காதல் இல்லை இது காமம் இல்லை
அப்பாடா! மலைக்கு போய் வந்த உடனே சுடச்சுட மேல்Kind பாணியில் ஒரு விஷயம்
வேலையிடத்தில் ஒரு பெண் (நீங்கள் பெண்ணாயின் ஒரு ஆண்) உங்களோடு நெருங்கிப் பழக விரும்பினால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? உங்களுக்கு உதவ பத்து குறிப்புகள் (பயன்படுத்துவதும் பிறகு அடிவாங்குவதும் உங்கள் விருப்பம். அப்றம் நான் சொன்னேன்னு என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது ஆமா!)
கீழ் சொல்லியுள்ள அனைத்தும் நீங்களும் அவளும் தனியே இருக்கும் போது என்பதை நினைவில் கொள்க.(நீங்கள் பெண்ணாயின் ள் க்கு பதில் ன் போட்டுக்கொள்க)
10) கடைக்கண் பார்வை
அவள் வழியில் நீங்கள் போக நேரும் போதெல்லாம் உங்கள் மீது அவள் பார்வை படிகிறதா, அதை நீங்கள் கண்டுபித்துவிட்டீர்களென்று அவளுக்கு தெரிந்தால் அவள் கண்கள் உங்களைத் தவிர்க்க அங்குமிங்கும் அலை பாய்கிறதா? கொஞ்ச நாள் பொறுங்கள் காலம் இன்னும் கனியவில்லை(சிலருக்கு கண்பார்வையே அந்த மாதிரி இருக்கலாம்)
9) புன்னகை
உண்மையான புன்னகை திறந்த மனதுக்கும் நட்புக்கும் அடையாளம். கண்களில் பிரகாசத்துடன் அவள் உங்களைப் பார்த்து சிரிக்கிறாளா? உங்களின் அருகிலிருப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளை அடிக்கடிப் புன்னகைக்க வையுங்கள் நீங்கள் நெருங்கியவர்களாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. (காரணமில்லாமல் அடிக்கடி புன்னகைத்தால் நட்டு கழன்ட கேசா கூட இருக்கலாம்)
8) உங்கள் பார்வை
சம்பந்தமே இல்லாமல் உங்கள் பார்வையில்பட வேண்டும் என்பதற்காக உங்கள் இருக்கை வழியாக வந்து செல்கிறாளா? உதாரணத்துக்கு நீங்கள் அமர்ந்திருப்பது உணவு அறையிலிருந்து பல அடிகள் தொலைவில் என்றாலும் ஒவ்வொரு முறை காபி அருந்த வரும்போதும் அவள் உங்கள் இருக்கை வழியாகவே செல்கிறாள் என்றால்...(உஷார் உடற்பயிற்சிக்காக நடை பழகலாம். இல்லைன்னா உங்க இருக்கைக்கு பின்னாலிருக்கும் ஜன்னலில் தெரியும் இயற்கை காட்சி பிடிச்சிருக்கலாம்)
7) தலைமுடி கோதுதல்
ஒருவரின் தலை முடி அவர்களின் தன்னம்பிக்கை, தைரியத்தின் அடையாளம். உங்களோடு பேசும்போது அவளையறியாமல் அவள் தலைமுடியை கோதுகின்றாள் என்றாள் ஏறகுறைய காலம் கனிந்துவிட்டது என்று அர்த்தம் (பாத்து பொடுகு/பேன் தொல்லையா இருக்கப்போவுது)
6) முதல் பேச்சு
அவர்களாகவே பேச ஆரம்பிப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அதுலயும் "நீங்க என் நண்பன் ஒருத்தன் மாதிரியே இருக்கறீங்க"ன்னு ஆரம்பிச்சா கண்டிப்பா உங்களோடு நெருங்கிப் பழக விரும்புகிறாள் என்று அர்த்தம்.
பேச்சின் நடுவில் உங்கள் பெயரை அவள் உச்சரிக்கும் விதத்தை கவனியுங்கள், மற்றவர் பெயரை சொல்வதற்கும் அதற்கும் நல்ல வித்யாசம் தெரியும்.
