நிலாச்சாரலில் மென்பொருள் வல்லுனனின் பராசக்தி
சற்று நேரம் ஓய்வாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சரி, பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் வலைதளங்களை மேய்ந்து பல நாட்களாயிற்றே என எண்ணியிருந்தேன்.
மின்னஞ்சல்களுள் ஒன்று "மென்பொருள் வல்லுனன் பராசக்தி பட நீதிமன்ற வசனம் பேசினால் எப்படியிருக்கும்" என்ற தலைப்புடன் வந்திருந்தது.
மின்னஞ்சலில் இருந்த சுட்டியைத் தட்டினால், லண்டனைச் சேர்ந்த நிலாச்சாரல் வலைத்தளத்திற்கு சென்றது.
ஆஹா! மிக அருமையான நகைச்சுவை!
பிறகு அந்தத் தளத்திலுள்ள ஸ்பெஷல்ஸ் மற்றும் சில பகுதிகளை மேம்போக்காய் நோட்டமிட்ட பிறகு பார்த்தால், இத்தளத்தின் பின்னனியில் ஒரு உலகளாவிய குழுவே இருப்பது தெரிய வந்தது.
வளர்க நிலாச்சாரல் குழுவினரின் பணி! வாழ்க தாய் தமிழ் மொழி!
சரி, சரி,இந்த நிலாச்சாரலை அனுபவிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
9 கருத்து(க்கள்):
மணிக்கு U.P.Tharsan சொன்னது...
நன்றி ஒரு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு
மணிக்கு mayavarathaan சொன்னது...
டேய் கோபி! உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்திடா! :)
மணிக்கு கோபி சொன்னது...
மாயவரத்தான்,
அடப்பாவி! செய்யாதீங்கன்னு சொல்றத செய்யறதுன்னா என்ன சந்தோசம் நம்மாளுக்கு!
ப்ரியமுடன்,
கோபி
மணிக்கு தமிழ்வாணன் சொன்னது...
ஹாய் கோபி அண்ணா,
நானும் அந்த நகைச்சுவை பக்கத்தை பார்த்தேன். மிகவும் நல்லது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
முன்பு ஒருவர் புறோகிறாமிங் பற்றி குறள் வடிவில் எழுதியிருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருந்தால் அதனையும் இணைப்பில் சேர்த்துவிடுங்கள்.
உங்களுடைய பெயரில் எனது புளொக்கில் ஒருவர் கருத்து எழுத முயன்றிருந்தார். அது நீங்களா?
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்
மணிக்கு கோபி சொன்னது...
தமிழ்வாணன்,
வணக்கம்
உங்கள் வலைப்பதிவில் கோபி என்ற பெயரில் ஏதோ எழுத முயற்சித்திருப்பது நானல்ல, யாரென்றும் விளங்கவில்லை. (அவர் உபயோகித்துள்ள சுட்டிகள் எந்த வலைத்தளத்திற்கும் செல்லவில்லை)
அவரும் கோபி என்ற பெயரிலேயே கருத்துக்கள் பதிந்தால் பெயர்க்குழப்பம் வருமே! யாரென்று தெரிந்தாலாவது பேசிப்பார்த்து தனித்துவத்தை காத்துக் கொள்ள முடியும்...
ம்ம்.. என்ன செய்யலாம்...
மணிக்கு Rasikow Gnaniyar சொன்னது...
அது எழுதினது நான் தான் கோபி.
மிக்க நன்றி
www.nilavunanban.blogspot.com
Thanks Gopi...thankyou for introducing and appreciating my articles PARASAKTHI...nanri.....
மணிக்கு கோபி சொன்னது...
ரசிகவ் ஞானியார்,
வணக்கம்,
உங்கள் பெயரை பராசக்தி படைப்பில் பார்த்தவுடனே அது நீங்களாய் இருக்குமோ என எண்ணினேன்.
கவிதையிலும் கலக்கறீங்க! நகைச்சுவையிலும் கலக்கறீங்க! ப்ரமாதம்!!
மணிக்கு Krishna சொன்னது...
Thanks for that. Hilarious!
நீங்க சொல்லுங்க