உமர் பன்மொழி மாற்றி
Google Buzz Logo

நம்மில் பலருக்கு இந்தி பேசத் தெரியும் ஆனால் படிக்கத் தெரியாது. உதாரணமாக BBC இந்தி வலைத்தளத்தில் (http://www.bbc.co.uk/hindi/) உள்ள‌ செய்தியை இந்தி பேச மட்டுமே தெரிந்தவர் புரிந்து கொள்ள தீர்வாக அமைந்ததே உமர் பன்மொழி மாற்றி. இந்தியில் உள்ள அந்த செய்தியை வெட்டி உமர் பன்மொழி மாற்றியில் ஒட்டி "தமிழுக்கு மாற்ற" தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த செய்தியின் இந்தி உச்சரிப்பை தமிழில் படிக்கமுடியும்.

இதே போல, எந்த ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பையும் மற்றொரு மொழியில் மாற்றி படிக்க இயலும்.

மேலும், தட்டச்சிடும் போது வேண்டிய மொழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரே இடத்தில் பல மொழிகளில் தட்டச்சிட முடியும்.

தேனீ இயங்கு எழுத்துருவையும், இன்னும் பல செயலிகளையும், ஆக்கங்களையும் தமிழ்க் கணிமை உலகுக்கு கொடையளித்த உமர் தம்பி அவர்களின் நினைவாக அவர் பெயரை இந்த பன்மொழி மாற்றிக்கு சூட்டியிருக்கிறேன்.

உமர் அவர்களோடு எனக்கு மின்னஞ்சல் தொடர்பு (அவரின் எழுத்துருவை தகடூருக்கு பயன்படுத்த அனுமதி பெறுவது தொடர்பாக) மட்டுமே இருந்தது. தன்னலமற்ற அவரின் அமைதியான தமிழ் கணிமைப் பணிகளை பாராட்ட வரிகளே இல்லை. அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பலர் அவர் குறித்து பேசும் போது, புகழ் விரும்பாத அவர் வாழ்ந்த காலத்தில் நானிருந்ததை பெருமையாய் நினைக்கிறேன்.

இந்த மாற்றியை உருவாக்க ஊக்கம் அளித்த‌ முனைவர் நா.கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/ucedit/Multi.html

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சலிடுங்கள்.

25 கருத்து(க்கள்):

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) |

உங்களுடைய முயற்சிகள் சிறப்பானவை இதனை தொடந்து செய்து வருவதற்காக வாழ்த்துக்கள். :-)))))


ALIF AHAMED |

வாழ்த்துக்கள் தன்னலமில்லா உங்கள் சேவைக்கும் உமர் தம்பி சேவைக்கும்


ரவி |

சிறப்பான இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..


Unknown |

வாழ்த்துகள் !!


பினாத்தல் சுரேஷ் |

கலக்குங்க தலை.

உமர் பெயர் வைத்தது மிகவும் பாராட்டத்தக்கது.


தகடூர் கோபி(Gopi) |

அனைவருக்கும் நன்றி,

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.

ப்ரியமுடன்,

கோபி


senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) |

http://www.higopi.com/ucedit/Hindi.html

இங்க போய் "pai" என்று அடித்தால் "பை" என்றுதான் வருகிறது எதாவது தவறு செய்கிறேனா?


தகடூர் கோபி(Gopi) |

குமரன் எண்ணம்,

இந்தி மொழிமாற்றியில் தட்டச்சிட்டால் தமிழில் வருகிறதா? :-O குழப்பமாய் இருக்கிறதே...

ஒருமுறை Browser Cacheஐ Clear செய்துவிட்டு முயன்று பாருங்கள்.

அப்படியும் சரிவரவில்லை எனில்

1) நீங்கள் பயன்படுத்தும் உலாவி என்ன?
2) Firefoxஎனில் TamilKey அல்லது அது போன்ற Extensionsஏதும் நிறுவியிருக்கிறீர்களா
3) எ-கலப்பை நிறுவியிருக்கிறீர்களா? எனில் அதன் மூலம் தமிழ்மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது.


senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) |

ஈகலப்பைதான் culprit இப்போது சரியாக வருகிறது நன்றி.


senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) |

धन्यवाय्


senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) |

ரெண்டு விஷயம்

1. ஈகலப்பை இருந்தால் அது உங்களின் மாற்றிக்கு முன் மாற்றி விடுகிறது.

2. கூகிள் டூல் பார் இருக்கிறது F12 அடித்தால் கர்ஸர் அங்கு சென்று விடுகிறது.


தகடூர் கோபி(Gopi) |

குமரன் எண்ணம்,

1) எ-கலப்பை("எறும்புகளின் கலப்பை") இயங்குதள அளவில் Key Capture செய்கிறது. தகடூர் உலாவி அளவில் Key Capture செய்கிறது.

