அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அப்பாடா... சென்னை வலைப்பதிவர் பட்டறை '07 நல்ல படியா முடிஞ்சதுங்க.
நிகழ்வுகளைப் பத்தி வந்த பதிவுகளை நீங்க படிச்சிருப்பீங்க. இன்னும் படிக்காதவங்க எல்லாம் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட்க்கு ஒரு நடை போய் பாத்து எல்லாத்தையும் ஒரே மூச்சுல படிச்சிட்டு வந்துருங்க பாக்கலாம்... (நானும் எல்லாத்தையும் திருப்பித் திருப்பி சொல்லி உங்கள ப்ளேடு போட வேண்டியிருக்காதில்ல...)
சரி சுருக்கமா சொல்றேன்.
நெறய பேரை முதல் முறையா பாக்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க. தொலைபேசி மூலமா ரஜினி ராம்கி, தல பாலா அப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு கூட பேசியிருக்கேன்னாலும் நேரிலே பாக்கறதுன்றது வேற இல்லீங்களா...? ஆனா என்ன... யாரோடுமே அதிகமா பேச முடியலைன்ற ஒரே குறைதான்.
அப்புறம் நிகழ்ச்சியில யாரு பேசினாங்க என்ன பேசினாங்கன்றதெல்லாம் நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க. தட்டச்சுப் பயிற்சியிலும் செயல் விளக்க வகுப்பிலேயுமே அதிக நேரம் இருந்ததால அரங்கத்துலயும் வெளியேயும் நடந்த நெறைய விசயங்களை கவனிக்க முடியலை. பட்டறை சம்பந்தமான பதிவுகளை படிக்கும் போது தான் அடடா! இவ்வளவு நடந்ததா? அப்படின்னு தெரியுது.
"துன்றத்துக்கு..." நல்லா இருந்துச்சி. தல பாலா தான் பாவம் ஒடஞ்சி போன தயிர்சாத பொட்டலத்தையெல்லாம் வழிச்சி தொடச்சிக்கிட்டு இருந்தார்.
புதுசா ஃப்ளாஷ் கத்துக்கிட்டேன். பினாத்தலாருக்கு நன்றி.
கடைசி வரைக்கும் எழுத்துரு மாற்றப் பயிற்சியை மட்டும் என்னால கொடுக்க முடியலைன்னு நான் பொலம்பிக்கிட்டு இருந்ததை பாத்து பாவம் போவட்டும்னு கடைசியா க்ருபாவும் பொன்ஸும் ஒக்காந்து கேட்டாங்க. எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாத்த இன்னும் நிறைய பேரை பிடிக்கனும். பாக்கலாம்...
இப்போதைக்கு வேற ஒன்னும் தோனலைங்க... அவ்ளோதான்...
அது சரி... தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன தொடர்புன்னு கேக்கறீங்களா? அரங்கத்துக்கு வந்தப்போ பெயரை கேட்டு பேட்ஜ் எழுதின ராஜா முதல், நிகழ்ச்சி முடிஞ்சி வீட்டுக்கு போற வரை எல்லாருமே "கோபி"ன்னு சொன்னா உடனே "ஹை கோபியா?" அப்படீன்னு கேட்டதால மனசுக்குள்ள கேட்ட சவுண்டு தாங்க அது... அட யாருமே இந்த இடுகையை படிக்கலையா... இல்ல... வேணுமின்னே கலாய்க்கறாங்களான்னு தெரியலை... ஏன்...? எதுக்கு இந்த கொல வெறி...?
சரி. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
அடுத்த பட்டறை எங்கேப்பா? சீக்கிரம் அதுக்கான வேலையை ஆரம்பியுங்க. முன்னாலயே நம்மளுக்கும் ஒரு கடுதாசி தட்டிடுங்க. (வந்து சேர வசதியா இருக்குமில்ல)
27 கருத்து(க்கள்):
தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.
:) :) :)
உங்க சிரிப்பின் ரகசியம் சொல்லுங்களேன்... அழகா எப்போவுமே சிரிச்சுட்டே இருக்கீங்க
வினையூக்கி,
//தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.//
எனக்கும் தான். எனக்கும் தான்.
//உங்க சிரிப்பின் ரகசியம் சொல்லுங்களேன்... அழகா எப்போவுமே சிரிச்சுட்டே இருக்கீங்க//
அடப்பாவி, அதுக்குள்ள ஓட்ட ஆரம்பிச்சீட்டிங்களே. நியாயமா? :-)
பயிற்சி வகுப்புகளுக்கு முன் சுறுசுறுப்பாய் ஒவ்வொரு கணினியாய் நீங்கள் சரி பார்த்தது. மற்றவர்களுக்கு பொறுமையாய் சொல்லித் தந்தது எல்லாமே அருமை.
