அதியன் 2.0.4 வெளியீடு
Google Buzz Logo

அதியன் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியின் அடுத்த வெளியீடான 2.0.4ஐ இங்கே தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:

1) குமுதம், தினகரன் ஆகிய வலைத் தளங்களின் சில வலைப்பக்கங்களில் திடீரென ஒருங்குறி மாற்றம் செயல்படவில்லை (மற்ற தளங்களிலிருந்து நேரடியாய் விளம்பரம் வெளியிடும் தளங்களில் Firefox Security Exception காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டது.) இவ்வழு இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வெளியீடு மொசில்லா நீட்சிகள் தளத்திலும் கிடைக்கும். ஏற்கனவே இந்நீட்சியை நிறுவியுள்ளோரின் உலாவிகள் புதுப்பிக்க சோதிக்கும் போது தானியங்கு முறையில் தரவிறக்கி புதுப்பித்துக் கொள்ளும்.

பி.கு: இந்த வெளியீடு சில நாட்களுக்கு முன்பே பதிவிறக்கக் கிடைத்தாலும் இது குறித்த அறிவிப்பை இன்றுதான் வெளியிட முடிந்தது (அலுவலகத்துல ஆணி அதிகமாயிடிச்சிங்க)

12 கருத்து(க்கள்):

இராம் |

நன்றி..... ரோஜா படபுகழ் அரவிந்த்சாமி அவர்களே.... :)


கோபி(Gopi) |

இராம்,

ஆகா, மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கைய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கைய்யா..

முடியலை... (அது இருக்கட்டும். நீட்சியை பயன்படுத்திப் பார்த்து கருத்து சொல்லுங்க)


பெயரில்லா |

மன்றத்தில் இதனை எழுதி இருக்கிறேன் கோபி.

மூர்த்தி.


கோபி(Gopi) |

மூர்த்தி,

நன்றி. நீங்களும் பயன்படுத்திப் பார்த்து கருத்து சொல்லுங்க


உண்மைத் தமிழன்(15270788164745573644) |

தம்பி அரவிந்த்சாமி..

நானும் டவுன்லோட் செய்திருக்கிறேன். பின்னாளில் பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி.

கூடுதல் தகவல் : மதுபாலாவுக்காக காத்திருக்க வேண்டாம் தம்பி. அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம்.. அதுனால..


கோபி(Gopi) |

உண்மைத் தமிழன்,

//பின்னாளில் பயன்படுத்திக் கொள்கிறேன்.// நன்றிங்கண்ணா

//அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம்..//

மதுபாலா தான் 1971லயே செத்துட்டாங்களே. அவங்களுக்கு எப்படிண்ணா காத்திருக்க முடியும். :-P

மக்களே,

என்னைப் போய் அரவிந்த்சாமி மாதிரி இருக்கேன்னு சொல்றீங்களே... உங்களுக்கே அடுக்குமா? நியாயமா? இதக் கேக்க யாருமே இல்லியா...


♠ யெஸ்.பாலபாரதி ♠ |

//மக்களே,

என்னைப் போய் அரவிந்த்சாமி மாதிரி இருக்கேன்னு சொல்றீங்களே... உங்களுக்கே அடுக்குமா? நியாயமா? இதக் கேக்க யாருமே இல்லியா...//

ஏன் இல்லை. நான் இருக்கேன்.

உண்மையை இப்படி ப்ளாக்குள மட்டும் சொல்லாம.. ஊரெல்லாம் போஸ்ட்டர் போட்டு ஒட்டுங்கப்பா.. !

இப்ப சரிய தல.

:)


கோபி(Gopi) |

தல பாலா,

நான் அப்பவே உங்க கிட்ட சோன்னேன்.. வேணாம் நான் தீவிர பா.க.ச ஆளாயிடுவேன்னு.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்..

அடுத்த இடுகை பா.க.ச சிறப்பு இடுகை தான்..


இராம் |

/(அது இருக்கட்டும். நீட்சியை பயன்படுத்திப் பார்த்து கருத்து சொல்லுங்க)//

நல்லாவே வேலை செய்யுதுங்க..... :)

/என்னைப் போய் அரவிந்த்சாமி மாதிரி இருக்கேன்னு சொல்றீங்களே... உங்களுக்கே அடுக்குமா? நியாயமா? இதக் கேக்க யாருமே இல்லியா...//

ஏனுங்க சார்...நாந்தான் ரோஜா பட புகழ்' அரவிந்த்சாமி தானே சொன்னேன்...

நீங்க இப்போயிருக்கிற வீங்கிப்போன சாமியே காட்டுறீங்க.... :(((


இராம் |

/
அடுத்த இடுகை பா.க.ச சிறப்பு இடுகை தான்..//

ஹைய்யா... எப்போன்னு சொல்லிவிடுங்க.... ஓடி வந்துறோம்... :)


ப்ரியன் |

/*அடுத்த இடுகை பா.க.ச சிறப்பு
இடுகை தான்.. */

சீக்கிரம்!சீக்கிரம்!!


கோபி(Gopi) |

போட்டாச்சி.. போட்டாச்சி...

இங்கன போய் பாருங்க.