சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 1
Google Buzz Logo

திமிங்கலம்

ஒரு டீச்சர், திமிங்கலத்தைப் பத்தி பாடம் எடுத்துகிட்டிருந்தாங்க. ஒரு குட்டிப் பொண்ணு "டீச்சர், ரமேஷோட அப்பா கடலுக்கு போனப்போ அவரைத் திமிங்கலம் முழுங்கிடிச்சி"ன்னா.

டீச்சர் உடனே கோவமா "என்ன கவனிச்ச நீ? இப்பத்தான் திமிங்கலத்தோட தொண்டை ரொம்பச் சின்னது அதால மனுசனை முழுங்க முடியாதுன்னு சொன்னேன்"ன்னாங்க.

அதுக்கு அந்தக் குட்டிப் பொண்ணு "நம்பலைன்னா போங்க டீச்சர், நான் செத்தப்புறம் சொர்கத்துக்கு போயி ரமேஷோட அப்பா கிட்ட கேட்டுக்கறேன்"ன்னா.

அதுக்கு டீச்சர் "ரமேஷோட அப்பா நரகத்துல இருந்தா என்ன பண்ணுவே"ன்னாங்க. உடனே குட்டிப் பொண்ணு "நீங்க செத்தப்புறம் போயி கேட்டுக்கங்க"ன்னா.

கடவுள்

ஒரு வரைகலை வகுப்புல குழந்தைகள் கிட்ட பென்சில் பேப்பர் எல்லாம் கொடுத்து எதையாவது வரையச் சொல்லியிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் என்ன வரையுதுன்னு பாத்துகிட்டே வந்த டீச்சர் ஒரு குழந்தை என்ன வரையுதுன்னு கண்டுபிடிக்க முடியாம கொஞ்ச நேரம் பாத்துட்டு அந்தக் குழந்தைய "என்ன வரையுற நீ"ன்னு கேட்டங்க.

அதுக்கு "கடவுளை வரையுறேன்"ன்னுச்சி அந்த குழந்தை.

"கடவுளைத்தான் இது வரைக்கும் யாருமே பாத்ததில்லையே"ன்னாங்க டீச்சர்

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் பாப்பாங்க"ன்னுச்சி அந்த குழந்தை.

நரைச்ச முடி

ஒரு நாள் அம்மா சமையல் எல்லாம் முடிச்சி பாத்திரம் கழுவிக்கிட்டு இருக்கும் போது குட்டிப் பொண்ணு அம்மாவோட முடியில சிலது நரைச்சி போனதப் பாத்துட்டு எப்படி நரைச்சிப் போச்சின்னு கேட்டுச்சி

அதுக்கு அம்மா "ஒவ்வொரு முறை நீ என் பேச்சை கேக்காம தப்பு பண்ணும் போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"ன்னாங்க

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு அந்த சின்னப் பொண்ணு "இப்பத்தான் தெரியுது! பாட்டிக்கு எப்படி எல்லா முடியும் நரைச்சிப் போச்சி"ன்னு சொல்லீட்டு ஓடியேப் போயிடுச்சி


பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

7 கருத்து(க்கள்):

பெயரில்லா |

துளசி கோபால் சொன்னது...

பரவாயில்லை, நல்லாதான் இருக்கு!!!

ச்சின்னச் சின்னக்குட்டிக் கதைகள்
எல்லாம் தண்ணி பட்டபாடா இருக்கு போல?

எதுக்காவது ஒத்திகையா?


பெயரில்லா |

கோபி சொன்னது...

ஹி.. ஹி.. அதுக்கெல்லாம் இன்னும் காலமிருக்குது துளசியக்கா!


பெயரில்லா |

கோ.கணேஷ் சொன்னது...

கோபி...... ஒவ்வொரு கதையிலும் வரும் கருத்துக்கள் நெத்திப்பொட்டில் அடிப்பதாக உணருகிறேன். குழந்தை பருவத்தில் தான் எவ்வளவு கூர்மை


பெயரில்லா |

மூர்த்தி சொன்னது...

கோபி கண்ணா,

பின்னாடி தேவைப்படும் சேமிச்சு வையுங்க...


பெயரில்லா |

இராதாகிருஷ்ணன் சொன்னது...

இது, இதுவா சின்னபுள்ளத்தனமா இருக்கு? ;-)


பெயரில்லா |

Snegethy சொன்னது...

கோபி நீங்க இரண்டை மிஸ் பண்ணிட்டீங்க.

A little girl was talking to her teacher about whales.
The teacher said it was physically impossible for a whale to swallow a human
because even though it was a very large mammal its throat was very small.

The little girl stated that Jonah was swallowed by a whale.
Irritated, the teacher reiterated that a whale could not swallow a

human; it was physically impossible.
The little girl said, "When I get to heaven I will ask Jonah."
The teacher asked, " What if Jonah went to hell?"
The little girl replied, "Then you ask him".


A Kindergarten teacher was observing her classroom of children while
they were drawing. She would occasionally walk around to see each child's work.

As she got to one little girl who was working diligently, she asked what the drawing was.

The girl replied, "I'm drawing God."
The teacher paused and said, "But no one knows what God looks like."

Without missing a beat, or looking up from her drawing, the girl replied, "They will in a minute."

A Sunday school teacher was discussing the Ten Commandments
with her five
and six year olds After explaining the commandment to "honor"
thy Father and
thy Mother, she asked, "Is there a commandment that teaches us
how to treat
our brothers and sisters?"
Without missing a beat one little boy (the oldest of a family)
answered, "Thou shall not kill."

One day a little girl was sitting and watching her mother do the dishes
at the kitchen sink. She suddenly noticed that her mother had several
strands of white hair sticking out in contrast on her brunette head.
She looked at her mother and inquisitively asked, "Why are some of your
hairs white, Mom?"
Her mother replied, "Well, every time that you do something wrong and make
me cry or unhappy, one of my hairs turns white."
The little girl thought about this revelation for a while and then said,

"Momma, how come ALL of grandma's hairs are white?"

The children had all been photographed, and the teacher was trying to
persuade them each to buy a copy of the group picture.
"Just think how nice it will be to look at it when you are all grown up
and say, 'There's Jennifer, she's a lawyer,' or 'That's
Michael, he's a
doctor.'
A small voice at the back of the room rang out,"And there's the
teacher, she
s dead. "

A teacher was giving a lesson on the circulation of the blood.
Trying to
make the matter clearer, she said, "Now, class, if I stood on
my head,
the blood, as you know, would run into it, and I would turn red
in the
face.." "Yes," the class said.
"Then why is it that while I am standing upright in the
ordinary
position the blood doesn't run into my feet?" A little fellow
shouted,
"Cause your feet ain't empty."

The children were lined up in the cafeteria of a Catholic
elementary
school for lunch. At the head of the table was a large pile
of apples.
The nun made a note, and posted on the apple tray: "Take only
ONE. God is
watching."
Moving further along the lunch line, at the other end of the
table was a
large pile of chocolate chip cookies. A child had written a
note, "Take
all you want - God is watching the apples.


பெயரில்லா |

கோபி சொன்னது...

ஸ்னேகிதி,

மிஸ் எல்லாம் பண்ணலீங்க, தமிழாக்கம் செஞ்சி பதிக்க நேரம் பத்தலை.. அதான் 1,2 ன்னு ரெண்டு பகுதியாப் பிரிச்சிப் போட்டுட்டேன் (2ஆவது பகுதி இன்னும் சிறிது நேரத்தில்)