உங்க ப்ரொஃபைல் படத்தைப் பாத்துட்டு தான் உங்களை 'நீங்க சிட்டுக் குடுமி கோபி தானே?'னு கேட்டேன். அது உங்களுக்கு சரியா கேக்கலைனு நெனைக்கிறேன். இதை கேட்ட சங்கத்து சிங்கங்கள்ல ஒருத்தருக்கு சிட்டுக்குருவி கோபின்னு காதுல விழுந்தது அத விட பெரிய தமாசு. யாரைக் கேக்கறீங்கன்னு புரியலைன்னு நீங்க சொன்னதும் யாரையோ தப்பா கேட்டுட்டோமேனு ஒரு சின்ன சந்தேகம். ஆனா கிருபானந்த வாரியார் போஸ்ட் எழுதற தகடூர் கோபி தான் ஹை கோபி எனப்படும் சிட்டுக் குடுமி கோபின்னு(எனக்கு) ஒரு மணி அடிச்சிட்டே இருந்தது.
சரி இப்ப மறுக்கா கேக்கறேன் - 'நீங்க சிட்டுக் குடுமி கோபி தானே?':)
//தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.
:) :) :)
உங்க சிரிப்பின் ரகசியம் சொல்லுங்களேன்... அழகா எப்போவுமே சிரிச்சுட்டே இருக்கீங்க//
ரிப்பீட்டே :)
கைப்புள்ள,
அப்பவே 'அது நாந்தான்'ன்னு சொன்னேன். ஆனா சங்கத்து சிங்கங்கள் 'சிட்டுக் குருவி'க்கு சிரிச்ச சிரிப்புல யாருக்குமே காதில விழலைன்னு நெனைக்கிறேன்.
//சரி இப்ப மறுக்கா கேக்கறேன் - 'நீங்க சிட்டுக் குடுமி கோபி தானே?':)//
ஆகா, நீங்களும் ஓட்ட ஆரம்பிச்சாச்சா... முடியலை... அழுதுருவேன்...
சரி இப்ப மறுக்கா சொல்றேன் இன்னொருக்கா இங்கன போய் படிங்க :-)
நான் கூட ஒரு முறை ஊரில் இருந்து நெட் செண்டரில் தமிழ் அடிக்கமுடியாமல் போனபோது ஹை கோபி தளத்தில் டைப்பண்ணிட்டு ஹை கோபிக்குநன்றின்னு போட்டேன் பொன்ஸ் சொன்னாங்க இல்லீங்க தகடூர் கோபின்னு அப்பறமா மாத்தினேன்.. :)
முத்துலெட்சுமி,
அப்பாடா, நீங்களாவது மாத்தினீங்களே :-)
உங்கள சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. எதுவும் பேச முடியாதது வருத்தம் தான்.
இன்னொரு விசயம், இனி உங்கள ஹைகோபினு சொல்லல, தகடூர் கோபினே சொல்றேன்.
உங்க பழைய பதிவ படிக்காமலேயே என்னோட 'பதிவர் பட்டறை' பதிவுல 'தகடூர்' கோபின்னு சரியா எழுதிட்டேன். நல்ல வேளை, இல்லைன்னா நானும் வாங்கி கட்டிருப்பேன்.
காலையிலேயே வந்தவுடன் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு பேர் சொல்லிக் கூப்பிட்டீங்களே, "கோபி, யூ மேட் மை டே" ;)
J K
//உங்கள சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. எதுவும் பேச முடியாதது வருத்தம் தான்.//
அதே தாங்க என்னோட எண்ணமும்.
//இன்னொரு விசயம், இனி உங்கள ஹைகோபினு சொல்லல, தகடூர் கோபினே சொல்றேன்.//
சூப்பர். ஆனா ஹைகோபின்னு சொன்னாலும் ஒன்னும் பெரிய வருத்தமில்லை.
By whatever name you call, A Rose is a Rose is a Rose. இல்லீங்களா?
:-)
ப்ரேம்,
உங்களைப் போய் மறக்க முடியுமா.
சுமார் ஒரு வருடம் முன் 'அன்புடன்' சந்திப்புக்கு அப்புறம் விழியன் ஏற்பாடு செய்த முகுந்த் உடனான சந்திப்பில் நானும் முகுந்தும் "அதைச் செய்யனும் இதைச் செய்யனும்"ன்னு தமிழ்க் கணிமைத் தேவைகளை பத்தி பேசிக்கிட்டிருந்ததை நீங்க எப்படி பொறுமையா கேட்டுகிட்டு இருந்தீங்களோ தெரியலை.
