தமிழ்மணத்தை காணவில்லை
Google Buzz Logo

என்னது! தமிழ்மணத்தை காணவில்லையா? அட ஆமாங்க உண்மையா தான் சொல்லுறேன். நானும் எப்படியெல்லாமோ தேடித் தேடிப் பாத்துட்டேன் எங்கேயுமே காணவில்லை. அட உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க. இல்லாட்டி நீங்களே தேடிப்பாருங்க, கெடைச்சா எனக்கும் சொல்லுங்க.

Google


அட, ரொம்ப பயந்துடாதீங்க. அது வேற ஒன்னும் இல்லீங்க கூகிள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தங்களிடம் உள்ள மிகப் பழைய தேடல் விடைகளை (2001 ஜனவரியின் விடைகளை) வெளியிட்டுள்ளது. அங்கே தான் "தமிழ்மணம்", "தேன்கூடு" ஆகியவற்றை தேடினேன். சில விடைகள் வந்தன. ஆனால் அவை எதுவுமே தமிழ்மணம் திரட்டியுடனோ தேன்கூடு திரட்டியுடனோ தொடர்புள்ளவை அல்ல.

இதன் மூலம் ஜனவரி 2001ல் கூகிள் தேடலின் விடைகளில் பல வலைத்தளங்கள் எப்படி/எந்த வரிசையில் காட்டப்பட்டனன்னு தெரிஞ்சிக்கலாம். இந்த கூகிள் 2001க்கான தேடல் முகவரி: http://www.google.com/search2001.html

2001ல் அந்த தளங்கள் எப்படி இருந்தனன்னு தெரியனும்னா http://web.archive.org/ என்ற சுட்டியில போய் தேடிப்பாருங்க.

இன்று மிகப் பிரபலமாக உள்ள பல வலைத்தளங்கள் ஏழு வருடங்களுக்கு முன் இருந்த சுவடே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது கண்ணதாசனின் "யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது" என்ற வரிகளில் உள்ள உண்மை சுடுகிறது.

3 கருத்து(க்கள்):

யோசிப்பவர் |

கோபி,
தமிழ்மணம் பிறந்தது 2004ல் என்று நினைக்கிறேன். தேன்கூடு வந்தது அதற்கும் சில காலம் பின்புதான். அப்புறம் எப்படி அவை 2001 தேடல்களில் கிடைக்கும்? தேடிய இடம் தவறு!!;-))


தகடூர் கோபி(Gopi) |

//தேடிய இடம் தவறு!!;-))//

தேடிய வருடம் தவறு.. உங்க பதிவு.. என் பதிவு எல்லாம் கூட இல்லை :-)


viji |

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.