மின்னஞ்சல் - ஒம்போது கட்டளைகள்
Google Buzz Logo

இப்பல்லாம் ஒம்போது கட்டளைகள் தான் ரொம்பப் பிரபலம் அதனால நானும் மின்னஞ்சல் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய ஒம்போது விஷயங்களை இங்க குடுக்கறேன். வேண்டியவங்க எடுத்துக்கங்க!

1) மின்னஞ்சல் எழுதும்போது மளிகைக்கடை புளிமூட்டை மாதிரி நெருக்கமா ஒட்டி ஒட்டி எழுதாம போதிய இடைவெளி விட்டு எழுதுங்க, வண்ணங்களைப் பயன்படுத்தலாம்
(எச்சரிக்கை:
1. சிலசமயத்துல நிறைய இடம் விட்டால் அர்த்தம் மாறிவிடும் - ஜாக்கிரதை
2. ஒவ்வொரு நாட்டிலும் வண்ணங்களும் அதன் அர்த்தங்களும் மாறுபடும்.
3. பெறுபவர் வண்ணங்களை காட்ட இயலாத மின்னஞ்சல் மென்பொருளை உபயோகித்தால் உங்கள் வண்ணங்களால் பயனேதும் இல்லை.)


2) CAPS மற்றும் bold பயன்படுத்தும் போது படித்தால் அது தரும் அர்த்தம் தெரிந்து வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தவும். சிலருக்கு அது பிடிக்காது, எரிச்சலூட்டவும் செய்யும். (எனக்கு FULLCAPSல மின்னஞ்சல் வந்தா படிக்காமலேயே அழிச்சிடுவேன்)

3) CC என்று ஒன்று இருப்பதை பயன்படுத்த விரும்பினால் அதில் உள்ள முகவரிகளுக்கு உரியவர்கள் உங்களுக்கு மட்டும் தெரிந்தவராக இருந்தால் போதாது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். (என்னோட நன்பனோட மூஞ்சி தெரியாத நன்பனின் மின்னஞ்சல் முகவரியை அறிமுகமே இல்லாமல் நான் எதுக்கு தெரிஞ்சிக்கனும் ?)

4) BCC யைப் பயன்படுத்துவது முதுகில் குத்துவதற்கு ஒப்பானது, கல்யாணப்பத்திரிகை போன்ற பொது அழைப்பு தவிர மற்ற மின்னஞ்சல்களுக்கு BCC யைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல (ரகசியமாய் இருக்கட்டும் என்று நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலை இன்னொருவருக்கு BCC செய்கிறீர்கள், அவர் அதை உரியவரிடம் தம்பட்டம் அடித்துவிட்டார் என்றால் உங்களுக்கு உதை உறுதி.)
5) எரிதங்களை (உங்கள் முகவரி அல்லது நீங்கள் சம்பந்தப்பட்ட குழு முகவரி இல்லாமல் வரும் மின்னஞ்சல் - SPAM) லட்சியம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைப்பதாக அந்த மின்னஞ்சல் பொய் சொன்னாலும் கூட (ஒரு கோடி ரூபாயை மற்றவருக்கு தரும் அளவு இருப்பவன் வேலை வெட்டி இல்லாமல் மின்னஞ்சல் செஞ்சிக்கிட்டிருக்கமாட்டான்).

6) சங்கிலித்தொடர் மின்னஞ்சல்களை உடனடியாக உடைத்தெரியுங்கள் (திருப்பதி பாலாஜியே எழுதிய ஒரிஜினல் மின்னஞ்சலை உடைத்தால் ஒன்றும் ஆகாது. சங்கிலித்தொடரை உடைக்கமாட்டேன் பேர்வழி என்று அதை ஒரு கிருஸ்துவ அல்லது முஸ்லீம் நன்பருக்கு அனுப்பினால் அப்புறம் தெரியும் உங்களை அதிர்ஷ்டம் அடிக்குமா அல்லது வேற எதாவது அடிக்குமான்னு)

7) ஜோக், வைரஸ் பற்றி வரும் மின்னஞ்சல்களை அடுத்தவருக்கு அனுப்பாதீர்கள்
(1. வைரஸ் மின்னஞ்சல்கள் பொய்யா இருக்கலாம் - வைரஸ் பற்றி நிஜமாகவே கவலைப்படுபவர்கள் வைரஸ் பற்றிய தகவல்தளங்களை தொடர்ந்து படிப்பர், அவர்களுக்கு உங்கள் மின்னஞ்சல் உபயோகப்படாது. வைரஸ் பற்றி கவலைப்படாதவர்களுக்கு அது தேவையில்லை.
2. நீங்கள் அனுப்பும் ஜோக்கை படிக்கும்/ரசிக்கும் நிலையில் அதைப்பெறுபவரும் இருப்பார் என்று நிச்சயமில்லை)


8) அழகுக்காகவும் ஒப்புக்காகவும் (பெரும்பாலும் கையெழுத்துக்கு முன்) போடும் வாக்கியத்திற்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்காதீங்க ( "ப்ரியமுடன், கோபி" என்று என்னிடமிருந்து வரும் மின்னஞ்சலுக்கு "உங்கள் ப்ரியத்திற்கு நன்றி"ன்னு பதில் அனுப்பாதிங்க அப்றம் நான் வேற "உங்கள் நன்றியுணர்ச்சிக்கு நன்றி"ன்னு பதில் அனுப்பவேண்டிவரும்)

9) உருப்படியான தகவல்களை கொன்ட இணைதளத்தைப் படிக்க நேர்ந்தால் உடனே உணர்ச்சிவசப்பட்டு அதை மின்னஞ்சலில் உங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பாதீர்கள் (சரி சரி. பொழச்சிப் போங்க, இந்தத் தளம் மட்டும் விதிவிலக்கு :-P)

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

பெயரில்லா |

மணிக்கு ரஞ்சன் சொன்னது...

ஹி..ஹி..


பெயரில்லா |

மணிக்கு mayavarathaan சொன்னது...

welcome back கோபி...ரொம்ப வருஷமாச்சு பாத்து..! என்கிட்டே கொஞ்சம் ஜோக்ஸ் இருக்கு... உங்க ஈ-மெயில் கொடுங்களேன்! :)