkey.mozdev.org பக்கத்திலோ காணப்படவில்லையே? எங்கே எழுதியுள்ளீர்கள்?

சேது


கோபி(Gopi) |

சேது,

நன்றி.

தமிழ்விசை வலைத்தளத்தில் screenshots பக்கத்தில், "தெரிவுகள்" சாளரத்தில், கீழே "புதிதாய் தமிழ் தட்டச்சு பழகுவோருக்கு தமிழ்99 விசைப்பலகை பரிந்துரைக்கப்படுகிறது" என்றொரு செய்தி இருக்கும். ரவி அதைத் தான் குறிப்பிடுகிறார்.


enRenRum-anbudan.BALA |

நன்றி கோபி !
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...