2) கூகிள் டூல் பார் உலாவியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் உலாவி அளவில் தகடூருக்கு முன் அது Key Capture செய்துவிடுகிறது.

எனவே இந்த இரு குறைகளையும் களைய இயலாது - தொழில்நுட்ப வரையரை :-(


தகடூர் கோபி(Gopi) |

கைகாட்டி,

இதன் நிரல் JavaScriptல் எழுதப்பட்டுள்ளது எனவே உலாவியில் மட்டுமே இயங்கும். இந்த நிரலை அப்படியே EXEயாக மாற்ற இயலாது. ஆனால் இதன் நிரலிலுள்ள செயல்வழியை கொண்டு புதிய C நிரலாக எழுதி அதை EXEயாக்கலாம்.

நேரமிருக்கும் போது முயல்கிறேன்.

//அப்படி மாற்றிக் கொடுத்தீர்களானால் இதனை இணையம் இல்லாத கணினிகளிலும் பயன்படுத்தலாம்.//

இந்த வலைப்பக்கத்தை அப்படியே சேமித்து
அல்லது இந்தச் சுட்டியின் மூலம் பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாத கணினிக்கு மாற்றிப் பயன்படுத்தலாமே.


enRenRum-anbudan.BALA |

Gopi,
இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

I will try it out and get back.


மதி |

நான் ஆங்கிலத்தை தமிழ் மாற்றம் செய்து பார்த்தேன். சில வார்த்தைகள் சரியாக வருவதில்லையே. இது இந்திய மொழிகளுக்கு மட்டும் தானா?

உதாரணத்திற்கு

"Type in English and get it converted to selected language."

என்பதை மாற்றியது

"ட்ய்பெ இன் எங்லிஷ் அன்த்³ கெ³த் இத் சொன்வெர்தெத்³ தொ செ'லெச்தெத்³ லஙுஅகெ³"

இப்படிவருகிறது.
(தெரிந்த மாணவர் ஒருவருக்கு ஆங்கில உச்சரிப்பில் உதவுவத‌ற்காக முயற்சி செய்தேன்)


தகடூர் கோபி(Gopi) |

மதி,

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றும் போது Phonetic(Romanized) Tamil ஆக மாறுவதால் ஆங்கில உச்சரிப்பு அப்படியே வராது.

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தின் உச்சரிப்பு சில வார்த்தைகளில் ஒன்றாகவும் வேறு சில வார்த்தைகளில் வேறாகவும் இருக்கும். (உதாரணமாக 'C' சில இடங்களில் 'ச்' உச்சரிப்பையும் சில இடங்களில் 'க்' உச்சரிப்பையும் தரும்)

எனவே ஆங்கில உச்சரிப்பை அப்படியே தமிழுக்கு மாற்றுவது கடினம். இந்திய மொழிகளில் இந்தப் பிரச்சனை இல்லை.


சேதுக்கரசி |

வாழ்த்துக்கள் கோபி.

சில சிக்கல்கள் உள்ளன. இப்போது தான் அன்புடன் குழுமத்தில் விரிவான பின்னூட்டம் அளித்தேன்.


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி,

விரிவான அலசலுக்கும் குறைகளை சுட்டியமைக்கும் நன்றி. விரைவில் (களையக்கூடிய)
குறைகளை களைந்து விரிவான மடலிடுகிறேன்.


மெளலி (மதுரையம்பதி) |

This is useful Gopi. Thanks.


அதிரைக்காரன் |

வாழ்த்துக்கள் தன்னலமில்லா உங்கள் சேவைக்கும் உமர் தம்பி சேவைக்கும்!


உண்மைத்தமிழன் |

ராசா தன்னலமில்லாத வேலை செஞ்சிருக்கடா கண்ணு..

உன்னை எப்படி பாராட்டறதுன்னே தெரியல.. நல்லாயிரு..

அப்பன் முருகன் அருளால உனக்குத் தீர்க்காயுசு கிடைக்கும்..


தகடூர் கோபி(Gopi) |

உண்மைத் தமிழன்,

இது மிகப் பழைய இடுகை. ப்ளாக்கர் செய்தியோடையில் ஏதோ பிழை. எனவே தமிழ்மணம் எனது இன்றைய ரஜினி இடுகைக்கு பதிலாக இந்த இடுகையை இற்றைப்படுத்திவிட்டது.


SP.VR. SUBBIAH |

தகவலுக்கு நன்றி நண்ப்ரே!


nagoreismail |

உன்னத முயற்சிக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்


தமிழ்பித்தன் |

உங்கள் போன்றவரும் தமிழுக்ககிடைத்தது பெருமையே உங்கள் முயற்சிக்கு நன்றிகள்