ஞாபகமாய் மறந்துவிட்டேன்
Google Buzz Logo

தாயின் திருமண தினம்
சோதரனின் பிறந்ததினம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் என் வீட்டில்

முதன்முதலில் சென்ற இடம்
முதன்முதலில் எடுத்த படம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் என் நட்பில்

திட்டத்தின் துவக்கதினம்
திட்டத்தின் முடிவுதினம்
ஏதுமென் நினைவிலில்லை
ஒன்றுக்கும் பயனில்லை
என்கிறார்கள் பணியிடத்தில்

சின்னஞ்சிறு வயதினிலே
பிஞ்சுக்கரம் என் விரல் பிடித்து
துள்ளாட்டம் போட்டபடி
என்னோடு நீ நடக்க
சுற்றி வந்த நினைவுகளும்

சதுரங்கம் ஆடுகையில்
தோல்வி எனைத் தழுவுமெனில்
அழுகை முட்டும் விழிகளோடு
ஆட்டத்தை நீ கலைத்து
வீசியெறிந்த ஞாபகமும்

நீக்கமற நிறைந்திருக்கும்
நீ வசிக்கும் என்னுள்ளே
வேறெதையிம் ஏற்றிடவே
இடமில்லை எண்ணத்தில்
Out of Memory Error!

11 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Thangam சொன்னது...

சூப்பர்.............

/*out of memory error*/

ரசித்தேன்.


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

கோபி கொன்னுட்டே போ...


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால். சொன்னது...

அன்புள்ள கோபி,

அருமை!!!!

அது யாரு அன்பா? என்னுடைய 'கொன்னுட்டீங்களை' எடுத்துகிட்டது!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


பெயரில்லா |

மணிக்கு suratha சொன்னது...

நன்று.அந்தப்பக்கமும் Out of Memory Error! இருக்கா?:)


பெயரில்லா |

மணிக்கு suratha சொன்னது...

நன்று.அந்தப்பக்கமும் Out of Memory Error! இருக்கா?:)


பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

அட!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அந்தப்பக்கம் "Cached Memory" அதிகமுங்க. அப்பப்ப "Bad Command or Filename" சொன்னாலும் என்னோட ப்ரியமான OS எப்பவுமே அவுங்க தானுங்க


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

பாத்துங்க கோபி, ஆட்வேர்,மால்வேர்,ஸ்பைவேர் வந்து குடிகொள்ளப் போகிறது!


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

machi
she will think of all the things that you cant (amma wedding day, brother's b'day....etc)
but, unna pathy nenaikkum pothu mattum avalukku "Out of Memory Error!"...aagum.
any doubts????


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

machi
she will think of all the things that you cant (amma wedding day, brother's b'day....etc)
but, unna pathy nenaikkum pothu mattum avalukku "Out of Memory Error!"...aagum.
any doubts????


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

Gopi,
சும்மா கலக்கறீங்க! Really excellent kavithai! டைம் கிடைச்சா, அப்படியே ஒரு நடை என் வலைப்பதிவுக்கும் போய்ட்டு, அங்கே இருக்கிற சமீபத்து பதிவுகளை படிச்சுட்டு,
உங்க கமெண்ட்ஸ்-ஐ கொடுங்க! ஓரு சிறுகதை எழுத முயற்சி பண்ணியிருக்கேன்!?!?!?!? போய்ப் பாருங்கய்யா!
என்றென்றும் அன்புடன்,
பாலா