மேதாவி மதன்
Google Buzz Logo

இந்த வார (20 ஆகஸ்ட் 2008) விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வெளியான மதன் பதில்களில் சில:
--------------------------------------------------------------
மா.அண்ணாமலை, சென்னை-1.
Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா?

இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. Surrender. Sur-என்றால் 'முடிந்துவிட்டது'. render என்றால் 'கொடுத்துவிடு' அதாவது வாளை! இந்தப் பிரெஞ்சு வார்த்தை லத்தீனிலிருந்து வந்தது. லத்தீனுக்கும் சம்ஸ் கிருதத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அப்படியே அது தமிழுக்கும் வந்திருக்கக்கூடும்.

எஸ்.ராஜகோபாலன், சென்னை-7.
உயில் என்பது தமிழ்ச் சொல்லா?

உயில் தமிழ் வார்த்தையாகிவிட்டது என்றாலும், அதன் வேர் பண்டைய சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதத்திலிருந்துதான் சிறிது மாறி ஆங்கிலத்தில் 'வில்' (Will) என்று ஆனது. அடிப்படை அர்த்தம் - மகிழ்விக்க. ஆனால், பல உயில்களால் வெட்டுக் குத்து ஏற்படுவதும் உண்டு!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

---------------------------------------------------------------

அடேயப்பா! ஒரே வாரத்துல இருக்குற பதினொரு கேள்வியில மூனு கேள்வி சமஸ்கிருதத்துக்கு பில்டப் குடுக்கவே போயிடுச்சி.

அதாவது மெத்தப் படித்த மதன் என்ன சொல்றாருன்னா உலகத்துல மக்கள் பேசுற பல மொழிகளில் இருக்கும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்துல இருந்து வந்தது தானாம்.

அப்படிப்பட்ட சமஸ்கிருதத்தை இப்ப யாரு பேச்சு மொழியா பயன்படுத்தறாங்க அதை எழுத எந்த எழுத்துரு பயன்படுது அப்படின்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.

எந்த ஒரு வார்த்தையும் தம் தாய்மொழியில் தோன்றியது என பெருமை கொள்வது மனித இயல்பு. உதாரணமாக, என்னைக் கேட்டால் catamaran, betrothal போன்ற ஆங்கில வார்த்தைகள் தமிழில் இருந்து தோன்றியன என ஆதாரங்களுடன் நிறுவ முயற்சிப்பேன். ஒருவேளை மதன் அவர்களின் தாய் மொழி சமஸ்கிருதமாய் இருக்குமோ?

என்ன மக்களே! என்ன சொல்லுறீங்க?

30 கருத்து(க்கள்):

nedun |

மதனின் தாய் மொழி சமஸ்கிருதம் தான் அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்


இராம்/Raam |

அரவிந்த்சாமி,


சட்டைக்குள் நெளியும் பூணூல்'ன்னு தலைப்பு போட்டுருக்கனும்.


Tech Shankar |

I saw those 3 answers in Madhan's Vikatan last week.

But I didn't decide to post in my blog.

But you did.

Well done.

Great job dear dude.

Madan = Medhavi = Tamil marappon


தகடூர் கோபி(Gopi) |

nedun,

//மதனின் தாய் மொழி சமஸ்கிருதம் தான் அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்//

அப்படீங்கறீங்களா? வேற மொழிக்காரர் ஒருத்தர் தமிழ் வார இதழில் தமிழில் எழுதுறதே தமிழுக்கு பெருமைதான் இல்ல? :-)

இராம்/raam,

விசயம் பூணூல் பத்தி இல்லீங்க. மதன் பத்தி. :-)

தமிழ்நெஞ்சம்,

நன்றி. பொதுவா மதன் பதில்களில் உள்ள அபத்தம் குறித்த பதிவுகள் எழுதும் பதிவர்களுக்கு பின்னூட்டம் இடுவதோடு சரி. ஆனால் இந்த முறை 11 கேள்வியில 3 கேள்வி சமஸ்கிருத பில்டப்ங்கறதால நானே பதிவா போட்டேன்.


