சில ஆங்கில வார்த்தைகள் தோன்றிய பின்னனி
Google Buzz Logo

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில ஆங்கில சொற்கள் உண்மையில் வேறு சில ஆங்கில வார்த்தைகளிலிருந்து தோன்றியவை..

உதாரணமாக,

MOPED என்ற சொல் 'Motorized Pedaling' என்பதன் சுருக்கம்.

POP MUSIC என்ற சொல் 'Popular Music'லிருந்து தோன்றியது

BUS என்ற சொல் 'Omnibus' (அனைவரும் என்று பொருள்) என்பதன் சுருக்கம்.

FORTNIGHT என்பது 'Fourteen Nights' (பதினான்கு இரவுகள்).

DRAWING ROOM என்பது 'withdrawing room' அதாவது உணவுக்குப் பின் விருந்தினர் ஓய்வெடுக்கும் அறை

NEWS என்பது (N)orth , (E)ast, (W)est மற்றும் (S)outh ஆகிய நான்கு திசையிலிருந்து வரும் செய்தி.

AGMARK என்ற சொல் 'Agricultural Marketing'லிருந்து தோன்றியது.

JOURNAL என்ற சொல் 'Journey for a day'லிருந்து தோன்றியது.

QUEUE என்ற சொல் 'Queen's Quest'லிருந்து தோன்றியது. அரசாட்சி காலத்தில் ராணியைப் பார்க்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அந்த வழக்கத்தில் தோன்றியதே இந்தச் சொல்

TIPS என்ற சொல் 'To Insure Prompt Service' என்பதன் சுருக்கம்.

JEEP என்ற சொல் 'General Purpose Vehicle (GP)'என்பதன் சுருக்கம். பிற்காலத்தில் GP என்பது JEEP ஆனது.

இது போல தமிழிலும் பல சொற்கள் உண்மையில் வார்த்தைகளின் சுருக்கம்

உங்களுக்கு தெரிந்த இது போன்ற (வார்த்தைகள் சுருங்கி உருவான) தமிழ் சொற்களை சொல்லுங்களேன்...

9 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

நல்ல தகவல்கள் கோபி கண்ணா!


பெயரில்லா |

மணிக்கு தமிழ்வாணன் சொன்னது...

நல்ல பதிவு.


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

தகவல்களுக்கு நன்றி கோபி.

இதுபோல் ஓசி - OC (.... cost) என்று ஏதோ சொல்வார்களே!?


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

OC என்பது "On Company Service" என்பதன் சுருக்கம், ஆங்கிலேய ஆட்சியில் தபால்களை கட்டணமின்றி அனுப்ப கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்திய சுருக்கம். :-)

(இப்போதும் கூட இந்திய அரசாங்கம் OGS "On Government Service" என்ற குறிப்புடன் தபால்களை அனுப்புகிறது)


பெயரில்லா |

மணிக்கு ரவியா சொன்னது...

"ஜெராக்ஸ்" என்பது rank xerox என்ற கம்பெனி போட்டோ காப்பி இயந்திரம் தாயரிப்பில் முன்னனியில் இருந்ததால் "ஜெராக்ஸ்" என்ற சொல் இன்னமும் உபயோகிகப் படுகிறது.


பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.சம்மி சொன்னது...

இருந்தாலும் இந்த TIPS-ன் விரிவாக்கம் எனக்கு புதுசு. நால்லா இருந்தது அண்ணா.


பெயரில்லா |

மணிக்கு என்றென்றும் அன்புடன் பாலா சொன்னது...

கோபி,
அது O.I.G.S என்று நினைக்கிறேன். அதாவது, On India Govt. Service உபயோகமான தகவலுக்கு நன்றி.

Do you know that the word "juggernaut" (a large heavy truck in British usage) has its origin in "Jagannath", title of Vishnu ? வியப்பாக இருக்கிறது அல்லவா ?

'Juggernaut' also means a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path as per Merriam Webster.


பெயரில்லா |

மணிக்கு Dondu சொன்னது...

News என்பதற்கு விளக்கம் சரியில்லை. new என்பது புதியது, news அதன் பன்மை. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் அதே விதியைத்தான் பின்பற்றுகிறார்கள். ஆகவே கூற முடிந்தது. nouvelles, Neuigkeiten.


பெயரில்லா |

மணிக்கு mayavarathaan சொன்னது...

south-east, north-west ellam eppadi sethuppaanga?! :)