கோலிவுட் இன்க். மென்பொருள் நிறுவனம்
Google Buzz Logo

ப்ராஜெக்ட் மானேஜர் 'கேப்டன்' விஜயகாந்த் முதலில் வருகிறார்.

ப்ராஜெக்ட் மீட்டிங்கில்-

"இந்த ப்ராஜெக்ட்ல மொத்தம் ஒரு லட்சத்தி பத்தொன்பதாயிரத்தி எழுனூத்தி முப்பத்தி எட்டு லைன் கொடு இருக்கு, அதுல நாம எளுதினது நாப்பத்தஞ்சாயிரத்தி நானூத்தி முப்பத்தி நாலு லைன்,அதுல முப்பதாயிரத்தி நூத்திப்பதினாலு லைன் கமண்ட்ஸ் மட்டும், அவுட்சோர்ஸ் பண்ணது எழுவத்தி நாலாயிரத்தி முன்னூத்தி நாலு லைன், அதுல ஐம்பத்திரெண்டாயிரத்தி முன்னூத்தி பதினாலு லைன் கமெண்ட்."

"இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ இருந்த டீம் சைஸ் ஐம்பத்தினாலு பேர், நடுவுல வேலய விட்டு போனவங்க பதிமூனு பேர், டெட்லைன் மீட் பண்ண வேலைக்கு சேர்த்த கன்சல்ட்டன்ட்ஸ் பத்து பேர், எம்ப்ளாயீஸ் இருவத்தி நாலு பேர்."

"இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ அதோட காஸ்ட் ஐம்பத்திமூனுலட்சத்தி நாப்பத்தஞ்சாயிரத்தி அறுனூத்தி நாப்பத்தஞ்சி ருபாய் முப்பத்தாறு பைசா. முடிக்கிறப்போ அதோட காஸ்ட் மூனுகோடியே ஐம்பத்திமூனு லட்சத்தி இருவத்திமூவாயிரத்தி அறுனூத்திபதினேழு ரூபாய் இருவத்திஎட்டு பைசா"

"ஆக மொத்தம் எல்லாருமச் சேர்ந்து என் தலையில மொளகா அரைச்சுட்டாங்க சார் !!!" (எமோசனாகிறார்).

எனக்கு இந்த சாப்ட்வேர் தொழிலே வேணாம், நான் பாகஸ்தான் போயி தீவிரவாதிங்கள ஷூட் பண்ண போறேன். குட் பை!

(காப்டன் கோபமாக வெளியேறுகிறர், அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்).

அடுத்ததாக,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் (இவரும் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர்)

"கண்ணா, இந்த பக்ன்னு ஒன்னு நம்ம ப்ராஜெக்ட்ல இருக்க கூடாது,அது இந்த பாட்ஷாவுக்கு புடிக்காது."

"ஓரு பக் இருந்த, அதுல நூறு பக் இருக்குனு அர்த்தம்".

"கண்ணா, பக் இருந்த என்ன கூப்பிடு, சும்மா பறந்து பறந்து பக் எல்லாம் பிக்ஸ் பண்ணிடுறேன் :-)"

"கஸ்டமர் சொல்றான்(பக்), அருணாசலம் பிக்ஸ் பண்றான் ;-)"

சூப்பர் ஸ்டார் எல்லாருக்கும் ப்ராஜெக்ட் பற்றி விளக்குகிறார்

"கண்ணா, ப்ரொஜெட் லைப் சைக்கிள்ங்கிறது அண்ணாமலை சைக்கிள் இல்ல, அது வேற,இது வேற. இப்புடு சூடு ( பாடுகிறார் )

ரா! ,ராரா ராமைய்யா, எட்டுக்குள்ள ப்ராஜெக்ட் இருக்கு ராமைய்யா,
எட்டு எட்டா ப்ராஜெக்ட்ட நீயும் பிரிச்சுக்கோ, எந்த எட்டில் இப்பொ இருக்க தெரிஞ்சுக்கோ.

முதல் எட்டில் செய்யாதது ரிக்கொயர்மெண்ட் அல்ல,
நீ ரேண்டாம் எட்டில் செய்யாதது டிசைனும் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

மூனாம் எட்டில் செய்யாதது அனாலிசிஸ் அல்ல
நீ நாலாம் எட்டில் செய்யாதது இம்ப்ளிமெண்ட்டேசன் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

ஐந்தாம் எட்டில் செய்யாதது கோடிங் அல்ல
நீ ஆறாம் எட்டில் செய்யாதது டெஸ்டிங் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

ஏழாம் எட்டில் செய்யாதது பக் பிக்ஸ் அல்ல
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

அடுத்ததாக,
உலக நாயகன் கமலஹாசன் ஒரு ப்ரோக்ராமர்

"என்னது கஸ்ட்டமர் கிட்ட இருந்து பக்-ஆ??"

