பட்டைய கெளப்புற பட்டம் நம் பட்டம்
Google Buzz Logo

வர வர வயசாயிட்டே போறதுனால புத்தி மழுங்கிட்டே போவுதோன்னு தோனுச்சி. சின்னப் புள்ளைங்களுக்கு இருக்கிற அறிவு கூட நமக்கு இல்லியே என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

என் வலைப்பூவுல கடந்த ரெண்டு பதிவுகளைப் படிச்சிட்டு என் அறைவாசி, சின்னப் புள்ளைங்க அளவு அறிவு நமக்கும் கெடைக்கனும்னா நாம கூட சின்னப் புள்ளைங்களா மாறிடனும் அப்புடின்னான்.

துளசியக்கா சொன்ன மாதிரி குள்ளமா வளர முடியும்.. ஆனா வயசு கொறைவா வளர்றது எப்படின்னு தெரியல.

"டேய், சூப்பர் ஸ்டார் சந்திரமுகியில பட்டம் உட்டா மாதிரி நாம்மலும் பட்டம் உட்டாக்க மீச வெச்ச கொழந்தையாயிடலாம்" அப்படின்னான் என் அறைவாசி. சரின்னு பட்டம் செய்யத் தேவையானதை வாங்கி வரக் கிளம்பினோம்

கலர் காகிதம் தேடி ஊரு பூராம் அலைஞ்சும் கெடைக்கல. (பேருதான் ஹைட்டெக் சிட்டி, ஆனா உண்மையில ஒரு நல்ல சோப் வாங்கனும்னா கூட 4-5 கி.மீ போகனும்) சரின்னு நியூஸ் பேப்பர் (நேற்றைய நியூஸ் பேப்பர் இன்றைய வேஸ்ட் பேப்பர்னு சக வலைப்பதிவாளர் ஒருத்தர் சொன்ன மாதிரி), கோந்து, தென்னங்குச்சி, ட்வைன் நூல் எல்லாம் வச்சி ஒரு பட்டம் ரெடி பண்ணியாச்சி.

இந்த ஊருல யாரு நமக்கு டீல் போடப் போறாங்க, நம்ம பட்டம் தான் ஒரே பட்டம்!

அதனால் மாஞ்சா எல்லாம் இல்லாம் ஒரு சாதாரண ட்வைன் நூல் கண்டுல பட்டத்தை கட்டி மொட்டை மாடியில பறக்க வுட்டா கோத்தா அடிக்க ஆரம்பிச்சிடுச்சி (பட்டம் பறக்கவிட்டு அனுபவமில்லாதவங்களுக்கு.. கோத்தா அடிக்குதுன்னா பட்டம் மேலயும் கீழயுமா வட்டம் அடிக்குதுன்னு அர்த்தம்)
சரின்னு பட்டத்த கீழ எறக்கி நூலை ஒழுங்கா கட்டி (இதுக்கு எங்க வட்டாரத்துல சூத்திரம் போடுறதுன்னுவாங்க) திரும்பி பறக்க விட்டோம்
அப்பாடா! இந்த வாட்டி நல்லா பறந்தது.. சாயங்காலத்துல ஒரு ரெண்டு மணி நேரம் போனதே தெரியல. ஒரு வழியா பட்டத்தை எங்கயும் மாட்டாம (பொதுவா ஒழுங்கா எறக்காட்டி எலக்ட்ரிக் கம்பி, மரம், பக்கத்து மொட்டை மாடி இப்புடி எங்கையாவது மாட்டி கிழிஞ்சிதான் வரும்.. ) ஒழுங்கா எறக்கி அழகா மடிச்சி வச்சாச்சி..

இனி அடுத்த வாரம் பட்டம் உடனும். நீங்களும் பட்டம் உட்டுப் பாருங்க.... அதுல இருக்குற சுகமே தனி...

பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ...

7 கருத்து(க்கள்):

பெயரில்லா |

பாஸிடிவ்ராமா சொன்னது...

கோபி! பட்டத்தை பறக்க வுடுறதுன்னா இதுதானா? உங்க பட்டத்தை பார்க்கிறச்ச சங்கர் படத்துல காமிக்கிற கிராபிக்ஸ் பம்பு மாதிரியே இருக்குது.பாம்புக்குதான் கால் கிடையாதே அதன் எடுத்துட்டேன். கல்யாணப்பெண்ணோட பின்புற சடை மாதிரியும் இருக்குது.


பெயரில்லா |

வீ எம் சொன்னது...

பட்டம் விடுவதில் பட்டம் பெற வைத்த கோபி , மிக்க நன்றி
வீ எம்


பெயரில்லா |

ஞானபீடம் சொன்னது...

//...பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ... // -கோபி கேட்கிறார்.

வெயில் இன்னமும் ஒங்கபக்கம் கொறயல போல இருக்கு ! - ஞானபீடம் சொன்னது.


பெயரில்லா |

கோபி சொன்னது...

ஞானபீடம்,

சரியாப் படிங்க... :-P

//...பட்டம் செய்வது எப்படின்னு தெரியனும்னா சுய முகவரியிட்ட தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி அனுப்புங்க ... //


பெயரில்லா |

ஞானபீடம் சொன்னது...

//...தனி மின்னஞ்சலில் பத்து ரூபா போஸ்டல் ஆர்டர் அட்டாச் பண்ணி... //

postal
order
attach

தமிழை மதிக்காதவர்களுடன் எங்களுக்கு எந்த
அட்டாச்மெண்ட்டும் கெடயாது !
-ஞானபீடம்


பெயரில்லா |

கோபி சொன்னது...

எங்களோடு அட்டாச்மெண்ட் வைத்துக் கொள்ளும் அனைவருக்கும் வரும் தேர்தலில் சரியான அளவு தொகுதி உடன்படிக்கை செய்யப் படும்.

ஞானபீடம் என்ற பெயர் உள்ளவருக்கு சிறப்பு சலுகைகளாக சில பெட்டிகள் அளிக்கப்படும்


பெயரில்லா |

mugamoodi சொன்னது...

அடச்சய்... இந்த பட்டமா.... நான் கூட காலேஜ்ல கொடுத்தாங்கலே அந்த பட்டத்த பத்தி என்னவோ சொல்றாங்க போலருக்கே, நம்ம பட்டத்தத்தான் வாங்குன அன்னிக்கே பறக்க வுட்டுட்டோமேன்னு கவலயா வந்தேன்...