ஸ்ரீ சரவணகுமார் |

நேற்று ஹாய் மதன் படித்தவுடன் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

இன்று தமிழ்மணத்திலும் மற்ற தளங்களிலும் இதைப் பற்றி பதிவிட்டிருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்தேன்

யாரும் இதுவரை இடவில்லை என்றதும் நானே எழுதாலாம் என்று எண்ணியிருந்தப் போது உங்கள் பதிவைப் பார்த்தேன்.

மதனுடைய தாய்மொழி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கையில் எழுதுபவர் கொஞ்சம் பொறுப்புடன் எழுத வேண்டாம்.

பல மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு வரலாற்று பதிவே கிடையாது என்று திருவாய் மலர்ந்து வாங்கி கட்டிக் கொண்டார்.

எங்கேயாவது ஆங்கிலத்தில் யாராவது உளறி இருந்தால் அதை வாந்தி எடுப்பது தான் மதனுடைய வழக்கம்

சரண், அரிசி இரண்டுமே தமிழில் இருந்து தான் பிற மொழிகளுக்குச் சென்றது என்று நான் படித்திருக்கிறேன்.

யாராவது மொழி வல்லுனர்கள் இருந்தால் ஆராய்ந்து சொல்லுங்கள்

நன்றி கோபி


களப்பிரர் - jp |

அவாளுக்கு புடிச்சதை, அவாளுக்கு தேவைன்னு நெநைக்குரதை, அவா பத்திரிக்கைல "நம்ம மொழில" எழுதுறா !!! அவா எல்லாம் நீச பாஸைல தேவ பாஸைய பத்தி எந்த ஆதாரமும் இல்லாததை பத்தி எழுதுறா ... துட்டு பாக்குறா !!!


Kasi Arumugam |

யூ டூ கோபி? :)

வாங்க, சபையில சேருங்க,
-உறுப்பினர்,
மேதாவி மதன் உளறல் பொறுக்கமாட்டாதோர் சங்கம்!

(அந்தாளு திருந்துவார்னு நம்பிக்கை இல்லை. விகடன் வாங்குறதை நிறுத்தி பல வாரமாச்சு, பெரிய தாளில் வருதுன்னே போனவாரம் தான் தெரிஞ்சுது)


தகடூர் கோபி(Gopi) |

ஸ்ரீசரண்,

//மதனுடைய தாய்மொழி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கையில் எழுதுபவர் கொஞ்சம் பொறுப்புடன் எழுத வேண்டாம்.//

இன்னமும் விகடனை ஜனரஞ்சகப் பத்திரிக்கைன்னா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. ஹைய்யோ ஹைய்யோ.. :-)

களப்பிரர்,

அவாளோட அவாவுக்கெல்லாம் நாம துட்டு தரப்படாதோன்னோ? :-)

காசி,

//மேதாவி மதன் உளறல் பொறுக்கமாட்டாதோர் சங்கம்!//

நல்லாயிருக்கே. சீக்கிரமா சங்கப் பொறுப்பாளிகள் லிஸ்ட் வெளியிடுங்கள். எனக்கு பொருளாளர் பதவியை தருவீங்க தானே :-)

அப்றம், நான் இன்னும் ஒரு சங்கத்துல நிரந்தர உறுப்பினர். அது ஓசியில் (மட்டும்) விகடன் படிப்போர் சங்கம். :-)


கோவை சிபி |

//யூ டூ கோபி? :)

வாங்க, சபையில சேருங்க,
-உறுப்பினர்,
மேதாவி மதன் உளறல் பொறுக்கமாட்டாதோர் சங்கம்!

(அந்தாளு திருந்துவார்னு நம்பிக்கை இல்லை. விகடன் வாங்குறதை நிறுத்தி பல வாரமாச்சு, பெரிய தாளில் வருதுன்னே போனவாரம் தான் தெரிஞ்சுது)//
காசி, சங்கத்திலே சேருவதற்கு நிறையபேர் இருக்கோம்!


