புக்கு செயினு வெள்ளாடலாம் வா மச்சி
என்னிய ஆட்டத்துக்கு சேத்திகின என்னென்னிக்கும் லவ்வோட பாலாவுக்கு ஒரு சலாம் போட்டுக்றம்பா!
அப்பாலிக்கா உன்னும் யார்னா என்னிய கூப்டிருந்தா(ஹக்காங்... பெரிய இவுரு.. இன்னும் நாலு பேரு இன்விடேசன் குட்த்தாத்தான் எய்துவியா?) அவங்க அல்லாருக்கும் ஒரு டாங்க்ஸ்பா.
இன்னாடா இப்ப பாத்து ஒரு சினி இஸ்டாரு இண்ட்ரியூ கூட இல்லியேன்னு படா ஃபீலிங்ஸ் ஆவுது.(அதுல இர்ந்து ஒரு நாலஞ்சி இங்கிலிபீஸ் புக்கு பேரு எட்த்து உட்டா ஃபிகர்ல்லாம் நம்மளையப் பாத்து ஒரு லுக்கு உடாது?)
என்னாவோ சேரி.. நம்ம கதிய சொல்றேன்.. கேளு மச்சி!
கம்மி-ஜாஸ்தி லுக்கு உட சொல்லோ நம்ம கதயும் அல்வாநகர் விஜய் கத மாதிரியேதான் கீது
தமுக்கூண்டா இர்க்கொ சொல்லோ சிர்வர் மலரு, பூந்தளிரு, அம்புலிமாமா, லயன்காமிக்சு, இதுல்லாம் பட்ச்சிகினு இர்ந்தேன்
மீச மொளச்ச ஒடனே பட்ச்சது வேற புக்கு.. அதெல்லாம் கண்டுக்காத நைனா வயசு கோளாறு (தோடா... வண்ட்டாரு உத்தமப் புருசரு).
மீச மொளச்ச கொஞ்சம் நாளுல பாக்கீட் நாவல், சூப்பரு நாவல், க்ரைமு நாவல் இப்டி தமிளு நாவல் எல்லாத்தையும் பட்ச்சிகினு கெடப்பேன் (பட்டுக்கோட்டை பிரபாகரோட பரத்து-சுசி, சுபாவோட நரேனு-வைஜி, ராஜேஷ்குமாரோட விவேக்கு-ரூபலா, சுஜாதாத்தாவோட கனேசு-வசந்து அல்லாரியும் புடிக்கும்பா).
அப்பாலிக்கா தமிளு இஸ்ட்ரி மேல இண்ட்ரஸ்ட் ஆயி பொன்னியின் செல்வன், கடல் புறா, பாலகுமாரரு எய்துன உடையார், இப்புடி ஒரு ரெண்டு மூனு இஸ்ட்ரி நாவல் மேல உயுந்து பொரண்டன்.
கடேசியா தொளிலப் பாக்க அங்க இங்க போவ சொல்லோ கார்ஃபீல்டு காமிக்ஸ், ப்ரைன் டீசர் வெள்ளாட்டு புக்கு, ஜுல்ஸ்வெர்ன் சயின்ஸ் பிக்ஸன், சுஜாதாவோட சிரிரங்கத்து தேவத புக்கு இப்புடி சால்னாக் கடைல பிரியாணிய பிரிச்சி புரொட்டாவோட வச்சி சைடு கேப்புல கல்யாணி பீரை ஊத்திகின மாரி கதம்பமா பட்ச்சதுல மூளை கொயம்பிப் போய் பாய பிராண்டிக்கினு கீரேன்.
அப்பாலிக்கா டச்சு உட்டு போச்சிப்பா. எப்பன்னா ரயில்ல போவ சொல்லோ எதுனா பாத்தா வாங்கி படிக்கறன்னு ஊட்ல கடாசிடுவேன் (என்னிக்காச்சும் பாத்து டயம் கெடச்சா அப்புடி கடாசினதுல ஒன்னு ரண்டு எட்த்து பொரட்டிப் பாப்பேன்)
நம்முளுக்கு இந்த இங்கிலிபீஸ் புக்குல்லாம் அவ்ளோ தெர்யாதுபா. எங்கூட்டுகாரியாவப் போற ஃபிகருதான் அப்பப்ப ஜெஃப்ரி ஆர்ச்சரு, சிட்னி செல்டனு, அவுரு இவுருன்னு கூவிகினு கெடக்கும். தாம்மே! சும்மா கெடன்னு ஒரு கொரலு உட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவேன்
இப்ப இன்னா படிக்கரன்றியா? எல்லாம் எணையத்துல படிக்கற்தோட செரி.. பேப்பர் கடில புக்கு வாங்கி பட்ச்சே ரொம்ப நாளு ஆவுது மாம்ஸூ
செரி செரி இப்ப மேட்டருக்கு வர்ரேன்
எவ்ளோ புக்கு வச்சிகீற உன்னாண்ட அப்பிடின்னு கேட்டினாக்க, நம்ம கைல ஒரு நாலஞ்சி கலக்டர்ஸ்(கலக்டருக்கு தமிளுல பொறுக்கின்னுவாங்கபா) பேக் புக்குங்கோ இர்க்குது அவ்ளோதான். (மத்த சுட்ட புக்குல்லாம் ஆட்டதுல சேத்துக்கலான்றியா?)
