எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்றுவது எப்படி - 3
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
சென்ற இடுகையில் எழுத்துரு குறித்த நுட்பங்களையும் எழுத்துரு உருவாக்கப்
பயன்படும் மென்பொருள் கருவிகளைப் பற்றியும் பார்த்தோம். அவற்றுள் நாம் பயன்படுத்த தேர்ந்தெடுத்துள்ள ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல் குறித்து இந்த இடுகையில் பார்ப்போம்.
ஃபாண்ட் ஃபோர்ஜ் ஒரு லினக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இதனை லினக்ஸ் கணினிகளில் நிறுவ, கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து RPM கோப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். உங்கள் இயங்குதளம் உபுண்டு அடிப்படையிலானது எனில், Alien எனும் மென்பொருள் கருவி மூலமாக இந்த RPM கோப்பினை DEB கோப்பாக மாற்றி நிறுவிக் கொள்ளலாம். பதிவிறக்க சுட்டி: http://fontforge.sourceforge.net/
நாங்கள் எல்லாம் விண்டோஸ் பயனாளிகள். இந்த ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா எனக் கேட்கிறீர்களா? வழி இருக்கிறது. CygWin என்று சொல்லக் கூடிய இலவச லினக்ஸ் எமுலேட்டர் மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவி அதன் மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.
அதற்கெல்லாம் எங்களுக்கு பொறுமையில்லை. விண்டோஸ் கணினியில் தரவிறக்கி எடுத்தவுடன் பயன்படுத்தும் படி எங்களுக்கு நிறுவித் தர இயலுமா என்றால், உங்களுக்கு எளிய வகையில் எல்லாமே ஆயத்த நிலையில் தரவிறக்கம் செய்ய வசதியாய் எனது தளத்தில் ஒரு கோப்பாக பதிவேற்றி வைத்துள்ளேன்.
முதலில் FontForge.7z (~ 45 MB) என்ற சுட்டியை சொடுக்கி 7-Zip கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த 7-Zip கோப்பினை திறக்க 7-Zip மென்பொருள் வேண்டும். அதை http://www.7-zip.org/ என்ற சுட்டியில் சொடுக்கி தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இப்போது 7-Zip மூலம் மேலே தரவிறக்கம் செய்த FontForge.7z கோப்பினை திறந்து உங்கள் கணினியின் வண்தகட்டில் உங்களுக்கு தேவையான இடத்தில் நிறுவிக் கொள்ளுங்கள்.
Windows Explorer மூலம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவிய இடத்துக்கு சென்றால் Xterm.bat என்றொரு கோப்பு இருக்கும். அதை இருமுறை சொடுக்குங்கள். உங்கள் விண்டோஸ் டாஸ்க் பாரில் கீழ்கண்டவாறு ஒரு X குறி தெரியும். மேலும் ஒரு XTerm சாளரம் திறந்து இருக்கும்.
இந்த XTerm சாளரத்தில் /usr/local/bin/fontforge.exe என்று தட்டச்சிட்டு Enter விசையை அழுத்துங்கள். கீழ் கண்டவாறு ஃபாண்ட் ஃபோர்ஜ் சாளரம் திறக்கும். (நீங்கள் மாற்ற வேண்டிய எழுத்துருக் கோப்பினை XTerm சாளரத்தில் fontforge.exe க்கு அடுத்ததாக கொடுத்தால் அந்த எழுத்துரு ஃபாண்ட் ஃபோர்ஜ் திறந்தவுடன் தெரியும் அல்லது நீங்கள் File -> Open என்ற பட்டி மூலமாகவும் உங்கள் எழுத்துருவை திறக்கலாம்).
இன்றைய இடுகையில் நாம் ஃபாண்ட் ஃபோர்ஜ் நிறுவுதல், பின் அதன் மூலம் ஒரு எழுத்துருவை திறப்பது எப்படி என அறிந்து கொண்டோம். அடுத்த இடுகையில் அந்த எழுத்துருவை எவ்வாறு ஒருங்குறிக்கு மாற்றுவது எனத் தெரிந்து கொள்வோம்.
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 |
7 கருத்து(க்கள்):
அன்புள்ள கோபி
3 பகுதிகளையும் தற்போதுதான் வாசித்தேன். நல்ல முயற்சி. அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தாங்கள் encoding என்பதை தகுதரம் என மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிகிறது. "குறியேற்றம்" என்பதே சரி.
"தகுதரம்" என்பது TSCII என்பதற்கான தமிழ்ப்பெயர். பின்வரும் கூகிள் தேடலை சொடுக்கிப்பாருங்கள் தெரிந்துவிடும்.
http://www.google.lk/search?sourceid=chrome&ie=UTF-8&q=தகுதரம்
"தமிழ் குறியீட்டு தராதரம்" என்பதன் சுருக்கமே "தகுதரம்" - பார்க்க :
http://ta.wikipedia.org/wiki/தகுதரம்.
அதை திஸ்கி எனவும் கூறுவர்.
எனவே encoding க்கு குறியேற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்.
முயற்சியைத்தொடருங்கள்
~சேது
சேது,
//தாங்கள் encoding என்பதை தகுதரம் என மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிகிறது. "குறியேற்றம்" என்பதே சரி. //
முந்தைய இடுகைகளில் மாற்றிவிட்டேன். நன்றி
வணக்கம் கோபி,
நான் உபுண்டு 9.10 பதிப்பு பயன்படுத்தி வருகிறேன். அதில் இருக்கும் ibus வசதி மூலமாக தமிழில் தட்டெழுத்திட முடிகிறது.
ஆனால் ஒருங்குறி முறையில் மட்டும் தான் என்னால் இதில் தட்டெழுத்திட முடிகிறது.
தாம், ஸ்ரீலிபி போன்ற என்கோடிங்கில் எழுத முடியவில்லை. லினக்ஸில் தாம், ஸ்ரீலிபி போன்ற பிற என்கோடிங்கில் தட்டெழுத்திட ஏதேனும் வழி இருக்கிறது.
இந்த பாண்ட் வியூவர் மூலமாக ஏதாவது இதற்கு செய்ய முடியுமா?
நன்றி.
VeeJay,
நீங்கள் சுரதாவின் பொங்கு தமிழ் மாற்றியை (http://www.suratha.com/uni2tab.htm) பயன்படுத்தி ஒருங்குறியில் தட்டச்சிட்ட வரிகளை தேவையான குறியேற்றத்துக்கு மாற்ற இயலுமே?
கோபி,
சுரதா வலைமனையில் ஒருங்குறியில் இருந்து டேப், பாமினி போன்றவற்றிற்கு மாற்றுவதற்கான வசதி கிடைக்கிறது.
ஆனால் நான் தாம்மதுரம் மற்றும் ஸ்ரீலிபி எழுத்துருவைப் பயன்படுத்துவதால், அதற்கேற்ற எழுத்துருக்களைப் பெற முடியவில்லை.
விண்டோஸ் 7 -ல் துவக்கப்படவில்லையெனில் Xterm மேல் வலது க்ளிக் செய்து அதில் வரும் RUN As Administrator என்று கொடுத்தால் துவக்கப்படும்.
இல்லையேல் துவங்காது. user access Control ப்ரச்னை வருகிறது.
நன்றி கோபி அண்ணா
என்றும் அன்புடன்
செல்வ.முரளி
செல்வமுரளி,
தகவலுக்கு நன்றி.
நீங்க சொல்லுங்க