தகடூர் கோபி(Gopi) |

கோவை சிபி,

//காசி, சங்கத்திலே சேருவதற்கு நிறையபேர் இருக்கோம்!//

வாங்க வாங்க. சேருங்க.

Joe,

மதன் பார்பனர் என்பதால் இப்படி பேசுகிறார் என்கிறீர்கள். அவர் பார்ப்பனராக இல்லாமல் இருந்திருந்தாலும் இப்படிப் பேசியிருப்பார். :-)

நான் என்ன சொல்ல வர்றேன்னா.. 2-3 பின்னூட்டம் கிடைக்குற வலைப் பதிவுக்கே நாம நல்லா எழுதுறோம் போல இருக்குன்னு ஒரு நெனப்பு நமக்கு வருதில்லையா? அது போல பல வாசகர்கள் படிக்கற பகுதியில் எழுதுறவருக்கு மிதப்பும் அதனால் தவறுகளும் ஏற்படும்தான். அதுக்காக அவர் நினைக்கறதெல்லாம் உண்மை, வரலாறுன்னு எழுதினா எப்படி :-)

இராம் பின்னூட்டத்துக்கு நான் சொன்னபடி இங்கு பிரச்சனை பூணூல் பற்றியதல்ல. மதன் பற்றியது. :-)

"மேதாவி எந்த சாதி/மதத்தில் பிறந்திருந்தாலும் மேதாவி தானே" (இங்கு மேதாவி என்ற வார்த்தைக்கு பதில் உங்களுக்கு பிடித்த வார்த்தையை போட்டு படித்துக் கொள்ளுங்கள்) :-)


Kasi Arumugam |

//மதன் பார்பனர் என்பதால் இப்படி பேசுகிறார் என்கிறீர்கள். அவர் பார்ப்பனராக இல்லாமல் இருந்திருந்தாலும் இப்படிப் பேசியிருப்பார். :-)//

ஆமாமாமாமாமாம்.

பூணூல் போடாத இடைசாதிப் பிறந்த 'பார்ப்பனர்' பலரை அன்றாடம் கண்டு அவர்களோடு வாழ்ந்துவருகிறோம். இவர்கள் கருத்துக்களும் அடிமைத்தனமும் மிகவும் பிற்போக்காக இருப்பதையும் பார்க்கிறோம். ஆகவே பிரச்னை மதனின் சாதியில் இல்லை, மனோபாவத்தில் இருக்கிறது.


PRABHU RAJADURAI |

Please add pariah, mullingtawny with catamaran....

and there is an interesting story behind cashewnut as well


enRenRum-anbudan.BALA |

கோபி,

அந்த ஆளு ஒரு அரைகுறை (including சமஸ்கிருதம்:)), ஆனால் அவரை எல்லாரும் (including கமல்...) ஏத்தி விட்டதில, அவரு தன்னை அதிமேதாவின்னு நினைச்சுக்கிட்டாரு, அதான் மேட்டரு !
எ.அ.பாலா


புருனோ Bruno |

//Please add pariah, mullingtawny with catamaran....

and there is an interesting story behind cashewnut as well//

மிளகுத்தண்ணீர்
கட்ட மரம்

காசுக்கு எட்டு - Cashewnut

Orange - ஆறு + அஞ்சு = 11 சுளைகள்

ஆனை கொண்டான் - anaconda

--

அரிசி - "Oriza" Sativa - தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் வணிக தொடர்பிருந்தது அனைவரும் அறிவார்கள்

-

அரிசி தென்னாட்டு உணவு. அது தமிழிலிருந்து தான் வடக்கே சென்றிருக்க வேண்டும்.

