சாக்பீஸில் கலைவண்ணம் கண்டான்
Google Buzz Logo

விகடன் வார இதழில் ஒரு வளரும் சிற்பி சாக்பீஸில் தாஜ்மகால் செதுக்கியிருந்தார். நமக்குத்தான் யாராவது எதையாவது புதுசா செஞ்சா உடனே காப்பி அடிச்சி பாக்கத் தோனுமே.

என்ன ஒன்னு. நாம காப்பி அடிச்சி முடிச்சி பாத்தாக்க நம்ம அளவுக்கு ஒரிஜினல் கூட வராது (ஹி.ஹி. சும்மா டமாசு)

அவருக்கு ஒரு தாஜ்மகால்னா நமக்கு ஒரு கோவில் அப்பிடின்னு ஆரம்பிச்சி செதுக்கினா....











சாக்பீஸிலேயே உருவங்கள் சரியாக வரவில்லையே எனக்கு, கல்லில் உளி கொண்டு செதுக்கும் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு சிற்பங்களைப் படைப்பார்களோ!


படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

7 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

இன்னும் கொஞ்சம் பெரிய கோபுரமா செய்யக்கூடாது?


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

மொதல்ல உயரம் குறைவா கண்ணாடிப் பெட்டிய தயார் செஞ்சப்புறம் சாக்பீசை குடைய ஆரம்பிச்சதுனால கோபுரம் சின்னதாப் போச்சிங்க.


பெயரில்லா |

மணிக்கு Eelanathan சொன்னது...

கோபி அற்புதம் என்றில்லாவிட்டாலும் நன்றாக இருக்கிறது.இன்னும் முயற்சிக்கலாமே


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

நல்ல முயற்சிதான். இன்னும் போகப் போக அழகுறச் செய்வீர்கள். மனம் தளறாமல் தொடருங்கள் கோபி.

(அது சரிங்க.. தற்குறிப்பு புகைப்படத்தில் யார் அது சிறு குழந்தை?)


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஈழநாதன்,

நன்றி. கவலைகளேதுமில்லாத கல்லூரி நாட்களில் செய்தது. மீண்டும் முயற்சியைத் துவங்க வேண்டும்..

மூர்த்தி,

சாட்சாத் அது நானேதான் (கால் நூற்றாண்டுக்கு முன்னே)


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

அன்புள்ள கோபி,

நல்லா அருமையாத்தான் வந்திருக்கு. முதல் முயற்சியிலேயே இந்த அளவு வந்தது நல்ல விஷயம்தானே!

என்றும் அன்புடன்,
துளசியக்கா


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

துளசியக்கா,

முதலும் கடைசியுமா செதுக்கினது அது.

இனிமேதான் புதுசா செதுக்கனும்.

(உங்களை துளசியக்கான்னு கூப்பிட இன்னமும் யோசனையாத்தான் இருக்கு. ஏன்னா அக்கா/அண்ணான்னு சொன்னா நெறைய பேரு கோபிச்சிக்கறாங்க.)