அதுக்கப்றம் அவர்கள் அடிக்கடி உங்களின் காதருகில் நெருங்கி "ரகசியம்" என்ற பெயரில் ஏதாவது சொல்லலாம். (சில பேரு சகஜமா பேசுவது அவர்களின் சுபாவமா இருக்கலாம், பாத்துக்கோங்க)
5) சிரிப்பு
உங்கள் அசட்டு ஜோக்குகளுக்கும் சிரிக்கிறாளா? "ப்ரமாதம்", "ஆச்சரியமா இருக்கே!" என்றெல்லாம் சொன்னாள் என்றால் உங்களுக்கு பச்சை சிக்னல் கெடச்சாச்சி ( "ஓ இது ஜோக்கா! எத்தனை பல்லு தெரியற மாறி சிரிக்கனும்"ன்னு கேட்டா, அப்படியே ஓடிப்போயிருங்க இது பிரயோஜனப்படாது)
4) உங்கள் விருப்பம்
உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன என்பதை அறிய ஆர்வமாக அடிக்கடி கேள்வி கேட்கிறாளா? அல்லது "அந்தப் படம் பிடிக்குமா?", "இந்த ஓட்டலில் பிரியானி நல்லா இருக்கும் தெரியுமா" என்றெல்லாம் சொன்னால் நீங்கள் அந்தப் படம்/ஓட்டலுக்கு அவளை தைரியமாக கூட்டிச்செல்லலாம் (பர்ஸுக்கு வேட்டு வைக்கனும்கிற குறிக்கோளோட சில பேர் இருக்காங்க ஆமா சொல்லிட்டேன்)
3) பரிசு
காரணமேதுமில்லாமல் பரிசு தருவது என்பது அரிது. அப்படி யாரும் உங்களுக்கு பரிசு தந்தா உங்க முதுகுல நீங்களே ஒரு தட்டு தட்டிக்கங்க அந்த பரிசுக்கும் அப்றம் பரிசா கிடைச்ச அந்த நட்புக்கும் (சின்னமீனை போட்டு பெரிய மீன் புடிக்கிற டெக்னிக்காவும் இருக்கலாம். அப்றம் அவுங்களுக்காக சனி,ஞாயிறு விடுமுறையில எல்லாம் ஆபீஸ் வந்து Code எழுதி கொடுக்கற மாறி ஆயிடப் போவுது)
2) தொடுதல்
திட்டக் குழு விவாதங்களின் போது, அல்லது நெருங்கிப் பேசும் மற்ற சமயங்களில் உங்கள் தோளில் தட்டுவது, உங்கள் தலைமுடியை சரி செய்வது இது போலெல்லாம் செய்தால் அவள் உங்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வர விரும்புகிறாள் என்பது உறுதி (உங்கள் தலையிலிருக்கும் வழுக்கையை அடிக்கடி தடவிப் பார்க்க ஆசை வந்தால் ஆபத்து)
1) தட்டாமாலை
பணியிடத்தில் ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாக மிகுதியால் அணைப்பது/தூக்கி தட்டாமாலை சுற்றுவது (மிக மிக அரிது சில அலுவலகங்களில் மட்டுமே சாத்தியம்) போன்று செயல்பட்டால், நீங்கள் ஏற்கனவே நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் (இவ்வளவுக்கு அப்றமும் நீங்க இந்த நெருக்கத்தை உதாசீனப் படுத்தினீங்கன்னா உங்களைத் திருத்தவே முடியாது)
பணியிடத்தில் சக பணியாளர் என்பதைத் தாண்டி ஒரு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வது பணியில் பல சமயங்களில் ஏணி போல் உதவினாலும் பாம்பு போல சில சமயங்களில் பாதாளத்தில் தள்ளிவிடும் எனவே பரமபதம் ஆடுவதா என்று நீங்களே முடிவெடுங்கள்
காதல் இல்லை! இது காமம் இல்லை!! இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை!!!
7 கருத்து(க்கள்):
மணிக்கு நவன் பகவதி சொன்னது...
அதெல்லாம் சரி... இந்த ஃபோட்டோ ரொம்ப நல்லாயிருக்கு :) . வீட்டில ஒரே புள்ளையா?
மணிக்கு shankar சொன்னது...
ஆஹா! மேல்kind புகழ் பட்டொளி வீசிப் பறக்குதே! வெரிகுட் வெரிகுட்!
மணிக்கு கோபி சொன்னது...
தலையில அதிகமாக முடியோட இருக்குற போட்டோவைப் பாத்தா ஆசையா இருக்குங்க நவன்.
ஹூம்.. அது ஒரு பொற்காலம்.
நாங்க மூனு பேருங்க வீட்ல.
மணிக்கு Meenaks சொன்னது...
தலைவா, இதையெல்லாம் நீங்க மேல்Kind-லயே விருந்தினர் பதிவா எழுதலாமே. எங்கள் கதவுகள் எப்பவும் தொறந்தே இருக்கும்.
மணிக்கு கோபி சொன்னது...
மீனாக்ஸ்,
தன்யனானேன்.
மேல் Kindல விருந்தினர் பதிவாகப் பதிக்க வழிமுறைகளை தனி மின்னஞ்சல்ல அனுப்புங்க.
கலக்கிடலாம். (படிக்கறவங்கதான் பாவம்)
மணிக்கு கோபி சொன்னது...
மீனாக்ஸ்,
இப்பத்தான் http://malekind.blogspot.com/2004/11/1.html பார்த்தேன். கூடிய விரைவில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மேல்Kind கோள்கைக்கு(:-P) ஏற்ற பதிவுகளை அனுப்பி வைக்கிறேன்.
மணிக்கு ஆரோக்கியா சொன்னது...
இன்னா இது இப்படி இருக்கு
ரொம்ப வச்திய இருக்கு
நீங்க சொல்லுங்க