எனவே சமஸ்கிரதம் தமிழிலிருந்து சொல் பெற்றது என்றால் பொருத்தம்


புருனோ Bruno |

உயில், சரண் ஆகிய சொற்கள்
ஏன் சமஸ்கிரத்ததிலிருந்து லத்தீனுக்கு வந்தன

ஏன் லத்தீனிலிருந்து சமஸ்கிரத்ததிற்கு வரவில்லை என்பதற்கு மதன் என்ன ஆதாரம் தருகிறார்.

--
அரிசி ஏன் தமிழிலிருந்து சென்றது என்பதற்கு நான் ஆதாரம் (evidence) தராவிட்டாலும் காரணம் (plausibility) அளித்துள்ளேன்

--


பாபு |

நானும் விகடன் படித்தவுடன் இதைத்தான் நினைத்தேன்.பிரச்னை என்னன்னா
இவர் எதோ ஒரு சகலகலா வல்லவர் என்ற நினைப்பில் எல்லோரும் உலக விஷயங்களை பற்றி கேள்வி கேட்க இவர் என்னோவோ தன்னை உலக மகா அறிவாளி என்று நினைத்து கொண்டு பதிலும் தருகிறார்.தங்களுடைய கேள்வியை அந்த துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களிடம் கேட்காமல் இவரிடம் என் கேட்கிறார்கள்?


குட்டிபிசாசு |

எனக்கு தோன்றியதை தாங்களும் கூறியுள்ளீர்கள். தமிழர்களுக்கு வரலாறு இல்லை கூறியவர்தான் இந்த மதன்.
பெரும்பாலான தமிழர்களைத்தவிர மற்ற மாநிலத்தவர்கள் எல்லோரும் பொதுவாக கூறுவது "Sanskrit is the mother of all language".


தகடூர் கோபி(Gopi) |

காசி,

//இவர்கள் கருத்துக்களும் அடிமைத்தனமும் மிகவும் பிற்போக்காக இருப்பதையும் பார்க்கிறோம். ஆகவே பிரச்னை மதனின் சாதியில் இல்லை, மனோபாவத்தில் இருக்கிறது.//

அதே.. அதே..

பிரபு ராஜதுரை,

Cashewnut கதை என்னன்னு கேக்கலாம்னு இருந்தா அதுக்குள்ள Dr.புருனோ சொல்லிட்டாரு :-)

எ.அ.பாலா,

அதே தான். நாம சொல்லுறதை நாலு பேரு கேக்குறாங்கன்ற மிதப்பு தான் அறிவு வளர்ச்சிக்கான தேடலை முடக்கி விடுகிறது.

புருனோ,

பல சுவையான தகவல்களை சொல்லியுள்ளீர்கள். ஆரஞ்சு,ஆனைகொண்டான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கேஷுநட் வரலாறு எனக்கு புதிது :-)

babu,

//தங்களுடைய கேள்வியை அந்த துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களிடம் கேட்காமல் இவரிடம் என் கேட்கிறார்கள்?//

ஊடகத்துறையில் பல காலம் இருப்போர் எல்லாம் அறிவாளிகள் என்று நம்பும் மக்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

குட்டிபிசாசு,

//பெரும்பாலான தமிழர்களைத்தவிர மற்ற மாநிலத்தவர்கள் எல்லோரும் பொதுவாக கூறுவது "Sanskrit is the mother of all language"//

உண்மை. இதை நான் தெலுங்கிலே கண்கூடாய் கண்டேன்.

'இப்போது' என்பதற்கு 'இப்புடு' என்பது கொச்சை தெலுங்காம். 'ஈக்ஷணம்' அல்லது 'ப்ரஸ்துதம்' என்பது அழகான தெலுங்காம். "அடப்பாவிகளா, உங்க வேரை மறந்துட்டீங்களேடா" என்று நினைத்துக் கொண்டேன்.


தறுதலை |

மண்ணாங்கட்டி மதனை படித்தால் அருவெறுப்பாகத்தான் உள்ளது. மலத்தை தாண்டுவது போல் ஒதுக்கிச் செல்லவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் பேண்டு வைப்பது நடு வீதியில்.