கட்ச்சியா பட்ச்ச புக்கு: Journey to the Center of the Earth - Jules Vern
ரீடிங் உடனும்னு நென்ச்சிகினே கீற புக்கு:
20,000 Leagues Under the Sea - Jules Vern
(வாங்கி வெச்சி ரொம்ப நாளாவுது)
கட்ச்சியா வாங்குன புக்கு:
Jules Vern Classics - Collectors pack
பட்ச்சதுல புட்ச்ச இங்கிலிபீஸ் புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) Rapidex English speaking Course (ரவுசு தாங்கலடா சாமி!)
2) Garfield Comics - Collectors pack
3) Journey to the Center of the Earth - Jules Vern
4) From the Earth to the Moon - Jules Vern
5) Harry Potter - Collectors pack -இன்னும் ஆறாவது புக்கு (அதாம்பா ஆப் பளடட் பிரின்ஸு) வாங்கிப் படிக்கனும். நெஜம்மா படத்தவிட புக்கு படிக்க சொல்ல சூப்பரா கீது.
பட்ச்சதுல புட்ச்ச தமிளு புக்குங்கோ(புட்ச்ச வர்ஸைல இல்ல):
1) பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி
2) கடல் புறா - சாண்டில்யன்
3) கொலையுதிர்காலம் - சுஜாதா
4) தொட்டால் தொடரும் - பட்டுக்கோட்டை பிரபாகர்
5) அஷ்டாவக்ரன் - எண்டமூரி வீரேந்திர நாத் (தெலுங்கு, மலையாளம் கன்னடத்துல கூட வன்ச்சி இந்த கத)
6) வீர இளைஞர்களுக்கு - சுவாமி விவேகானந்தர்
செரி உன்னிய இன்விட் பண்ண மாரி நீ யாரப் பண்ணுவேனு கேக்றயா மச்சி? இந்த புட்ச்சிக்க
1) கொசப்பேட்ட குப்புசாமி(நம்ம கே.வி.ஆர் ஏற்கனவே சொல்ட்டாரு, ஆனாக்க நம்ம ஜிகிரி தோஸ்த்து, ரிக்சா வலிக்கிற குப்ஸாமி இன்னா சொல்றாருன்னு பாக்கலாம்)
2) துளசியக்கா
3) குப்பை அன்பு
4) மூர்த்தி
5) கொங்கு ராசா
6) மாயவரத்தான்
7) உதவாக்கரை க்ருபா சங்கர்
இன்னாது.. அஞ்சி பேருதான் சொல்லனுமா? இன்னா மச்சி... இம்மாந் நேரம் பேசிகினு கீறேன்... ஒரு கொசுறு கெடயாதா? அப்பவும் ஆறுதான்றயா கொசுறுக்கு கொசுறா உன்னோன்னு வெச்சிக்க இன்னா ?
ஏயு பேர கூப்டு கீறேன். எத்தினி பேரு வெளாட்டுக்கு வராங்கன்னு பாக்கலாம்.
சரி டயம் ஆவுது .. அல்லாருக்கும் டாட்டா சொல்லிக்கறான் கோபி..
வர்ட்டா!.. போலாம் ரெய் ரெய் ரெய்ய்ய்ய்ட்...
பி.கு:நகைச்சுவைக்காக சென்னைத் தமிழில் எழுதப்படுள்ள இந்தப் பதிவை தமிழ்க் குடிதாங்கிகள் யாரும் தார் பூசி அழித்திட வேண்டாம் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் (மீட்டிங் முடிஞ்சாக்க இஸ்டேஜ் பின்னால வாங்கப்பா அல்லாரையும் பெசலா சிக்கன் பிரியானி பார்சல், வாட்டர் பாக்கிட்டோட கவுன்ச்சிடுரேன்)
12 கருத்து(க்கள்):
மணிக்கு சங்கர் சொன்னது...