:-)
கோபி, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அப்புறம் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்றுவது கடினமா???
ஏதேனும் ஹெல்ப் ஃபைல் வைத்திருக்கிறீர்களா?? உண்மையில் இதைப் பற்றித் தெரிந்துக் கொள்ள ஆர்வமாய் இருந்தேன். ஆனால் பட்டறையின் வேலைகளால் முடிய வில்லை.
இத்தனைக்கும் உங்களுக்கு முன்னாடி முதல் வரிசையிலேயே இருந்தும், பேச முடிய வில்லை.
தலைவா வணக்கம்
இதுதான் முதல்முறை..
\\சரி. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.\\
கண்டிப்பாக அடுத்த முறை இன்னும் கலக்கவும் ;-)
(நம்ம பேரை காப்பாத்துங்க ;-)))
தம்பீபீபீபீபீபீபீபீபீபீ.......
என்னை மறக்கலியே..
அடுத்த மாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கிளம்பி வா.. கோடம்பாக்கம் பக்கம் போவோம்.. நிறைய பேர் நல்லா சிரிக்கிற மாதிரி ஹீரோ வேணும்னு தவம் கிடக்குறாங்க.. அப்படியே உன் அக்காவையும்(!) பார்த்துட்டு வந்திருவோம்..
அக்கா யாருன்னு கண்டுபிடி பார்ப்போம். (இட்லிவடை சொன்னது ஞாபகமிருக்கா?)
நந்தா,
//அப்புறம் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்றுவது கடினமா???//
அவ்வளவு கடினம் இல்லீங்க. ஒரு குறுக்கு வழி கண்டுபிடிச்சி வச்சிருக்கேன். அதுக்காக அமரர் உமர் அவர்களுக்கு நன்றி. (உமர் அவர்களின் தேனீ எழுத்துருவிலிருந்து விதிகளை உருவி நாம் மாற்றும் எழுத்துருவில் செருகி சில ஒட்டு வேலைகளை செய்தால் முடிந்தது)
தனிமடல் அனுப்புங்க. விளக்கமா பேசுவோம்.
//இத்தனைக்கும் உங்களுக்கு முன்னாடி முதல் வரிசையிலேயே இருந்தும், பேச முடிய வில்லை.//
கல்யாணக்காரங்க இல்லியா அப்படித்தான் அதுவும் நீங்க ப்ரொஜக்டர் பக்கத்துலயே இருக்க வேண்டியிருந்ததால பேச முடிந்திருக்காது :-)
கோபிநாத்,
வருகைக்கு நன்றி... நீங்க, அபி அப்பா எல்லாரும் சேந்து அடிக்கிற லூட்டிகளை படிச்சிட்டுதான் இருக்கேன். பின்னூட்டம் தான் போடுறதில்லை :-)
//(நம்ம பேரை காப்பாத்துங்க ;-)))//
நிச்சயமா, பின்ன... நம்ம பேரச் சொன்னாலே அதிரனுமில்ல...
உண்மைத் தமிழன்,
அண்ணா... உங்களை மறப்பேனாண்ணா? அது சரி இன்னோரு உண்மைத் தமிழன் யாரு என்னான்னு கண்டுபிடிச்சீங்களா?
//கோடம்பாக்கம் பக்கம் போவோம்.. நிறைய பேர் நல்லா சிரிக்கிற மாதிரி ஹீரோ வேணும்னு தவம் கிடக்குறாங்க..//
ஆகா... நீங்களுமா... சரி... நடத்துங்க நடத்துங்க...
//அக்கா யாருன்னு கண்டுபிடி பார்ப்போம். (இட்லிவடை சொன்னது ஞாபகமிருக்கா?)//
தெரியலையேண்ணா, தனி மடல்ல கொளுத்திப் போடுங்க. அது சரி... அவர்தான் இட்லிவடை இல்லைங்கறாரே. அப்றம் ஏன் அவரை இன்னும் அழ வைக்கறீங்க... விட்ருங்க பாவம்...
:-)
ஹை கோபி ,
(இது கோபிக்கு சொல்ற 'ஹை', 'ஹை கோபி' இல்லை) ஃப்ளாஷ்தான் முக்கியமான hightlight அன்னிக்கு. நான் எதிர்ப்பார்த்ததை விட கத்துக்க முடிஞ்சது. என்ன ஒன்னு, இங்க Flash 8ல அதை பண்ணிப் பார்த்ததுல அந்த event windowக்குப் போகத் தெரியல. :-(( Actions windowல அந்த load, on_release, etc. எதுவும் காணும். :-((
எங்க ஆஃபீஸ் டிசைனர்க்கிட்ட கேட்டேன், அவரும் உதவ முடியற நிலைல இப்போ இல்லை. சுரேஷ்க்கிட்டயேதான் கேக்கணும். மற்ற இணையத் தளங்களை முயற்சித்தும் ஒன்னும் கதைக்கே ஆகலை.