ஆனாலும் இவன் இப்படியே கழிந்துவிட்டு ஓடிவிடுதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும். என்ன செய்யலாம்?


-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)


தகடூர் கோபி(Gopi) |

தறுதலை,

இந்த உலகில் ஒருவர் தம் கருத்தை சொல்லும் வார்த்தையில் தான் அவரின் தரமே அளவிடப்படுகிறது.

உங்கள் கருத்தையே இன்னும் கொஞ்சம் நல்ல வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம்.

"கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்கிறார் அய்யன்.


நல்லதந்தி |

அவர் கார்டூனிஸ்ட்டாக இருந்தவரைக்கும்,அவரோட கைவண்ணம் புடிச்சது.


வந்தியத்தேவன் |

சென்ற வருட டிசம்பரில் நான் எழுதிய இந்தப்பதிவைப்பாருங்கள். மாதவனின் கருத்துக்களுக்கு மதன் தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டினார்.

http://enularalkal.blogspot.com/2007/12/blog-post_28.html


Kalaiyarasan |

Well done. விழிப்பாகவே இருக்கிறீர்கள். அவ்வப்போது இது போன்றவற்றை பார்த்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்.

Kalaiyagam
http://kalaiy.blogspot.com


பெயரில்லா |

சமஸ்கிருதத்திற்கும் இலத்தீன் மொழிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. இரண்டிரும் ஒரு சொல்லிற்கு அதிகபட்சம் ஒரேயொரு அர்த்தம் மாத்திரமேயுண்டு. இதனாலேயே இந்தியர் பண்டை காலத்தில் நுால்களை எழுத சமஸ்கிரதத்தையும் மேலை நாட்டவர் இலத்தீனையும் உபயோகித்தார்கள். ( கிரேக்க நாட்டில் இடம்பெற்ற பைபிள் விடயங்கள் இலத்தீன் மொழியில்தான் முதலில் எழுதப்பட்டது)
மஹாபாரதமும் முதலில் வியாசரால் சமஸ்கிரதத்தில்தான் எழுதப்பட்டது.
(வடமொழியும் சமஸ்கிரதமும் ஒன்றல்ல)

ஆனால் இவ்விரு மொழிகழும் பேச்சுமொழிகள் இல்லை. எழுதுவதற்கு மாத்திரமே. எக்காரணம்கொண்டும் எழுதுபவரின் கருத்து மாறாமல் மொழிபெயர்ப்பு செய்ய இம்மொழிகளின் தன்மைதான் காரணம் ( ஒரு சொல் = ஒரு meaning) இந்தியா வந்த ஆங்கிலேயர்கூட தமிழ் பைபிளை ஆங்கிலத்திலிருந்தல்ல, இலத்தினிலிருந்துதான் மொழிபெயர்ப்பு செய்ய துாண்டினார்கள்.

ஆக சில சொற்களுக்கு புர்வீகம் தேட முதலில் இவ்விரு மொழிகளையும்தான் அறிஞர்கள் முதலில் ஆராய்வது வழக்கம்.

அதைப்பின்னற்றித்தான் (காப்பி பண்ணி- இப்ப சந்தோசமா?? :) ) மதனும் சொல்லியிருக்கலாமென்பது எனது கருத்து.


சிக்கிமுக்கி |

//எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம்//

ஏனென்றால், இந்த ஆளின் 'கச்சிப்போன' மூளையே செத்துப்போன சமற்கிருதம்!

(கச்சிப்போதல் = பித்தளை போன்றவற்றால் ஆன ஏனங்களில் உப்பு, புளிப்புச் சுவையுடைய உணவுப்
பொருள்களை வைத்திருந்தால் வேதியல் மாற்றங் காரணமாகக் கெட்டுப்போவது)
---------------------------------------------------------------


குரங்கு |

இப்ப உங்க அனைவருக்கும் மதன் கிடச்சுட்டாறா???

மொழிய வெறும் மொழியா மட்டும் பாருங்க...

