வேலை.. வேலை.. வேலை..
சக பணியாளர்களை பணிநீக்கம் செய்துவரும் நிறுவனத்தில் வேலை பயத்தில் சிலர் உதிர்த்தது:
சூர்யா:தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம். என்னையும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கன்னு சொன்ன அது தன்னம்பிக்கை! என்னை மட்டும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கனு சொன்னா அது தலைக்கணம்!
வடிவேல்:எவ்வளவு நேரந்தான் வேலைல இருக்கற மாதிரியே நடிக்கறது.
நீங்க அவங்கள ஒன்னுமே பண்ணலையா?
வடிவேல்: எத்தினி வாட்டி வேலைய விட்டு தூக்கி்னாலும் வேலைக்கு வர்றான்டா.. இவன் ரொம்ப நல்லவன்னீட்டாம்மா..
ரஜினி: கண்ணா, எப்ப வேலைக்கு வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்ட்டா வந்துடுவேன்.
அதிகமா வேலை செஞ்ச பொம்பளையும் கம்மியா சம்பளம் வாங்கின ஆம்பளையும் ஒரு கம்பெனியில இருந்ததா சரித்திரம் கெடியாது.
(அதெல்லாம் இருக்கட்டும் சார்.. நூறு பேரை வேலைய விட்டு தூக்கனும்னா என்ன செய்யலாம் சார்?)
கலைஞர்: உடன்பிறப்பே, கவலை தோய்ந்த உன் முகம் என் கண்ணை விட்டு அகலாத வேளையிலே உனது வேலை பற்றி அம்மையாரின் அராஜக ஆட்சி எடுத்த இந்த முடிவுக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இந்த இடத்தில் உனக்கு இடமில்லை என்று அம்மையார் சொல்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த போது மட்டுமல்ல எப்போதும் என் இதயத்திலே உனக்கு இடமுண்டு என்பதை நீ கருத்தில் கொள்வாய்.
குங்குமம் விளம்பரம்: கேன்டீன் சாப்பாடுன்னா சும்மாவா? குமுறுகிறார் கொழுக் மொழுக் கணிப்பொறியாளர் கனிகா. இந்த வாரமாவது வேலை இருக்குமா? மென்பொருள் பொறியாளர்கள் தூக்கம்!
வாங்கிவிட்டீர்களாாாாாா!
14 கருத்து(க்கள்):
;-))
கலக்கலா இருக்கு! அனேகமா இதெல்லாம் உங்க ஆஃபீஸ்ல கேக்கற டயலாக்கா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு?!?!;)
யோசிப்பவரே,
//உங்க ஆஃபீஸ்ல கேக்கற டயலாக்கா இருக்குமோன்ன//
ஒருவேளை இது உண்மையா இருக்குமோ.. ;-)
அப்ப என்னோட வேலை... :-(
ஏனுங்க.. இப்படி வயித்துல புளிய கரைக்கறீங்களே.. நியாயமா..
:-)
நல்லா எழுதியிருக்கீங்க கோபி!
:)-
கடைசியா போட்ட 3டி பாக்க நீங்க வரலியே? பிசியா?
//அப்ப என்னோட வேலை... :-(//
கவலை இல்லாமல் பிளாக் எழுதலாமில்ல....? ;-)
கைப்புள்ள,
ரெண்டு நாளு முன்னாலயே பாத்துட்டமில்ல..
ஆனா நமுக்கு முன்னால எல்லாரும் சொல்லிட்டாய்ங்களா.. நாம வேற என்னத்தை சொல்லப் போறோம்னு..
கோபித்தம்பி,
இது உங்க ஆஃபீஸ் டயலாகோன்னு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்:-)
யோசிப்பவரே,
//கவலை இல்லாமல் பிளாக் எழுதலாமில்ல//
ஆகா.. இந்த வேலை நல்லாத்தான் இருக்கும்.. :-)
உண்மையில சில கம்பெனில இந்த வேலைக்கு காசு கூட நெறைய தர்றாங்க. ஆனா எழுதறவுங்க யாருன்னு எல்லாம் பாத்தீங்கன்ன CEO, VP மாதிரி கம்பெனியோட பெரிய தலைங்க.. :-D
//ஆனா எழுதறவுங்க யாருன்னு எல்லாம் பாத்தீங்கன்ன CEO, VP மாதிரி கம்பெனியோட பெரிய தலைங்க //
ha ha haa;)
துளசியக்கா,
சும்மா ஜோக்குங்க.. :-)
உண்மையா இந்தியாவுல இப்ப தகவல் தொழில்நுட்ப பணிச்சந்தை நெலமை அவ்வளவு மோசமா இல்லீங்க..
கோபித்தம்பி,
அதென்ன எனக்குப் பக்கத்துலே மட்டும் ஒரு குப்பைக்கூடை? கடாசறதுக்கா?
துளசியக்கா,
//அதென்ன எனக்குப் பக்கத்துலே மட்டும் ஒரு குப்பைக்கூடை? கடாசறதுக்கா?//
அது பின்னூட்டம் வேணான்னு நெனைச்சீங்கன்னா அழிக்கறதுக்கு.
நீங்க பாத்தா உங்க பக்கத்துல தெரியும்.
மத்தவுங்க பாத்தா அவுங்க பக்கத்துல இருக்குற மாதிரி தெரியும். நான் பாத்தா எல்லாருக்கும் பக்கத்துல தெரியும்.
நான் ஒன்னும் பண்ணலைங்க.. இது ப்ளாக்கரே குடுக்கற வசதி.
:-)
கோபி
// இந்த வாரமாவது வேலை இருக்குமா? மென்பொருள் பொறியாளர்கள் தூக்கம்!//
இது எந்த கடைன்னு சொன்னா நானும் அங்க போய் கூலி வேலை செய்வேன் :-)
//இந்த வாரமாவது வேலை இருக்குமா? //
வேலைன்னுநான் சொன்னது JOBங்க நீங்க WORKனு நெனச்சீட்டிங்களா..
:-)
நீங்க சொல்லுங்க