நீங்க சைவமா அசைவமா?
Google Buzz Logo

நீங்க சைவமா அசைவமான்னு கேக்கறத்துக்கு முன்னால சைவம், அசைவம்னா என்னன்னு பாக்கலாம்.

சில பேர் சொல்லுறாங்க கோழி, ஆடு, மாடு, மீன் இதை சாப்பிடறவங்க எல்லாம் அசைவம்னு. எதனால அப்படின்னு கேட்டா அதுக்கெல்லாம் நம்மை மாதிரியே சிவப்பு ரத்தம். நரம்பு, வலி எல்லாம் இருக்குன்னு.

சில பேர் சொல்றாங்க, சிவப்பு ரத்தம் இல்லைன்னாலும் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய, வலி உணரும் திறமுள்ள எந்த உயிரையும் கொன்று தின்றால் அது அசைவம்னு.

இன்னும் சில பேர் சொல்லுறாங்க தாவரங்களைத் தவிர எது சாப்பிட்டாலும் அசைவம்ன்னு. ஏன்னா தாவரங்களுக்கு வலியை உணர முடியாதாம். உணர்ச்சி இல்லையாம். ஆனா விஞ்ஞானி ஜே.சி.போஸ் சொல்றாரு எல்லா தாவரங்களும் வலியை உணரக்கூடியவை, மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவைன்னு. அப்ப தாவரம் சாப்பிடுறவங்களும் அசைவம் தானா?

அப்புறம் சில பேர் சொல்றாங்க, ஆடு, மாடு இதையெல்லாம் கொன்னா தான் தப்பு, அது தர்ற பால் குடிக்கறது தப்பில்லைன்னு. பால் தயிரா மாறுவது ஈஸ்ட்ன்னு ஒரு வகை பூஞ்சைக் காளான் மூலமா அப்படின்னு சின்ன வயசுல படிச்சிருப்பிங்க. ரொட்டி/கேக் தயாரிப்பிலும் இதை சேர்ப்பாங்க. தயிரை சாப்பிடும்போது இந்த ஈஸ்ட்டையும் சேத்து தான் உயிரோட விழுங்கறோம்.

சமீபத்துல ஈஸ்ட்டும் பிற உயிர்களைப் போலவே வெப்பம், குளிர், அழுத்தம் போன்ற சுற்றுப்புற இறுக்கங்களுக்கு பதிலளிப்பதாவும் தம்மை மாற்றிக் கொள்வதாகவும் கண்டுபிடிச்சிருக்காங்க (இது பற்றி அறிய விரும்புவோர் "Stress response of Yeast"ன்னு கூகுளில் தேடிப் பாருங்கள்). அப்படின்னா ஈஸ்ட்டுக்கு உணர்வுகள் உண்டுன்னு தானே அர்த்தம்.

வாழ்க்கையில ஒரு முறையாவது ரொட்டி/கேக்/தயிர்/யோகர்ட் சாப்பிடாத ஆளை நான் இன்னும் சந்திச்சதில்லை. அதனால உலகத்துல எல்லாருமே அசைவமா?

நீயும் அசைவம் நானும் அசைவம் நெனச்சி பாத்தா எல்லாம் அசைவம்..

இப்ப சொல்லுங்க.. நீங்க சைவமா அசைவமா? அசைவம்னா மேல சொன்ன எந்த வகை அசைவம் ?

பிற்சேர்க்கை: அப்படியே, தாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு கடைசியில் உண்ணப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/?show=1க்கு போய் பாத்துருங்க.
(இளகிய மனம் கொண்டோர், இதயநோயாளிகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

15 கருத்து(க்கள்):

வல்லிசிம்ஹன் |

நீங்க சொல்றதப் பார்த்தா நாங்க 25% அசைவம்தாங்க:)
கீரையெல்லாம் சாப்பிடறோமே!!


வடுவூர் குமார் |

ஹூம்!
இப்ப எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது.


கோபி(Gopi) |

வல்லி சிம்ஹன்,

அச்சச்சோ. கீரையெல்லாம் கூட சாப்பிடுவீங்களா? அப்படின்னா நீங்க கண்டிப்பா அசைவம் தான்.

அப்படியே, தாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக கொல்லப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/?show=1க்கு போய் பாத்துருங்க :-)

வடுவூர் குமார்,

சந்தேகமே வேண்டாம். உலகத்துல எல்லாருமே அசைவம் தான். எவ்வளவு அசைவம்ங்கறதுல தான் வேறுபாடு.


நந்து f/o நிலா |

அருமையான போஸ்ட்டுங்க கோபி.