பொன்ஸை விடாதீங்க, ஒரு 20 எழுத்துருவாவது வாங்கிடணும். ;-)
க்ருபா
அட அட! இந்த கோபி தானா நீங்க!
புரொஃபைல் படம் பார்த்தவுடந்தான் ஞாபகம் வருது!
சில மாதங்களா நமக்குள்ளே பின்னூட்டத் தொடர்பு விட்டுப் போயிடுச்சு போல!
:))
கோபி,
அன்றைக்கு நான் உங்க இரண்டு பேரையும் பார்த்துக்கொண்டிருந்தது ஆச்சரியத்திலும் ஆர்வத்திலும். இப்படியெல்லாம் நாம எப்போ யோசிக்க போறோம்? இணையத் தமிழுக்கும் வலைப்பூ உலகிற்கும் பின்னனியில் இவ்வளவு விசயங்கள் இருக்கான்னு ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் ஓடிக்கிட்டு இருந்துச்சு அன்றைக்கு. உங்கள் உரையாடல்கள் நிறைய சிந்திக்க வைத்தது (அதுக்கு அப்புறமும் நான் ஒன்னும் செஞ்சிடலங்குறது வேற விசயம் ;-))
நன்றி
க்ருபா,
இன்னும் ஃப்ளாஷ் முயற்சி செய்யலை. (இலவசமா கிடைக்கலை... அதாவது 'Trial' Version ;-) )
//:-(( Actions windowல அந்த load, on_release, etc. எதுவும் காணும். :-((//
Propertiesல போய் மாத்தினார்னு நெனைக்கிறேன். முயன்று பாருங்க.
//பொன்ஸை விடாதீங்க, ஒரு 20 எழுத்துருவாவது வாங்கிடணும். ;-)//
பின்னே, கத்துகிட்டா செய்யாம சும்மா விட்டுடுவமோ... அது சரி நீங்க எங்க எஸ்கேப் ஆவப் பாக்குறீங்க... ஒரு 50 எழுத்துருவாவது மாத்தி தந்துடுவீங்க இல்ல... (TAB/TAM எழுத்துருக்களை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்)
சிபி,
அது சரி... "கோவி.கண்ணன்" நல்லா இருக்காரா? நல்லா கிளப்புறீங்கய்யா புரளிய...
:-P
ப்ரேம்,
//(அதுக்கு அப்புறமும் நான் ஒன்னும் செஞ்சிடலங்குறது வேற விசயம் ;-))//
அப்படி சொல்லாதீங்க. எங்களைப் போன்ற தொழில்நுட்பவியலர்கள் ஒரு கருவி தான். உண்மையில கவிதை, கட்டுரை, கதைன்னு கொடுக்கின்ற உங்களைப் போன்றவர்கள் தான் நிஜ ஹீரோ
:-)
//கடைசி வரைக்கும் எழுத்துரு மாற்றப் பயிற்சியை மட்டும் என்னால கொடுக்க முடியலைன்னு நான் பொலம்பிக்கிட்டு இருந்ததை பாத்து பாவம் போவட்டும்னு கடைசியா க்ருபாவும் பொன்ஸும் ஒக்காந்து கேட்டாங்க. எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாத்த இன்னும் நிறைய பேரை பிடிக்கனும். பாக்கலாம்...//
இது எப்போங்க நடந்துச்சு.... மிஸ் பண்ணிட்டனே
higopi,
உங்க இணையப்பக்கம் அடிக்கடி கை கொடுக்குது.
அப்படியே ஒரு பண்ணிட்டீங்கன்னா, சவுரியமா இருக்கும்.
:)
Gopi, thanks for mentioning ;)
Krupa, I have used flash 5.0 with actionscript 2.0 for demo.
A drawing can be converted as three types of objects - movie clip, button or graphic. button is mainly for frame navigation . after creating a button , when right clicked, select ACTIONS to go to select the action, there u can find on release, rollover.. ects.
after creating a movie clip, if you right click and go to actions, the command will be On lOAD, ON UNLOAD ETC.
movie clip is mainly for creating simple animations which will be used several times in the same movie. creating a movie clip is similar to create a flash movie.. same logic of frames, layers etc.
ithu puriyaatti, naan dubai vantha piraku virivaa ezuthareen:)
கோபி, எழுத்துரு ஒன்னும் workout ஆகலை. அப்பறமா உங்க தொ.பே. எண் குடுங்க, ஒரு நா ராவுக்கா உங்க கழுத்தை அறுக்கறேன். :-)
சுரேஷ்!!!!
