நாலடியார்
Google Buzz Logo

நாலு பேரு கூட வேடிக்கை பாத்துட்டு இருந்த என்னிய நாற்சந்தியில எறக்கி விட்டுட்டாரு கைப்புள்ள. அப்போலேர்ந்து எல்லாமே நாலு நாலாத் தெரியுதுங்க.

நான் பார்த்த நான்கு பணிகள்

1. மின்பொறியாளன்
2. வன்பொறியாளன்
3. மென்பொறியாளன்
4. மேலாளன் (மேல் மாடி காலி :-) )

மீண்டும் மீண்டும் பார்த்த நான்கு திரைப்படங்கள்

1. தில்லுமுல்லு
2. தம்பிக்கு எந்த ஊரு
3. பம்மல் K சம்பந்தம்
4. பஞ்சதந்திரம்

வசித்த நான்கு இடங்கள்

1. விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் (கனவுலதான் :-P )
2. சிங்காரச் சென்னை
3. நியுயார்க் (9/11க்கு முன்னாடியே எஸ்கேப்)
4. பாக்நகர் (ஹைத்ராபாத்துங்கோவ்...)

விரும்பி பார்க்கும் நான்கு தொல்லைக்காட்சி நிகழ்ச்சிகள்

1. Pogo - Just For Laugh Gags (எப்பவுமே சூப்பர்)
2. விஜய் டிவி லொள்ளு சபா (இப்ப வர வர அவ்வளவு நல்லாயில்ல)
3. விஜய் டிவி கலக்கப் போவது யாரு(என்னா டேலண்ட்.. எங்கெங்கையோ இருந்து வந்து கலக்குறாங்கபா)
4. Friends (செம காமெடிபா. புடிச்ச Characters - Joey மற்றும் Pheebee)

ஊர் சுற்றிய நான்கு இடங்கள்

1. ஒகேனக்கல் (நம்மூருக்கு பக்கமுங்க)
2. சபரிமலை (என்னை கேட்டிங்கன்னா பக்தர்கள் மட்டுமில்ல.. எல்லோரும் போகவேண்டிய பயணம் இது!)
3. Times Square நியுயார்க் (செம கலர்பா)
4. WTC நியுயார்க் (இனிமே யாரும் பாக்க முடியாது :-( )

விருப்பமான உணவு வகைகள் நான்கு

1. காராபூந்தியை தயிரில் கலந்து (என்ன பேருங்க இதுக்கு...)
2. இனிப்பு வகைகள் (எல்லாமே)
3. நூடுல்ஸ்
4. மீனும் முட்டையும்

பிடித்த விளையாட்டுக்கள் நான்கு

1. சேஸ் (சரியாப் படிங்கப்பா... ச்சே... மனசெல்லாம் அழுக்கு...)
2. கேரம் போர்டு (நாம எப்பவுமே ஜெயிக்கற கட்சிப்பா)
3. கில்லி (என்னா பெரிய கிரிக்கெட்டு.. நாங்கல்லாம் ஆடினா..)
4. வாலிபால் (பின்னே.. நக்சலைட்டுங்களையே சாதுவாக்கின விளையாட்டாச்சே!)

அழைக்க விரும்பும் நான்கு வலைப்பதிவாளர்கள்

1. பினாத்தல் சுரேஷ்
2. என்றென்றும் அன்புடன் பாலா
3. மாயவரத்தான்
4. துளசியக்கா

அப்பாடா ஒரு வழியா நம்ம வேலை முடிஞ்சது. இனி படிக்கறவுங்க பாடு..

8 கருத்து(க்கள்):

♠ யெஸ்.பாலபாரதி ♠ |

சந்தோசமாயிருக்குப்பூ... நீங்களும் மாட்டி கிட்டதுல..
:)


கைப்புள்ள |

//1. காராபூந்தியை தயிரில் கலந்து (என்ன பேருங்க இதுக்கு...)//

ராய்த்தா...Raitha.

உங்க பதிவுலேயே உங்க ப்ரோக்ராமிங் தெறமையெல்லாம் தெரியுது...கலக்குறீங்க. ஒன்னு ஒன்னா ஒங்க பதிவுகளைப் படிக்கிறேன்.


