குழந்தைகளுக்கான வலைப்பூக்கள்
குழந்தைகள் முகம் எப்பவுமே மலர்ச்சியா இருக்க காரணம் அவங்க மனசுல வஞ்சம் ஏதும் இல்லாம இருக்கறது தான். குழந்தைகள் யாரோடாவது சண்டையிட்டால் கூட மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவர்களோடு இன்முகம் காட்டி பழகும்.
இப்படி இருக்கும் குழந்தைகள் நாளடைவில் சுற்றத்தாரைப் பார்த்தும் வளர்ப்பு முறையினாலும் வஞ்சங்களைப் பழகிக் கொள்கிறது.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கேற்ற வகையில் நல்ல பல நீதிக்கதைகளையும் குட்டிக் கதைகளையும் பதியும் சில வலைப்பூக்கள் கீழே:
பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவில் "சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்." என்கிறார். இந்த வலைப்பக்க வடிவமைப்பைப் பார்க்கும்போது அம்புலிமாமா,பாலமித்ரா படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
கங்காவின் தினம் ஒரு ஸென் கதையில் பல்வேறு ஸென் கதைகளை மொழிபெயர்த்து தனது கருத்துக்களுடன் வெளியிட்டு வருகிறார். சமீப காலம் வரை தினம் ஒரு கதையாகத்தான் பதித்து வந்தார். தற்சமயம் அவ்வாறில்லாமல் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பதிக்கிறார். இது நான் தவறாமல் படிக்கும் வலைப்பூ.
ந. உதயகுமாரின் குட்டிக் கதைகள். இவர் இந்தப் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளிவந்த சின்னஞ்சிறு நீதிக்கதைகளைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டு வருகிறார். சிறுவர்களுக்கு ஏற்றவாறு அருமையாய் இருக்கிறது.
சந்திரமதி கந்தசாமி (மதி) சிறுவர் பாடல்கள் என்ற தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சந்திரவதனா குழந்தைகள் - தாய்ப்பால் முதல் முதலுதவி வரை என்ற தளத்தில் தலைப்பில் கூறியவாறு குழந்தை வளர்ப்பு சம்பந்தமாய் பயனுள்ள அனைத்து விவரங்களையும் பதித்து வருகிறார்.
இன்னும் இது போல குழந்தைகளுக்கான எத்தனையோ தளங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படி ஏதேனும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.
எல்லோரும் படிப்போம். குழந்தைகள் ஆவோம் மனதினால்!
பி.கு: இது வலைப்பூக்களில் சர்ச்சைக்குறிய விவாதங்கள் மூலம் வீண் பரபரப்பை ஏற்படுத்துவோரையோ, மூன்றாம் தர பின்னூட்டம் இடுவோரையோ திசை திருப்பும் முயற்சியல்ல. என் போன்ற பாமரர்கள் சொல்லியா இது போன்றவற்றை மாற்ற முடியும்?
இந்த ஜென் கதை சொல்வது போல "துப்ப விரும்புவோர் துப்பிக் கொள்ளுங்கள், ஆனால் நான் தலை வணங்கவே விரும்புகிறேன்" தமிழ் மொழியை.
10 கருத்து(க்கள்):
தொகுப்புக்கு நன்றி... இதை ஓரிடத்தில் இணைக்கலாம் - அப்படி நடந்தால் எல்லாரும் தகவல் தர ஏதுவாயிருக்கும் ஒரு குழுப்பதிவாக.
தோழியர், பங்குச்சந்தை... போன்று முந்தைய தமிழ்மண வடிவமைப்பில் இருந்தால் அருமையா இருக்கும்.
அது ஒரு கார்காலம்....:(
உபயோகமான தகவல்கள் கோபி. மிக்க நன்றி!
பயனுள்ள பதிவுகளை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி கோபி!
வீ எம்
கோபி நல்ல தகவல்கள். அன்பு சொல்வது போல பிரிவு வாரியாக வலைப்பூக்களை மாலையாக்க வேண்டும்
நல்ல தகவல்கள்
நல்ல தொகுப்பு நண்பரே!
மேலும் தகவல்கள் கிடைத்தால் நானும் கொடுக்கிறேன்.
சின்ன வயசில் ரொம்ப அழகாக இருக்கீங்க.
பரஞ்சோதி,
ஹி..ஹி..
கையில பாதி கடிச்ச ஒரு கரும்பை வச்சிகிட்டு யாருக்கும் தரமாட்டேன்னு அழுது அழிச்சாட்டியம் பண்ணி எடுத்த படம். அதனால மூஞ்சில ஒரு கலக்கம் தெரியும்.
:-)
ஹூம்.. பழைய நெனப்பு..
A pat on the back for your endeavour !!! Thanks !
தகவலுக்கு மிக்க நன்றி கோபி!
பரஞ்சோதி அண்ணா! நம்ம கோபி சின்ன வயசுல மட்டுமல்ல பெரிய வயசிலேயும் அழகுதான்(ஐஸ் வைக்கலீங்கோ!)
நீண்ட நாள் சென்று இப்போது தான் இதைப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கோபி. உங்கள் வீட்டில் ஒரு வாண்டு வருவதற்கும் முன்பே தயாராகத் தான் இருக்கிறீர்கள் ;-)
நீங்க சொல்லுங்க