ஏலே கலக்கிபுட்டலா.. அப்படி நம்ம ஊரு பக்கம் வாலே மக்கா..
மணிக்கு மூர்த்தி சொன்னது...
சென்னைத் தமிழில் யதார்த்தமான ஒரு பதிவு. உண்மையை மட்டுமே எழுதிய உங்களின் நேர்மை என்னை வியக்க வைத்தது! என்னை அழைத்தமைக்கும் நன்றிகள்.
மணிக்கு BALA சொன்னது...
Thanks, Gopi
nalla pathivu :)
மணிக்கு கோபி சொன்னது...
// உண்மையை மட்டுமே எழுதிய உங்களின் நேர்மை என்னை வியக்க வைத்தது! //
வெளயாடாதீங்க மூர்த்தி, ராத்திரி பன்னண்டு மணிக்கு ஒக்காந்து எயுதுனதுல எதுமே ஞாபகம் வரலை.
காத்தால வந்து இன்னும் கொஞ்சம் (எனக்கு ரொம்ப புடிச்ச தொட்டால் தொடரும்..) சேத்துக்கினேன்
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...
பதிவு படா பேஜாராகீதுப்பா
மணிக்கு கோபி சொன்னது...
//பதிவு படா பேஜாராகீதுப்பா//
இன்னா மாம்ஸு இப்புடி சொல்ட்ட?
ஏதோ நம்ம தம்முக்கூண்டு ப்ரெய்னுக்கு ஏறின புக்கு எல்லாம் சொல்ட்டம்பா..
என்னா பட்ச்சாலும் கவிஜ..எலக்கியம் எல்லாம் புர்யவே மாட்டுது (ஆ.வி.யில் வரும் தபு சங்கர் பக்கம் போன்ற எளிய கவிதைகள் தவிர)
அப்பால எளக்கியவாதி வேசம் கட்னாக்க எளக்கியவாதிங்க எல்லாம் சண்டைக்கி வந்துருவாங்க இல்ல.
அதான் இப்புடி....
மணிக்கு mayavarathaan சொன்னது...
நன்றி கோபி சார்.. என்னையும் அழைத்ததற்கு! ஆனால், இப்போ தமிழ்மணம் பூராவும் ஒரே புத்தக வாடை தான் வீசுது. அதிலே நானும் குதிச்சு என்னோட அம்புலிமாமா, சுட்டி விகடன் பட்டியலை போட்டா யாரு சீண்டுவாங்க சொல்லுங்க?! (இங்கேயும் விகடனை விடறதில்லையான்னு ராம்கி அண்ணாத்தே கேக்குறாரு பாருங்க!) அதனால, கொஞ்ச நாள் கழிச்சு எட்டிப் பார்க்கிறேனே. ஓ.கே.வா?!
அது சரி.. உங்க பின்னோட்டம் பக்கத்திலே ஏதோ 'மணிக்கு மாயவரத்தான் சொன்னது... மணிக்கு கோபி சொன்னது...' அப்படீன்னு வரிசையா இருக்குதே... அது யாருங்க 'மணி'?! :)
மணிக்கு கோபி சொன்னது...
மாயாவரத்தான்,
//அம்புலிமாமா, சுட்டி விகடன் பட்டியலை போட்டா யாரு சீண்டுவாங்க சொல்லுங்க?!//
அம்புலிமாமா சரி.. சுட்டி விகடன்னு சொல்லி உங்க வயசை கொறச்சிகிட்டா நம்பிடுவமா?
//கொஞ்ச நாள் கழிச்சு எட்டிப் பார்க்கிறேனே. ஓ.கே.வா?! //
உங்க வசதி போல என்னிக்கு முடியுமோ அன்னிக்கு வெளயாட வாங்க.
//... அது யாருங்க 'மணி'?! :) //
அடாடா! தொழில்நுட்பக் கோளாறுங்க.. சரி பண்ண முடியுமான்னு பாக்கறேன்
மணிக்கு மாயவரத்தான் சொன்னது...
//சுட்டி விகடன்னு சொல்லி உங்க வயசை கொறச்சிகிட்டா நம்பிடுவமா?//
hihi :))))
மணிக்கு vaamanikandan சொன்னது...
என்கு பொஸ்தகம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது மாமூ! நீ சொன்ன மாதிரி சிக்கன் பிரியாணி வாங்கி குடுத்துரு!
முரளி சொன்னது...
Hello Gopi
Good post. enjoyed it.
Murali
நீங்க சொல்லுங்க