வீட்ல விசேஷங்க
Google Buzz Logo

எல்லாருக்கும் வணக்கமுங்க.

எனக்கு தமிழ் வலைப்பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய எனது உறவினரும் நண்பருமான சீனு அவர்களுக்கு 20 பிப்ரவரி 2005 அன்று திருச்செங்கோட்டில் திருமணம். அவருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

காதலிச்சிக்கிட்டிருக்கிற/காதலிக்கப் போற எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்

அப்றம் என்னப்பத்தி ஒரு நல்ல செய்தி. வேறொன்னுமில்லிங்க, 7 செப்டம்பர் 2005 அன்னிக்கு (வினாயகர் சதுர்த்தி அன்னிக்குதான்) தர்மபுரியில எனக்கும் என் கனவு தேவதைக்கும் திருமணம் முடிவாகியிருக்கு.

இன்னும் ரொம்ப நாள் இருக்கிறதுனால எல்லாரும் மறந்துடுவீங்கன்னு தெரியும். இன்னொருக்கா கல்யாணத்துக்கு முன்னால ஞாபகப்படுத்தறேன்.

அப்ப வர்னுங்க! ஏற்பாட்டையெல்லாம் கவனிக்கப் போகனுமில்லோ

6 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

கோபி,
வாழ்த்துக்கள், இப்பொழுதே :-)
நீங்கள் செப்டம்பரில் ஞாபகப்படுத்த மறந்து விட்டால் :-(


பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்க்கிறேன். குழந்தை படத்தை போட்டுட்டு கல்யாணமுன்னு சொன்ன எப்படிங்க?

ஹி ஹி ஹி....

அக்டோபர்லேயே ஞாபக படுத்துங்க கோபி. ப்ரஷாவே வாழ்த்துக் கொடுத்தரலாம்


பெயரில்லா |

மணிக்கு Kasi சொன்னது...

:-)


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோபி! அதையே நெனைச்சு ஒன்னும் பயப்படாதீங்க! என்னை மாதிரி ரொம்ப தைரியமா இருங்க!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றி.

பாலா,

நான் மறந்தாலும் எங்க அம்மணி மறக்க விடமாட்டாங்க!

விஜய்,

இன்னும் ஆறு மாசத்துக்குள் வளர்ந்துவிடுகிறேன் :-P

மூர்த்தி,

ஹூம்.. பேச்சிலர் வாழ்க்கை முடியப்போறத நெனச்சா நிஜமாவே கவலையாத்தான் இருக்கு


பெயரில்லா |

மணிக்கு கண்ணன் சொன்னது...

வாழ்த்துக்கள் கோபி. அறிவிப்பை வெளியிட இதை விட நல்ல நாள் இருக்க முடியாது :-).