இதே மாதிரித்தான் நல்லது கெட்டது, நியாயம் அநியாயம்ன்னு ஒண்ணொன்னுக்கும் ரொம்ப டீப்பா யோசிச்சா கடைசில எதுவும் பண்ண முடியாமத்தான் போயிடும்.

நம்ம மனசை உறுத்தாமல் இருக்கும் எதுன்னாலும் ஓகேன்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்


கோபிநாத் |

\\நீயும் அசைவம் நானும் அசைவம் நெனச்சி பாத்தா எல்லாம் அசைவம்..\\

ஆமாண்ணே ஆமாம் ;))


TBCD |

வாங்க இங்கயும் அதே தகராறு தான்...


கோபி(Gopi) |

நந்து f/o நிலா, கோபிநாத்,

நன்றி.

TBCD,

அட, சரியான நேரத்துல தான் இந்த இடுகையப் போட்டிருக்கேன் போல... :-)


உண்மைத் தமிழன்(15270788164745573644) |

தம்பீ..

சோறுன்னு ஒண்ணு சாப்பிட்டா.. அது அதுக்கு முன்னாடி நெல்லா விளைஞ்சு அதோட மூலமான கதிரை அடிச்சு, உடைச்சு அதைக் கொலை பண்ணிட்டுத்தான் இது வெளிய வருது.. அப்ப இதுவும் கொலையா..?

முதல்ல குழம்பு.. அதுல எத்தனை காய்கறிகள்.. தக்காளி, கத்திரிக்காய், பீட்ரூட், கீரை, கொத்தமல்லி, புடலங்காய், முருங்கைக்காய்.. இந்தக் காயெல்லாம் வைக்காம யாராவது குழம்பு வைக்க முடியுமா? இதையெல்லாம் கொன்னுட்டுத்தான எல்லாரும் சமையல் செய்றாங்க.. இப்போ இதுவும் ஒரு கொலைதானே..?

ரசத்துல புளி இருக்குது.. புளிய மரத்துலேர்ந்து புளியை உலுக்கி, உலுக்கி கீழே விழ வைச்சு.. அதைப் பொறுக்கியெடுத்து.. அதை அடிச்சு உள்ள இருந்த கொட்டையை எடுத்துட்டு புளித் தோலை மட்டும் தனியா எடுத்து அதை நசுக்கி தண்ணில போட்டு கசக்கி.. எம்புட்டு சித்ரவதை..?

கடைசில மோர்.. பாலைத் திரிக்கணும் தயிராக்க.. அப்புறம் தயிரையும் மோராக்க கடையணும்.. பாலுக்கு எம்புட்டு வலிக்கும் யோசிச்சு பாரு.. எல்லாமே கொடுமைதான்.. இனப் படுகொலைதான்..

அதையும் சாப்பிடக்கூடாது.. இதையும் சாப்பிடக்கூடாது..

அப்புறம் மனுஷன் எதைத்தாம்ப்பா சாப்பிடறது..?


கோபி(Gopi) |

உண்மைத் தமிழன் அண்ணே,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான். பிற்சேர்க்கையா ஒரு சுட்டி சேத்திருக்கேன். அந்தக் கொடுமையை அங்கே போய் பாருங்க...

ஆமா... என்னோட பதிவை விட பெருசா பின்னூட்டம் போட்டீங்கன்னா நாங்கல்லாம் எப்படி பதிவெழுதுறது?


enRenRum-anbudan.BALA |

கோபி,
சிந்திக்க வைக்கும் ஒரு பதிவுக்கு நன்றி.

நீங்க சுட்டின தளத்தில் இருக்கும் படங்களை (vegetable cruelty என்று பார்க்கும்போது) பார்த்தபோது, நெஜமாவே கொஞ்சம் கஷ்டமாத் தான் இருந்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

எ.அ.பாலா


கோபி(Gopi) |

எ.அ.பாலா,

சரியா சொன்னீங்க. சாதாரணமா எத்தனை தடவை காய்கறி நறுக்கியிருப்போம். ஆனாலும் அந்த vegetable cruelity யை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு இல்ல..

எல்லாமே பார்க்கிற பார்வையில தான் இருக்கு.


உண்மைத்தமிழன் |

//உண்மைத் தமிழன் அண்ணே,
நீங்க சொல்றதெல்லாம் சரிதான். பிற்சேர்க்கையா ஒரு சுட்டி சேத்திருக்கேன். அந்தக் கொடுமையை அங்கே போய் பாருங்க... ஆமா... என்னோட பதிவை விட பெருசா பின்னூட்டம் போட்டீங்கன்னா நாங்கல்லாம் எப்படி பதிவெழுதுறது?//

இது மாதிரி ஏதாவது செஞ்சாத்தான என்னையெல்லாம் நீங்க ஞாபகத்துல வைச்சுக்க முடியும்.. அதுனாலதான்..