கோபி(Gopi) |

பாலபாரதி,

உங்க ட்ரெய்லர் பாத்தனுங்க.. சீக்கிரமா நீங்களும் விளையாடுங்க..

கைப்புள்ள,

ஆங்.. அதான்.. அதேதான்..


G.Ragavan |

மொதல்ல கைப்புள்ள நான்மணிக்கடிகை எழுதுனா நீங்க நாலடியாரா! நாலாருங்க...நாலாருங்க.....


காரபூந்தியைத் தயிரில் கலந்தா பூந்தி ராய்தா... அதுக்கு எல்லாரும் வாய் தா வாய் தான்னு ஓடுவாங்க...

கலக்கப் போவது யாரு ஒரு நல்ல நிகழ்ச்சி. நானும் பல வாரங்கள் பாத்திருக்கிறேன். வித்தியாசமா இருக்கும். காமெடியாவும் இருக்கும்.


enRenRum-anbudan.BALA |

கோபி,
இல்லற வாழ்க்கை இனிதே செல்கிறதல்லவா.

அலுவலகத்தில் கொஞ்ச காலமா அதிக டென்ஷன் !!! அதான், வலைப்பதிவுகள் பக்கம் தலை காட்ட முடியவில்லை.

என்னை ஞாபகம் வைத்து பதிய அழைத்தமைக்கு என் நன்றிகள். பிறகு வந்து நீங்கள் கேட்டதைப் பதிகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


Agent 8860336 ஞான்ஸ் |

//சபரிமலை (என்னை கேட்டிங்கன்னா பக்தர்கள் மட்டுமில்ல.. எல்லோரும் போகவேண்டிய பயணம் இது!)//

சாமியேய்... சரணம் ஐயப்பா

==============================

எல்லாருமேவா!

சிதம்பரத்துலேர்ந்து நம்ம அப்பாசாமி போனாரு சபரிமலைக்கி, அப்புறம் பக்தி முத்திப்போச்சு அவருக்கு!

"சிந்தா விஷ்டயாய சியாமளே"-வா ஆயிட்டாங்க அவரோட மனைவி!!

(பாடகர் திரு.யேசுதாஸ் சபரிமலைக்கு போகனும்னு நெனச்சும் அனுமதி கெடக்கலேன்னு சொன்னதா, எனக்கு ஒரு ஞாபகம்- என் நினைவு தவறாகவும் இருக்கலாம்.)


கோபி(Gopi) |

ஞான்ஸ்,

சபரிமலைக்கு சாமியாராத்தான் போகனும்னு சொல்லலைங்க. அதன் இயற்கை சூழலை ரசிக்க சாதாரணமா கூட போகலாம்னு சொன்னேன். :-)

முதல் முறை நான் போனப்போ கூட மாலை போட்டுக்காம சாதாரணமாத்தான் போனேன். (என்ன.. 18 படியேற விடமாட்டாங்க.. கோயிலுக்கு சைடு வழியில போகனும்.)

//பாடகர் திரு.யேசுதாஸ் சபரிமலைக்கு போகனும்னு நெனச்சும் அனுமதி கெடக்கலேன்னு சொன்னதா, எனக்கு ஒரு ஞாபகம்- என் நினைவு தவறாகவும் இருக்கலாம்//

பாடகர் திரு.யேசுதாஸ் அனுமதி மறுக்கப்பட்டது(இன்றுவரை) குருவாயூர் கோவிலில்.

சபரிமலையில் மதபேதங்கள் இல்லீங்க..
எருமேலி சாஸ்தா கோயிலின் எதிரே வாவர் சன்னிதி (மசூதி) இருக்கிறது.. இங்கே மாலை போட்டு வரும் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல சபரிமலை கோவில் அருகே வாவர் தர்கா உண்டு.


lollu-sabha |

அனைத்து லொல்லு சபா விடியோக்களையும் பார்த்து சிரித்து மகிழ இங்கே வருகை தாருங்கள்