மொதல் தடவை
Google Buzz Logo

ஊர்ல ஒரு தாத்தாவும் பாட்டியும் 60 வயசுக்கு மேலயும் சந்தோசமா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தாங்க. இந்த ரகசியத்தைத் தெரிஞ்சிக்கிட்டா நாமளும் நம்ம வருங்காலத்துல பொண்டாட்டி கூட கடைசிவரை சந்தோசமா இருக்கலாமேன்னு நெனச்சி அவரு கிட்ட கேட்டேன்

"அது ஒரு பெரிய கதை" என்று ஆரம்பித்தார் தாத்தா.

எங்களுக்கு கல்யாணமான புதுசுல கிராமத்து ஜனங்கள்ளாம் சேந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டிய கல்யாணப் பரிசா குடுத்தாங்க. சரி கல்யாணத்துக்கு பரிசா வந்ததாச்சேன்னு நானும் அவளும் அந்த வெள்ளாட்டுக் குட்டிய வெட்டி கறி சமைக்காம பிரியமா வளக்க ஆரம்பிச்சம். ஆனா அந்த ஆட்டுக்குட்டி என்னோட பழகற மாறி அவளோட பழகாது. ஏன்னே தெரியாது, அவ அதொட பக்கத்துல போனாலே "ப்ர்ர்ர்ர்"னு சத்தம் பொடும், மொறைக்கும் இன்னும் என்னன்னவோ செய்யும்.

இப்டி இருக்கயில ஒரு நா அத என் பொண்டாட்டி மேய்ச்சலுக்கு கூட்டினு போனா. நானும் கூடவே போனேன். திடீர்னு அந்த ஆட்டு குட்டி என் பொண்டாட்டிய வேகமா முட்டிடிச்சி. ஆனா அவ சிரிச்சிகிட்டே "மொதல் தடவ" அப்பிடின்னா.

கொஞ்ச தூரம் போயிருப்பம் ஆட்டு குட்டி மறுபடி முட்டிச்சி இப்பவும் அவ சிரிச்சிகிட்டே "ரெண்டாவது தடவ" அப்பிடின்னா.

மறுபடி கொஞ்ச தூரம் போனாக்க ஆட்டுக்குட்டி மறுபடி முட்டிச்சி. இப்ப என் பொண்டாட்டி "மூனாவது தடவ" அப்பிடின்னு சொல்லி அருவாள எடுத்து ஒரே போடு. அவ்வளவு தான் ஆட்டுக்குட்டி அங்கயே காலி. எனக்கு வந்துச்சி பாரு கோவம், "ஏண்டி அறிவு கெட்டவளே, கல்யணத்துக்கு பரிசு குடுத்ததப்போய் வெட்டிட்டியே" அப்டின்னு கத்திகிட்டே அவள பளார்னு ஒரு அரை விட்டேன்.

ஆனா அவ சிரிச்சிகிட்டே "மொதல் தடவ" அப்பிடின்னா.

அப்பத்துலந்து இப்பவரக்கும் சந்தோசமா குடும்பம் நடத்றம் அப்பிடின்னாரு தாத்தா

5 கருத்து(க்கள்):

காசி (Kasi) |

:))


சாகரன் |

:)


Chandravathanaa |

சா.... இத்தனை காலம் கழிச்சா இந்தக் கதை எனக்குக் கிடைக்கோணும்.
28 வருசத்துக்கு முன்னமே கிடைச்சிருக்கலாம்.

நட்புடன்
சந்திரவதனா


பெயரில்லா |

மணிக்கு ரவியா சொன்னது...

டாப் ! :)


பெயரில்லா |

மணிக்கு raviaa சொன்னது...

டாப் !