கும்புடப் போன தெய்வம், குறுக்கே வந்ததென்ன!!!
Actionsஐ க்ளிக் பண்ணினா, வேற ஒரு Action Window ஓப்பன் ஆகிறது. அதுல வேற மாதிரிதான் இருக்கு, eventsலாம் இல்லை. ஒரு வேளை 8.0 (நான் பயன்படுத்தறது)ல அதெல்லாம் வேற மாதிரி பண்ணணுமா?
ஆனா ஒன்னே ஒன்னு, இது வரை Flash இப்படி கத்துக்குடுக்கறவங்களை. தூள் (dhool, thool இல்லை) பண்ணிட்டீங்க போங்க.
"தகடூர்-தல" உங்களை சந்தித்ததில் மகிழ்கின்றவர்களில் அடியேனும் ஒருவன்.
:))
நந்தா,
//இது எப்போங்க நடந்துச்சு.... மிஸ் பண்ணிட்டனே//
பயிற்சி வகுப்பா எல்லாம் நடக்கலைங்க. தனியா கணினியில ஒக்காந்து இருவருக்கும் சொல்லிக் கொடுத்தேன்.
SurveySan,
//அப்படியே ஒரு பண்ணிட்டீங்கன்னா, சவுரியமா இருக்கும்./
ஒரு 'என்ன' பண்ணனும் சொல்லுங்க :-)
பினாத்தலாரே,
விளக்கத்துக்கு நன்றி. ஃப்ளாஷ் வகுப்புல நிறைய நுட்பம் தெரிந்தது. உங்க பேரை ஃப்ளாஷலார்னு மாத்திடலாமா? :-)
க்ருபா,
//எழுத்துரு ஒன்னும் workout ஆகலை.//
workout பண்ணனும்னா எழுத்துருவை gymக்கு கூட்டிட்டு போங்க :-P
எழுத்துருவை திறக்கும் போது ஏதேனும் warnings வருதான்னு பாருங்க. எழுத்துருவில் Glyphs பெயரில் NULL, .notdef போன்றவை இருக்கக் கூடாது (உமர் அவர்களின் தேனீ உட்பட பல தமிழ் எழுத்துருக்களில் இந்த பெயர்களை பயன்படுத்துகிறார்கள்)
அப்படியும் சரிவரலைன்னா போன் பண்ணுங்க என்ன பிரச்சனைன்னு அலசலாம்.
தல பாலா, :-P
தகடூர் 'தல' எல்லாம் வேணாம் சாமி. என்னை ஓட்ட ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் நான் தீவிர பா.க.ச ஆளாயிடுவேன். ஜாஆஅக்க்கிரத்தைஐஐஐ.... !
என்ன சந்திச்சி என்ன போங்க... ஒழுங்கா நின்னு கொஞ்சம் நேரம் கூட பேச முடியலை. அமைப்பாளர்கள்ன்னா அப்படித்தாங்கறீங்களா? அதுவும் சரிதான்.
:-)
higopi,
உங்க இணையப்பக்கம் அடிக்கடி கை கொடுக்குது.
அப்படியே ஒரு "SPELL CHECK" பண்ணிட்டீங்கன்னா, சவுரியமா இருக்கும்.
:)
SurveySan,
தகடூர் தமிழ் மாற்றியில் "சொல் திருத்தி" கொண்டு வருவது சற்றே கடினம். குயில்பேட் தமிழ் மாற்றியில் Suggest வசதி உள்ளது.
பயர்பாக்ஸுக்கான தமிழ் சொல் திருத்தி முகுந்த் அவர்களால் சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் சுட்டி .
இதை மற்ற ஃபயர்பாக்ஸ் நீட்சியைப் போலவே நிறுவிக்கொண்டு பயன்படுத்தலாம். TEXTBOX களில் தட்டச்சிடும் போது Right Click மெனுவில் "Spell Check this Field" -> "Tamil/India" என்று தெரிவு செய்தால் இதை செயல்படுத்தலாம்.
இன்னும் முழு வீச்சில் இந்த சொல்திருத்தி தயார் ஆகவில்லை. எனவே பெரும்பாலான சொற்களை சரியாக இருப்பினும் திருத்தச் சொல்லும்.
முயன்று பாருங்கள்.
நீங்க சொல்லுங்க