அப்பபுறம் ஏதோ கன்னடப் படத்துல ஹீரோவா நடிக்கப் போற மாதிரி கேள்விப்பட்டேன்.. ஹீரோயின் நமீதாவாமே? நெசமா ராசா..?

- தாங்குவியா..?


கோபி(Gopi) |

உண்மைத் தமிழன் அண்ணே,

//அப்பபுறம் ஏதோ கன்னடப் படத்துல ஹீரோவா நடிக்கப் போற மாதிரி கேள்விப்பட்டேன்.. ஹீரோயின் நமீதாவாமே? நெசமா ராசா..?

- தாங்குவியா..?//

என் மேல அப்படி என்ன உங்களுக்கு காண்டு... ஏதானாலும் பேசித் தீர்த்துக்கலாம். இப்புடியெல்லாம் பழி வாங்கிடாதீங்க.


sarath |

கோபி, நீங்க சொன்ன கருத்துகள் எல்லாம் சரியாக இருந்தாலும் வள்ளுவர் சொன்ன புலால் மறுப்பு பற்றி எதுவுமே சொல்லாத மாதிரி இருக்கு,.

ஈஸ்ட பத்தி எல்லாம் கவலை பட முடியுமான்னு தெரியல.
நீ செய்கிறது கொஞ்சம் அதிகம்னு நாம யாரையாவது கை காட்டினா உடனே நீயும் அத தானே செய்யரன்கிற மாதிரி.

ஆடு, மாடு,கோழி,மீன் இத எல்லாம் அதிகமா(கவனிக்க திங்காம இருக்கணும்னு நா சொல்லல ) சாப்டாம இருந்த நம்ம சுற்றுசூழல் கொஞ்சம் நல்லா இருக்கும்.

உறுத்தல் இல்லாம எது செஞ்சாலும் அது சரியாதான் இருக்கும்னு ஒருத்தர் பின்னூட்டம் இட்டு இருக்கார், நமக்கு முன்னால் நடக்கும் எல்லாம் பற்றி தெரிந்தா மட்டுமே நாம் செய்வது பற்றி உணர முடியும். அப்பறந்தான் உறுத்தல் இருக்கா இல்லையானு தெரியும்.

இதுவும் பதிவாவே ஆய்டிச்சி.
பொறுக்கவும்.


தகடூர் கோபி(Gopi) |

சரத்,

//வள்ளுவர் சொன்ன புலால் மறுப்பு பற்றி எதுவுமே சொல்லாத மாதிரி இருக்கு,.//

எல்லா வகையிலும் வள்ளுவர் வாக்குப்படி நாமெல்லாம் வாழ்ந்தால் இங்கே பல சிக்கல்களே வராதே!

என் பார்வையில உலகிலேயே அதிக சேதம் ஏற்படுத்தும் ஒட்டுண்ணி மனிதன் தான்.

தானாக உணவு தயாரித்து உண்ணும் செடி கொடிகள் தவிர எல்லாமே ஒட்டுண்ணி/அசைவம் தானே.

//நீ செய்கிறது கொஞ்சம் அதிகம்னு நாம யாரையாவது கை காட்டினா உடனே நீயும் அத தானே செய்யரன்கிற மாதிரி. //

ஐய்யையோ அப்படியெல்லாம் இல்லீங்க... அந்த வரிகள் சைவம் அசைவமெல்லாம் பார்க்கிறவங்க பார்வையில அப்படின்னு சொல்லத்தான்... மற்றபடி யாரையும் குறை சொல்ல இல்லை

//ஆடு, மாடு,கோழி,மீன் இத எல்லாம் அதிகமா(கவனிக்க திங்காம இருக்கணும்னு நா சொல்லல ) சாப்டாம இருந்த நம்ம சுற்றுசூழல் கொஞ்சம் நல்லா இருக்கும்.//

இல்லீங்க. சுற்றுசூழல் சமன்பாடு மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும்.

இந்தக் கோணத்தில யோசிச்சு பாருங்க: ஆடு, மாடு,கோழி,மீன் சாப்பிடறவங்க அதிகமா இல்லைன்னா இதுங்க எல்லாம் இன்னிக்கு domestic animals ஆக இல்லாம endangered species ஆக இருந்திருக்கும்.