'ஹான், ஹான்', ஆ, ஐயோ கடவுளே,...............

(கான்பரன்ஸ் ரூமை வட்டமடிக்கத் துவங்குகிறார்)

"இந்த ப்ராஜெக்ட் அசிங்கம், அசிங்கம்,டிசைன் அசிங்கம், இம்ப்ளிமெண்ட்டேசன் அசிங்கம்,அபிராமிய (சீனியர் ப்ரோக்ராமர்) பாக்கனும், அங்க பென்டதால் மரம் எல்லாம் இருக்கும், மலை மேலபோகனும் (ஆன் சைட்), அப்போ தான் இந்த ப்ராஜெக்ட் வேற மேனேஜருக்கு போகும். அபிராமி, அபிராமி

(மயங்கி விழுகிறார்)

அடுத்ததாக
நவரசநாயகன் கார்த்திக்
இந்த ப்ராஜெக்ட் இருக்கு பாரு, அது இந்த ரோஸ் மாதிரி, அழகா, நம்ம ரம்பா(டீம் மெம்பர்) இல்ல,ரம்பா பாதிரி இருக்கும்.

(மேற்கொண்டு டிஸ்கஸ் செய்ய ரம்பாவை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்)

அடுத்ததாக
வைகை புயல் வடிவேலு
பிரண்ட்ஸ் பட நடிகர்கள் இந்த ப்ராஜெக்ட் செய்துள்ளார்கள். நிறைய குறைகளோடு ப்ராஜெக்ட் ரிலீஸ் ஆகியுள்ளது

வ:டேய் இங்க வாங்கடா..நீ போயி இருக்குர எல்லா பக்-உம் பிக்ஸ் பண்ணு.
(ரமேஷ் கிருஷ்ணா செல்ல அவரை பின் தொடர்ந்து சூர்யா, விஜய் இருவரும் செல்கின்றனர்)

வ:டேய்!! நீங்க எங்கடா போறீங்க ??
சூ & வி : பக் பிக்ஸ் பண்ண..
வ:இது வரைக்கும் பண்ண பக் போதும், ஓன்னும் பினிஷ் பண்ண வேணாம்.
(சூ,வி,ர.கி திரும்பி வருகிறார்கள் )

வ:டேய்!, நீ ஏன்டா வந்த ??
ர.கி :நீங்க தானே பக் பிக்ஸ் பண்ண வேணாம்னு சொன்னீங்க..
வ:பக் பிக்ஸ் பண்ண வேணாம்னு சொன்னது அவங்கள, உன்னை இல்ல.
(ர.கி பக் பிக்ஸ் பண்ண செல்கிறார் )
ர.கி : முக்கியமான பக் எது, முக்கியமில்லாத பக் எதுன்னு எப்படி கண்டுபுடிக்கிறது
வ:நீ பிக்ஸ் பண்ற எல்லமே, முக்கியமான பக் தான். போ! போயி வேலைய ஒழுங்காச் செய்

வ:நீங்க இங்க வாங்கடா ( சூர்யா, விஜய் இருவரும் வருகின்றார்கள்)
வ:(விஜய்யிடம்),டேய்! நீ இவன் கூடப் போயி டீபக்கிங் பண்ணு (விஜய் போகிறார்)

வ:நீ என் கூட வா (சூர்யா போகிறார்)
வ:அந்த பக் ஓபன் பண்ணு
சூ:(ஓபன் பண்ணுகிறார், மெதுவாக டைப் செய்ய ஆரம்பிக்கிறார்)
வ:பாத்து, கீ-போர்டுக்கு வலிக்கும்ல, மெதுவா பாத்து பாத்து
வ:வேகமா டைப் பண்ணித் தொலைடா

4 கருத்து(க்கள்):

சாகரன் |

கேப்டன், ரஜினி, கமல் மூணுமே கலக்கல்....:-)


ஈழநாதன்(Eelanathan) |

வணக்கம் கோபி தமிழ் வலைப்பதிவுலகத்துக்கு மிக தாமதமாக உங்களை வரவேற்கிறேன்


அன்பு |

அருமையா எழுதியிருக்கீங்க கோபி... அதிலும் PM விஜயகாந்தோட டாக்-தான் பிரமாதம்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஆகா! இது நம்ம சரக்கு இல்லீங்க.

கரகோஷங்களனைத்தும் மின்னஞ்சலின் மூலம் இதை எனக்கு அனுப்பியவருக்கும் அதை உருவாக்கியவருக்கும் உரித்தாக்குகிறேன்.