லவ்வுன்னா....
லவ்வுன்னா என்ன? அப்டின்னு 4ல் இருந்து 8 வரை வயதுள்ள மேற்கத்திய குழந்தைகளிடம் கேட்கப்பட்ட போது கிடைத்த பதில்கள்.
யாராவது நம்மைக் கஷ்டப்படுத்தும் போதும் நாம அழுதா அது அவங்களை கஷ்டப்படுத்தும்ன்னு அழாம இருக்கறோம் இல்லியா அதுதான்.
-மாத்யூ (6 வயது)
எங்க பாட்டி மூட்டு வலியினால கால் நகத்துக்கு நகப்பூச்சு பண்ண முடியாம இருக்கும் போது தாத்தா அவருக்கு மூட்டு வலியிருந்தாலும் உதவுறாரு இல்லியா அதுதான்
பொண்ணும் பையனும் வாசனை திரவியங்களை அடிச்சிகிட்டு எங்கையாவது வெளியில போய் ஒருத்தர ஒருத்தர் மொகந்து பாத்துக்கறது
அக்கா அவளோட எல்லா துணிகளையும் என் கிட்ட கொடுத்துட்டு போட்டுக்க வேற துணியில்லாம புதுசா வாங்கிக்க வேண்டியிருக்குதில்ல அதுதான்
ஒரு ஆளும் ஒரு பொண்ணும் ரொம்ப நாளா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்களா இருந்தும் இன்னமும் நல்ல நண்பர்களா இருக்கறது
அன்பான ஒருத்தர் நம்ம பேரை சொன்னா அது மத்தவுங்க சொல்றதவிட வித்யாசமா இருக்கும்
வேற யாரும் கொடுக்கட்டும்னு காத்திருக்காம நாம நம்ம நொறுக்குத் தீனியை மத்தவுங்களுக்கு கொடுக்கறது
கிறிஸ்துமஸ் அன்னிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா கொடுத்த பரிசை பிரிச்சிகிட்டு இருக்காம அவரு சொல்றத காது கொடுத்து கேக்றது
அன்பாயிருக்க கத்துக்கனும்னா உங்களை விரும்பாத யாருகூடன்னா கொஞ்ச நாள் பழகிப் பாக்கனும்
உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட ஏதாவது உங்களைப்பத்தி தப்பான விஷய்த்த நீங்க சொன்னா எங்க அவுங்களுக்கு உங்களைப் பிடிக்காம போயிடுமோன்னு நெனக்கும் போது அவங்களுக்கு இன்னும் அதிகமா உங்களை பிடிக்குது பாருங்க! அதுதான்
அன்பு 2 வகை. ஒன்னு நம்ம அன்பு. இன்னொன்னு கடவுளோட அன்பு. கடவுளோட அன்பு ரெண்டும் சேர்ந்தது
அப்பா அழுக்கு சட்டையும் கையுமா வண்டியை சரி பண்ணிட்டு வந்து நிக்கும்போது அம்மா அவரைப் பாத்து திட்டாம "இப்பகூட ரொம்ப அழகா இருக்கீங்க" அப்டின்னு சொல்றது
ஒரு பையன் தெனமும் ஒரே சட்டை போட்டுக்கிட்டு வந்தாலும் அது நல்லாயிருக்குன்னு சொன்னா அதுதான்
ஒருத்தர் மேல அன்பாயிருக்கனும்னு நெனைக்கிறப்பல்லாம் அவுங்க கிட்ட அதை சொல்லிடனும், நெறய பேரு அத சொல்லுறதே இல்லை
கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது. வேணும்னாலும் வேணான்னு சொல்றது
என்னோட நாயை நாள் பூராவும் தனியா கட்டி வச்சிருந்தாலும் அது நான் வீட்டுக்கு போனவுடனே என் மூஞ்சில நக்குமே அதுதான்
சில பேரை பாத்தா நம்ம கண்ணுல நட்சத்திரம் பறக்குமே அது

-ரெபெக்கா (8 வயது)
பொண்ணும் பையனும் வாசனை திரவியங்களை அடிச்சிகிட்டு எங்கையாவது வெளியில போய் ஒருத்தர ஒருத்தர் மொகந்து பாத்துக்கறது
-கார்ல் (5 வயது)
அக்கா அவளோட எல்லா துணிகளையும் என் கிட்ட கொடுத்துட்டு போட்டுக்க வேற துணியில்லாம புதுசா வாங்கிக்க வேண்டியிருக்குதில்ல அதுதான்
-லாரன் (4 வயது)
ஒரு ஆளும் ஒரு பொண்ணும் ரொம்ப நாளா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்களா இருந்தும் இன்னமும் நல்ல நண்பர்களா இருக்கறது
-டாமி (6 வயது)
அன்பான ஒருத்தர் நம்ம பேரை சொன்னா அது மத்தவுங்க சொல்றதவிட வித்யாசமா இருக்கும்
-பில்லி(4 வயது - இந்த வயசுலயே இன்னா அறிவுபா)
வேற யாரும் கொடுக்கட்டும்னு காத்திருக்காம நாம நம்ம நொறுக்குத் தீனியை மத்தவுங்களுக்கு கொடுக்கறது
-கிறிஸ்ஸி(6 வயது)
கிறிஸ்துமஸ் அன்னிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா கொடுத்த பரிசை பிரிச்சிகிட்டு இருக்காம அவரு சொல்றத காது கொடுத்து கேக்றது
-பாபி(5 வயது)
அன்பாயிருக்க கத்துக்கனும்னா உங்களை விரும்பாத யாருகூடன்னா கொஞ்ச நாள் பழகிப் பாக்கனும்
-நிக்கா(6 வயது)
உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட ஏதாவது உங்களைப்பத்தி தப்பான விஷய்த்த நீங்க சொன்னா எங்க அவுங்களுக்கு உங்களைப் பிடிக்காம போயிடுமோன்னு நெனக்கும் போது அவங்களுக்கு இன்னும் அதிகமா உங்களை பிடிக்குது பாருங்க! அதுதான்
-ஸமந்தா(7 வயது - இன்னா அனுபவம்பா!)
