அதியமான் எழுத்துரு மாற்றி
இன்றைக்கு பல விதமான "தமிழ்கள்" இணையத்தில் உள்ளன. உதாரணமாக TSCII,TUNE,TAB/TAM,Unicode என சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் ஒருங்குறி(Unicode)யை மட்டும் பல இயங்குதளங்கள்(OS), செயலிகள்(applications) ஆகியன எந்த எழுத்துருவும் நிறுவாமலேயே படிக்க கூடிய வசதியைத் தருகின்றன. மற்ற தகுதரங்களை(Encoding Standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும்.
சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்.
இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும், TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றி படிக்கலாம்.
இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை பயன்படுத்தும் வலைத்தள முகவரியை இட்டு, அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் தரத்தை தெரிவு செய்து, "Convert"ஐத் தட்டினால் அந்த தளம் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு தெரியும். தற்சமயம் உள்நுழைவு(login) தேவைப்படும் தளங்களை இந்த மாற்றியில் பார்க்க இயலாது.
மேலும், இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை கொண்ட எழுத்துக்களை (பொங்கு தமிழ் மாற்றியைப் போல) வெட்டி ஒட்டி ஒருங்குறிக்கு மாற்றவும் பயன்படுத்தலாம்.
பொங்குதமிழ் எழுத்துரு மாற்றியால் ஈர்க்கப்பட்டு செய்த இந்த மாற்றிக்காக, பொங்குதமிழ் மாற்றி அளித்த சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும் , இந்த மாற்றி உருவாக்க ஊக்கம் அளித்த முனைவர் நா.கணேசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
அதியமான் எழுத்துரு மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/adhiyaman/
பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.
1 கருத்து(க்கள்):
இம்மாற்றியை சோதித்துப் பார்க்க,
TSCII தகுதரம் பயன்படுத்தும் தளத்திற்கு எடுத்துக்காட்டாக http://groups.yahoo.com/group/tamil-ulagam/
TUNE தகுதரம் பயன்படுத்தும் தளத்திற்கு எடுத்துக்காட்டாக http://ezilnila.com/tane/
நீங்க சொல்லுங்க