காதலும் கல்யாணமும்
Google Buzz Logo

ஒரு ஊர்ல ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு

12 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Suresh Kannan சொன்னது...

very good strory for unmarried persons. :-)


பெயரில்லா |

மணிக்கு ரவியா சொன்னது...

இதோ மேல்kind க்கு ஒரு லின்க் கொட்டுத்திடுறேன்.


பெயரில்லா |

மணிக்கு S Krupa Shankar சொன்னது...

டேய் கோபி! உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்திடா :-))


பெயரில்லா |

மணிக்கு ராதா சொன்னது...

குட்டியூண்டா இருந்தாலும் கெட்டியான கதை :)


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

அன்புள்ள கோபி,

நல்ல கதைதான்! கரும்பு கிடைச்சதா?

என்றும் அன்புடன்,
துளசியக்கா


பெயரில்லா |

மணிக்கு மூக்கன் சொன்னது...

சூப்பர் கோபி. அசத்தீட்டேள் போங்கோ..

ஆமா..கல்யானமான ஃப்ரெண்ட யாராவது இருக்காங்களா..?? அப்படியே மனசுல "பச்சக்" குனு ஒட்டிக்குதே இந்தக் கதை..:-)


பெயரில்லா |

மணிக்கு sathyarajkumar சொன்னது...

ஆசிரமத்துக்கு முன்னாடி காதல், பின்னாடி கல்யாணம். கதையோட கருத்து ஓரளவுக்கு விளங்குதுங்க கோபி !

- சத்யராஜ்குமார்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

யோவ் கி(றுக்கு)ருபா, எதுக்குய்யா என் வாயை கிண்டுறீரு ?

துளசியக்கா, கரும்பை (அதோட)சின்ன வயசுலயே கண்டுபிடிச்சிட்டதுனால தேக்கு சரியா இருக்கும்னு நம்பறேன். ம்ம்... பாக்கலாம்

மூக்கரே,

வரிசையா கல்யாணம் ஆவுது ப்ரெண்ட்ஸுக்கெல்லாம். அதனால இந்த மாதிரி ஏகப்பட்ட கதைகள் கண்ணுல படுது

SRK,

அருமையான கோணம் இந்த விஷயத்தை நான் கவனிக்கலை

அப்றம்.. இந்தக் கதை ஒரு மேற்கத்திய துணுக்கை தழுவியது.


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

இதை, இதைத் தான், நான் எதிர்பார்த்தேன், நண்பர் கோபியிடம் :-)
ஆனால், நான் வெட்டினது ரொம்ப நல்ல மரம்பா!!!


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

இதை, இதைத் தான், நான் எதிர்பார்த்தேன், நண்பர் கோபியிடம் :-)
ஆனால், நான் வெட்டினது ரொம்ப நல்ல மரம்பா!!!


பெயரில்லா |

மணிக்கு கி சொன்னது...

அருமைவான காதல் கல்யாணத்தை பற்றிய கதை...
:)

நான் இப்போது மரத்தை தேடிக்கொண்டிருக்கிறேன.....


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

kadhal enbathu karumbu mathiri......just chew,taste and spit.
kalyanam enbathu thekku maram mathiri...will last forever
-------
yenda karthi...eppadi unnala mattum mudiyuthu...ennamo poda