கனவில் வந்த பாலாபாய் (பா.க.ச பதிவு)
Google Buzz Logo

பா.க.ச மக்களே, நேத்து ராத்திரி கனவுல நம்ம பாலாபாய் வந்தாரு. (அவனவனுக்கு நமீதா, திரிஷா, ஜோதிகா, பூமிகா, அசின் இவங்க எல்லாம் கனவுல வருவாங்க. அட, 'சமீபத்துல' பொறந்தவங்களுக்கு கூட அட்லீஸ்ட் ஒரு ஜெயமாலினி, ஜோதிலட்சுமியாவது வருவாங்க... ஹூம்... என் நெலமயப் பாருங்க. )

சரி வந்தாரா... என்ன விசயம்னு கேட்டேன். சொந்தமா ஒரு எழுத்துரு செஞ்சிருக்கறதா சொல்லி அதைப் பயன்படுத்திப் பாத்து கருத்து சொல்ல சொன்னாரு. என்னடா இது... நாம இருக்குற எல்லா எழுத்துருவையும் ஒருங்குறிக்கு மாத்தச் சொல்லி பாக்குற எல்லாரையும் கேட்டுக்கிட்டு இருக்கோம்... இவர் என்னாடான்னா அவரே உருவாக்கி தராரே அப்படின்னு ஒரே சந்தோசமாயிடுச்சி.

சரின்னு நானும் அந்த எழுத்துருவை நிறுவி டைப் பண்ணிப் பாத்தேன். அது என்னடான்னா, எந்த கீயை தட்டினாலும் 'பா.க.ச... பா.க.ச... பா.க.ச...' இதத் தவிர வேற எதுவுமே வரமாட்டேங்குது.

அப்படி என்னத்தை இந்த எழுத்துருவில மாத்தியிருக்காருன்னு பாத்தா... அந்தக் கொடுமைய நான் ஏன் சொல்லனும்... நீங்களே பாருங்க...


அப்புறமா போன் பண்ணி அது என்னங்க காப்பி லெப்டு, ரைட்டு, டாப்பு, பாட்டம் அப்படின்னு பாலாபாய் கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்னது:

"அதாவது, ரைட்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டு. லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டுலெப்டு. மேல இருந்து காப்பி அடிச்சா அது காப்பிடாப்பு, கீழ இருந்து காப்பி அடிச்சா அது காப்பிபாட்டம்"

இந்த விளக்கத்தை கேட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சி போச்சிங்க. உங்களுக்கு ?

11 கருத்து(க்கள்):

இம்சை |

Hi Higopi, please give the download link for the font..


ப்ரியன் |

அட்ரா!அட்ரா!!அட்ரா!!

கலக்கல்!!

எழுத்துரு எங்களுக்கும் வேணும் சுட்டி தாங்க...

திருத்தம் :

*/லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டு/*

இது

லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிலெப்டுன்னு இருக்கணும்தானே??


கோபி(Gopi) |

இம்சை,

இங்கிட்டு போங்க. இன்னும் இந்த மாதிரி நிறைய டௌன்லோட் பண்ணிக்கலாம்.

ப்ரியன்,

//லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிலெப்டுன்னு இருக்கணும்தானே??//

அடேடே... காப்பி(பேஸ்டு) பிரச்சனை. மாத்திட்டோம்ல...


ஜெஸிலா |

டே மண்டையா... தல பாலா ஒரு நல்லவர், வல்லவர், பெண்டு நிமித்திறதுல அப்படின்னு ஊருக்குள்ள போய் சொல்லனு....// அவ்வளவுதானா சமாச்சாரம் இல்ல கொஞ்சம் கட் ஆகிப்போச்சா :-))? கனவுல சொன்னதைக் கூட நினைவுல வச்சிக்கிட்டு வாக்கு தவறாம எழுத்துருவை நிறுவிய நீங்கத்தான் எங்கேயோ போய்டீங்க :-)))


கோபி(Gopi) |

ஜெஸிலா,

//சொல்லனு....// அதுக்கு மேல ஒரு 'ம்' எழுத்து மட்டும் 'விடுபட்டவை'ல சேந்துருச்சி... வேற ஒன்னுமில்லை.

//கனவுல சொன்னதைக் கூட நினைவுல வச்சிக்கிட்டு வாக்கு தவறாம எழுத்துருவை நிறுவிய நீங்கத்தான் எங்கேயோ போய்டீங்க //

பின்ன தலன்னா சும்மாவா?

'சற்றுமுன்' வந்த செய்தி: அடுத்ததா தல பாலா தன்னோட ரத்தத்தாலயே எழுதி செஞ்ச ஒரு எழுத்துருவை அனுப்பப் போறேன்னு சொல்லியிருக்காரு. அந்த எழுத்துரு வேணுங்கிறவங்க எல்லாம் இங்க வரிசையில வந்து முன்பதிவு செஞ்சிக்கோங்க.


பொன்ஸ்~~Poorna |

காப்பி மிடில் கிடையாதா? :)

தல பாலாவுக்கு பிடித்தது டீ தான். அதான் காப்பியை யார் வேணாலும் எடுத்துக்கலாம்னு சொல்லிருக்கார் போல..


பொன்ஸ்~~Poorna |

சொல்ல மறந்துட்டேனே.. எழுத்துரு சூப்பர்


கோபி(Gopi) |

//காப்பி மிடில் கிடையாதா? :) //

பொன்ஸ், காப்பி பண்ணி மிடில்ல தானே பேஸ்ட் பண்ணனும். :-)

//எழுத்துரு சூப்பர்//

அடுத்ததா தல தர்றேன்னு சொன்ன 'ரத்த' எழுத்துருவுக்கு முன்பதிவு செய்ய மறக்காதீங்க :-)


அரை பிளேடு |

தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிய எழுத்துரு கொடுத்த தலைவர் வாழ்க :)


கோபிநாத் |

;-)))


கோபி(Gopi) |

தல SMS வழியா அனுப்பிய செய்தி:

"SMS via Pinnootam"

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

தலக்கு நான் அனுப்பிய செய்தி:

"அடுத்த ஃபாண்ட் ரெடியா? ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பிச்சாச்சு"