ஔவைக்கு குரல் கொடுங்கள்
Google Buzz Logo

தற்போது உருவாக்கத்தில் இருக்கும் ஔவை உரை பேசி சேவைக்கான குரல் கோப்புகள் தயாரிப்பில் இதுவரை சரியான உச்சரிப்புடைய கோப்புகள் கிடைக்கவில்லை.

ஔவை உரைபேசிக்கு குரல் கொடுக்க விரும்புவோர் ஔவை ஆத்திச்சூடியை (ஆத்திசூடி by ஔவையார், ATHICHOODI by Auvaiyar) உரக்கப் படித்து கணினியில் MP3 கோப்பாக சேமித்து rapidshare, megaupload போன்ற தளங்களில் பதிவேற்றி சுட்டியை எனக்கு தனிமடலில் (higopi [at] gmail [dot] com) அனுப்புங்கள்.

குரல் பதிந்து அனுப்புவோர் கவனத்துக்கு:

  1. ஒலிக் கோப்பின் MP3 பதிவுத் தெரிவுகள்: 128 kbps, mono, 44khz
  2. ஓரிரு வரிகளை பதிவு செய்து மீண்டும் Play செய்து Noice இல்லை என உறுதிபடுத்திக் கொண்டு முழுவதும் பதிவு செய்யுங்கள்.
  3. அமைதியான சூழலில் பதிவு செய்யுங்கள். கூடுமானவரை சுற்றுப்புற ஓசைகள் இல்லாதிருத்தல் நல்லது.
  4. பதிவு செய்ய ஆடாசிடி http://audacity.sourceforge.net/ பயன்படுத்துங்கள்.
  5. தேவையெனில் திருத்தங்களுக்கும் மறு பதிவுக்கும் நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டி வரலாம்.
ஔவை உரைபேசி குறித்து மேலதிக தகவல்கள் இங்கே.

ஔவைக்கும் தமிழுக்கும் குரல் கொடுங்கள்.

5 கருத்து(க்கள்):

மதி கந்தசாமி (Mathy Kandasamy) |

கோபி,

நல்ல காரியத்திற்குக் குரல் கொடுக்கவிருப்பந்தான். ஆனால், நன்றாக அறுத்துறுத்துப் பேசக்கூடிய நான்குபேருக்கு - சினேகிதி, கானாபிரபா, வசந்தன்& சயந்தன்- ஒரு மடல் அனுப்புகிறேன்.

-மதி


அ. இரவிசங்கர் | A. Ravishankar |

உரை பேசி - நல்ல சொல். tex to speech என்பதை எழுத்து - குரல் செயலி என்று அப்படியே நீட்டி முழக்கி மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன் :)


யோகன் பாரிஸ்(Johan-Paris) |

மலை நாடார்; வானொலி நிகழ்ச்சி கேட்டுள்ளேன். நல்ல அட்சர சுத்தம்; அத்துடன் ஒலிப்பதிவு கூட வசதியுமுள்ளவர். அணுகவும்.


வசந்தன்(Vasanthan) |

ஓம்!
நாங்கள் நல்லா அறுத்து அறுத்துக் கதைப்போம்.

மலைநாடானும் சயந்தனும் சரிவருவினம் எண்டு நினைக்கிறன்.


தகடூர் கோபி(Gopi) |

மதி,ரவி,யோகன்

நன்றி


வசந்தன்,

தவறாமல் உங்கள் குரலை பதிவு செய்து எனக்கு தனிமடல் இடுங்கள். சயந்தன், மலைநாடன் குரல்களையும் இழுத்து வாருங்கள்.. :-)

நண்பர்களே, ஔவையின் ஆத்திச்சூடி படிக்க 4-5 நிமிடம் மட்டுமே போதுமானது. எனவே தவறாமல் உங்கள் குரலில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

எத்தனை குரல்கள் இருப்பினும் அத்தனையும் தனித் தனி பொதியாக செய்து வேண்டியவர்களுக்கு வேண்டிய குரல்களை நிறுவிக் கொள்ளும் வசதியை அளிக்கலாம்.