அண்ணா பல்கலை பழைய மன்னராட்சி
Google Buzz Logo

முகமூடியின் அண்ணா பல்கலை மன்னராட்சி பதிவைப் பார்த்ததும் இதைப் பதிக்கனும்னு தோனுச்சி.

இது அண்ணா பல்கலையில் இப்போதிருக்கும் துனைவேந்தருக்கு முன்னிருந்த பாலகுரு மன்னருக்கு முன்னிருந்த கலையான நிதி மன்னர் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவம்:

அப்போது தான் சுற்றுப்புற சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

காலையில் நேரம்..

நண்பனொருவனும் உடன் படித்த இன்னொரு அம்மணியும் மாலை நடக்க இருந்த தேர்வுக்கு உலோகவியல் பாடப்பிரிவின் எதிர்ப்புறமிருந்த மரத்தடி மேடையில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் படிப்பு முடிந்து பணியில் அமர்ந்ததும் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தவர்கள். எனவே அவர்கள் அந்நியோன்னியத்தை கெடுக்க விரும்பாமல் வழக்கம் போல அருகிலிருந்த இன்னோரு மரத்தடி மேடையில் அமர்ந்து நானும் இன்னொரு நண்பனும் படித்துக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரம் கழித்து மிகவும் வெறுமையாய் உணர்ந்ததால் (அதானே படிக்கும் போது தான் நமக்கு போர் அடிக்கும்...) கேண்டீனில் போய் பூனம் கேசர்பாதாம் (அறிமுகமான புதிது.. கேண்டீனில் சலுகை விலை) அருந்திவிட்டு வரலாம் என நானும் என்னுடன் படித்த நண்பனும் மட்டும் சென்றோம்.

சற்று நேரம் கழித்து திரும்பி வந்தால் கலையான நிதி மன்னர் காரசாரமாய் நண்பனிடமும் அம்மணியிடமும் கத்திக் கொண்டிருந்தார்..

விஷயம் இது தான்... அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களின் அடையாள அட்டையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு "பெற்றோரை கூட்டிவா.. ஆ.. ஊ.." என கத்தியுள்ளார். (நல்லா கவனிங்க இது ஏதோ ஒரு ஆரம்ப பாடசாலையில நடக்கலை.. முதுநிலை பட்டய படிப்பின் போது நடந்தது). நண்பன் பதிலுக்கு கத்தியுள்ளான்.

அப்றம் என்ன.. கலையான மன்னர் வேகமாய் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.

அப்புறம் எப்படி அடையாள அட்டையை திரும்பி வாங்கினாங்கன்னு கேக்கறீங்களா.. அந்த நண்பனின் தந்தை அப்போது அண்ணா பல்கலையில் ஒரு பாடப்பிரிவின் தலைவராய் இருந்தவர். அவருக்கு நண்பனின் காதல் விஷயம் நன்கு தெரியும். கலையான மன்னர் போன உடனே அவர் பின்னாலேயே இவர் போய் "எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி அடையாள அட்டையை திரும்ப வாங்கிக் கொடுத்தார். (கொடுக்கும் போது கலையான நிதி மன்னரின் முகத்தில் தெரிந்த ஏமாற்ற உணர்ச்சியை காணக் கண் கோடி பத்தாது. இன்னிக்கு நெனச்சி பாத்தாலும் மறக்கமுடியாது அந்த முகத்தை..)

பின் குறிப்பு: இந்தப் பதிவு "டீ.சர்ட் அணிய தடை" சம்பந்தமானதல்ல. அந்த விதி சம்பந்தமான எனது கருத்து:

மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் படிக்கவும்: விதிமுறைகள் மீறுவதற்கே - Rules are made to be broken.

4 கருத்து(க்கள்):

முகமூடி |

என்க கல்லூரியில மட்டுமில்லாம எல்லா கல்லூரியிலயும் எலக்ட்ரிகல் பிரிவு ஆசிரியர்களுக்கு ஆண்கள் பெண்களோடு பேசினால் பிடிக்காது என்பதை நண்பர்கள் வாயிலாக அறிந்திருந்தேன்...

ஆனால் சென்னையில் அதுவும் ஒரு துணைவேந்தர் இந்த மாதிரி இருந்தால் நம்மாளுங்கோ எவ்ளோவோ பரவாயில்லீங்கோ...

இதுவாவது பரவாயில்லை... சென்னை அண்ணா நகர் டவரில் காதல் ஜோடிங்களை போலீஸ் அள்ளிகிட்டு போயி பெற்றோர்களை கூட்டி வர சொன்னார்களே ஞாபகமிருக்கா... இவிங்க எல்லாம் என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்கோ...


Agent 8860336 ஞான்ஸ் |

+


Kangs(கங்கா) |

கோபி,
உங்கள் பதிவில் நியாயம் இருக்கிறது. முன்பின் தெரிந்தவர்கள், பழகியவர்கள், உண்மையான காதலர்கள், ஆண் பெண் நண்பர்கள், கல்லூரி நட்புடன் கூடிய காதல், படிப்பு பறிமாற்ற நட்பு எனப் பல வகையில் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கட்டதில் ஒருவருக்கொருவர் உரையாட வேண்டி இருக்கிறது.

உண்மையான காதலர்கள் இருக்கும் அதே வேளையில் காமுகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அபலைகளைக் காப்பாற்றும் பொருப்பும் சமுகத்துக்கு உள்ளது. தீர வீசாரித்து உண்மை தெரிந்தவுடன் விட்டிருக்கலாம், விடாததால் கொட்டுப் பட்டிருக்கிறார்.


Arvind |

Hi Gops :-) ,
இது நான் படித்தா முதல் தமிழ் ப்லொக் .. well i shud say I am still reading :-) .. this comment is more towards you blogging in தமிழ் more than commenting this particular blog.

Its really a nice feeling to see தமிழ் online .. This helps me stay in touch with the reading and writing part of my mother toungue.

Thanks Much ! :-)

best rgds,
அர்விந்த்