ஒருத்தர் சொன்னதுக்காக எதுக்கு ஒரு ஜாதிய இழுக்கனும்?


Indian |

//மொழிய வெறும் மொழியா மட்டும் பாருங்க...

ஒருத்தர் சொன்னதுக்காக எதுக்கு ஒரு ஜாதிய இழுக்கனும்?//

சமஸ்கிருதம் நம்முடைய தேசிய மொழியாக இருந்தா எவ்வளவு நல்லாருக்கும் அப்படின்னு ஒரு கன்னட பருப்பு என்னிடம் திருவாய் மலர்ந்துச்சு. அதோட சாதி என்னவென்று கூறவும் வேண்டுமோ?


தகடூர் கோபி(Gopi) |

நல்லதந்தி,வந்தியத்தேவன்,KALAIYARASAN

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

hisubash,

//சமஸ்கிருதத்திற்கும் இலத்தீன் மொழிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. அதிகபட்சம் ஒரேயொரு அர்த்தம் மாத்திரமேயுண்டு.//

இலத்தீன் பற்றி தெரியாது. சமஸ்கிருதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொண்ட வார்த்தைகள் பல உண்டு.

dehaM = body, existence
daNDa = a staff, also monetary punishment for wrong doing
kuNDala = coil of rope, ring
koshha = a vessel, bucket, a box, seheath, cover, store, store-room, treasury, nutmeg, dictionary, lexicon, vocabulary
khaga = one traversing in the sky, a name of Sun, also birds
chakra = Circle, wheel, psychic centre in humans
tamasa = darkness, inertia, ignorance
taaraka = star, eye

//ஆனால் இவ்விரு மொழிகழும் பேச்சுமொழிகள் இல்லை. எழுதுவதற்கு மாத்திரமே//

இப்போதும் எழுதப்படுகிறதா? எனில் எந்த எழுத்து வடிவில் (Script) எழுதப்படுகிற்து?


சிக்கிமுக்கி,

தனிநபர் தாக்குதல் வேண்டாம். அது சரக்கில்லாதவர்களின் கடைசி ஆயுதம்.

குரங்கு,

இது சாதி பற்றிய பதிவல்ல, மதன் என்ற ஊடகவியளாலரின் கேள்வி பதில் பற்றிய பதிவு.


indian,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் மதன் கேள்வி பதிலுக்கும் உங்களிடம் சமஸ்கிருதம் குறித்து பேசிய கன்னடத்தவரின் சாதிக்கும் என்ன தொடர்பு?

நண்பர்களுக்கு, இப்பதிவுக்கு தொடர்பில்லாத, சாதி குறித்த, தனிநபர் தாக்குதல்கள் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.


பெயரில்லா |

விக்கிபீடியாவில் பார்த்தது
Rice Etymology

According to the Microsoft Encarta Dictionary (2004) and the Chambers Dictionary of Etymology (1988), the word rice has an Indo-Iranian origin. It came to English from Greek óryza, via Latin oriza, Italian riso and finally Old French ris (the same as present day French riz).

It has been speculated that the Indo-Iranian vrihi itself is borrowed from a Dravidian vari (< PDr. *warinci)[8] or even a Munda language term for rice, or the Tamil name arisi (அரிசி) from which the Arabic ar-ruzz, from which the Portuguese and Spanish word arroz originated.

இரண்டாவது பேராவில் இருப்பதையும் அவர் சொல்லியிருந்து இருக்கலாம்.
மோகன்


Indian |

//indian,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் மதன் கேள்வி பதிலுக்கும் உங்களிடம் சமஸ்கிருதம் குறித்து பேசிய கன்னடத்தவரின் சாதிக்கும் என்ன தொடர்பு?//

இந்தக் கேள்விக்கான விடை வெளிப்படை என்றாலும் சொல்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியை தவிர வேறு யார் சமஸ்கிறுதத்திற்கு இங்கு கொடி பிடிக்கிறார்கள்?