அன்பு 2 வகை. ஒன்னு நம்ம அன்பு. இன்னொன்னு கடவுளோட அன்பு. கடவுளோட அன்பு ரெண்டும் சேர்ந்தது
-ஜென்னி(4 வயது)
அப்பா அழுக்கு சட்டையும் கையுமா வண்டியை சரி பண்ணிட்டு வந்து நிக்கும்போது அம்மா அவரைப் பாத்து திட்டாம "இப்பகூட ரொம்ப அழகா இருக்கீங்க" அப்டின்னு சொல்றது
-கிறிஸ்(8 வயது)
ஒரு பையன் தெனமும் ஒரே சட்டை போட்டுக்கிட்டு வந்தாலும் அது நல்லாயிருக்குன்னு சொன்னா அதுதான்
-நோயெல்லி(7 வயது)
ஒருத்தர் மேல அன்பாயிருக்கனும்னு நெனைக்கிறப்பல்லாம் அவுங்க கிட்ட அதை சொல்லிடனும், நெறய பேரு அத சொல்லுறதே இல்லை
- ஜெசிகா(8 வயது)
கட்டிப்புடிச்சி முத்தம் கொடுக்கறது. வேணும்னாலும் வேணான்னு சொல்றது
-பேட்டி(8 வயது)
என்னோட நாயை நாள் பூராவும் தனியா கட்டி வச்சிருந்தாலும் அது நான் வீட்டுக்கு போனவுடனே என் மூஞ்சில நக்குமே அதுதான்
-மேரி (4 வயது)
சில பேரை பாத்தா நம்ம கண்ணுல நட்சத்திரம் பறக்குமே அது
-கரேன்(7 வயது)
அதெல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன சொல்றீங்க?

7 கருத்து(க்கள்):
மணிக்கு Kangs சொன்னது...
//அன்பாயிருக்க கத்துக்கனும்னா உங்களை விரும்பாத யாருகூடன்னா கொஞ்ச நாள் பழகிப் பாக்கனும்//
//உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட ஏதாவது உங்களைப்பத்தி தப்பான விஷய்த்த நீங்க சொன்னா எங்க அவுங்களுக்கு உங்களைப் பிடிக்காம போயிடுமோன்னு நெனக்கும் போது அவங்களுக்கு இன்னும் அதிகமா உங்களை பிடிக்குது பாருங்க! அதுதான்//
இது என்னுடைய அண்ணன் என்னிடம் சிறு வயதில் காதல் என்றால் என்ன என்றுக் கேட்ட போது கூறியது.
இஷ்டப் பட்டு இருவரும் சேர்ந்து கஷ்டப் படுவதே காதல்.
இது எப்படி இருக்கு கோபி
மணிக்கு Kangs சொன்னது...
கோபி ரொம்ப நன்றி!! என்னுடைய வலைப் பதிவின் முகவரியை (தினம் ஒரு ஸென் கதை ) உங்கள் அக்கம் பக்கம் பார்ப்பதில்..
மணிக்கு மூக்கன் சொன்னது...
செய்யும்போது மகத்துவம் தெரியாமல். விட்டபின் வீரியம் உணர்த்துவது.
- ஹி..ஹி..சொந்த அனுபவம்
மணிக்கு BALA சொன்னது...
//ஒருத்தர் மேல அன்பாயிருக்கனும்னு நெனைக்கிறப்பல்லாம் அவுங்க கிட்ட அதை சொல்லிடனும், நெறய பேரு அத சொல்லுறதே இல்லை//
This is superb, Gopi, from a child!
//அப்பா அழுக்கு சட்டையும் கையுமா வண்டியை சரி பண்ணிட்டு வந்து நிக்கும்போது அம்மா அவரைப் பாத்து திட்டாம "இப்பகூட ரொம்ப அழகா இருக்கீங்க" அப்டின்னு சொல்றது//
இதுவும் அருமை :-)
என்னைப் பொறுத்தவரை, லவ் என்றால், பேணிப் பாதுகாத்தல்!
என்றென்றும் அன்புடன்,
பாலா
மணிக்கு vassan சொன்னது...
கோபி:
சம்பந்தமில்லாததை கேட்பதை பொறுத்துக் கொள்ளவும்.ஒருதடவை உங்கள் பதிவு வழி ஜீ மெயில் முகவரி கிடைத்தது.இன்னும் யாருக்கும் தேவைப்பட்டால் என்னை வாசுச் அட்.ஜீமெயில்.காம் கேட்கச் சொல்லுங்கள்.எனது ஜீமெயிலில் 48 பேரை அழைக்கலாம் என்று சொல்கிறது.
மணிக்கு கோபி சொன்னது...
வாஸன்,
அந்தப் பதிவின் தனிச்சுட்டி: http://higopi.blogspot.com/2004/12/blog-post_28.html
நன்றி!!
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...
தலீவா,
சுகமான பொழுது போக்கு காதல்.
பொன்னான காலத்தை கொல்லும் பொன்னான காலங்கள் காதலிக்கும் காலம்.
நீங்க சொல்லுங்க