நிலநடுக்கமும் சுனாமியும் - ஒரு அலசல்
Google Buzz Logo

நிலநடுக்கமும் சுனாமியும ஏன் வருதுன்னு எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிட்டங்க.

நிறைய காமெடியனுங்க அதை முன் கூட்டியே சொன்னேன்னு வேற பத்திரிக்கை/தொலைக்காட்சியில பேட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சி பாத்ததுல சுனாமி, நிலநடுக்கம் இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் எதுன்னு தெரிய வந்தது. எதுன்னு கேக்கறீங்களா? எதுன்னு சொல்றதுக்கு முன்னாடி..

பேண்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கறவுங்க கவனிச்சி பாத்தீங்கன்னா ஒரு காலை முதலில் நுழைத்து அடுத்த காலை அப்புறமா நுழைத்து போடுவாங்க. இது ஏன்னு பாத்தா அதுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்குதுங்க.

உதாரணமா, தமிழ்நாட்டுல ஒருத்தர் காத்தால குளிச்சிட்டு ரெண்டு காலையும் ஒரே சமயத்துல தூக்கி பேண்ட்க்குள்ள குதிச்சி ரெடியாவுறார்ன்னு வையுங்க, குதிக்கும் போது அவர் நிலத்துல ஒரு சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்துறாரு. இது மாதிரியே எல்லாரும் குதிச்சாக்க அந்த அதிர்ச்சி அப்படியே வளர்ந்து பெரிய அதிர்ச்சியா மாறி (பூமி சுத்துறதுனால) கிழக்கு பக்கமா நகர்ந்து போவும்.

கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா ஆப்பிரிக்கா,ஐரோப்பாவுல எல்லாம் விடிஞ்சிரும். அங்கேயும் இதே மாதிரி எல்லாரும் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, ஏற்கனவே நகர்ந்து வந்த அதிர்ச்சியும் இந்த அதிர்ச்சியும் சேர்ந்து பலமடங்கு அதிகமான அதிர்ச்சியாகும் .

அப்றம் இதே மாதிரி அமெரிக்காவுல, ஜப்பான்ல எல்லாம் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, தென்கிழக்காசியாவுல விடியும் போது எல்லா அதிர்ச்சியும் சேர்ந்து பெரிய நிலநடுக்கமா மாறி தென்கிழக்காசிய கடல் பகுதியில தாக்கும்.

கடல் அதிரும்போது அது சுனாமியை ஏற்படுத்தி அப்படியே நகர்ந்து வந்து தமிழ்நாடு இலங்கை, அந்தமான் இப்படி எல்லா பகுதியையும் தாக்கிடும்.

இப்படியெல்லாம் ஏற்படாம இருக்கனும்னுதாங்க எல்லாரும் முதல்ல ஒரு கால்ல பேண்ட் மாட்டிட்டு அப்புறமா ரெண்டாவது கால்ல பேண்ட் மாட்டனும்ங்கறாங்க.

என்னது? ஆட்டோ அனுப்பறீங்களா? ஐய்யையோ! எஸ்கேப்!!

பி.கு: யாரும் சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க. உலகத்துல எதையாவது/யாரையாவது கொஞ்சம் கூட வருத்தமடையச் செய்யாத ஜோக் இன்னும் யாருமே என்கிட்ட சொல்லலீங்க.

2 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு karthikramas சொன்னது...

எல்லா விஷயமும் இப்படித்தான் நீர்த்துப்போகும் என்பதற்கு உங்கள் பதிவை ஒரு உதாரணமாக சொல்லுவேன். சுனாமியை வைத்து ஜோக் அடிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியது மிகவும் துரதிர்ஷ்டம். இப்படி வலையில் எழுதி, பரப்பி , சிரித்து என்ன சாதிக்கப்போகிறீகள்.? அற்ப சந்தோஷத்தை தவிர.

சுனாமியை வைத்து ஜோக் அடிக்கும் அளவுக்கு இப்ப என்ன நடந்துவிட்டது?

அலசல் என்று வந்து பார்த்தால், கடுப்ப கிளப்பிக்கிட்டு...


பெயரில்லா |

மணிக்கு Dondu சொன்னது...

"அலசல் என்று வந்து பார்த்தால், கடுப்ப கிளப்பிக்கிட்டு..."

அதுதான் ஜோக்கின் நோக்கமே என்று நினைக்கிறேன். இதற்குப் பெயர் பார்வைக் கோணத்தை மாற்றுவது என்றுப் பெயர். திடீரென்று வகுப்பறைக்குள் ஒரு பூனை மியாவ் என்றுக் கத்திக் கொண்டே வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் இது.

"உலகத்துல எதையாவது/யாரையாவது கொஞ்சம் கூட வருத்தமடையச் செய்யாத ஜோக் இன்னும் யாருமே என்கிட்ட சொல்லலீங்க".

உண்மைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்