சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 2
Google Buzz Logo

போட்டோ

பள்ளிக்கூடத்துல ஒரு வகுப்புல எல்லாரையும் நிக்க வச்சி குரூப் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க. எடுத்து முடிச்சதும் அதை எல்லா மாணவர்களையும் வாங்க வைக்கனும்னு நெனச்ச டீச்சர் "ஆகா! எல்லாரும் இந்த போட்டோவ வாங்கி வச்சி, பெரியவங்களா ஆனப்புறம் பாத்தா எப்படி இருக்கும்! இதோ பாரு ரமேஷ், இப்ப இவன் டாக்டர்! இதோ பாரு சுரேஷ், இப்ப இவன் வக்கீல்.. இப்டி சொல்லிப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

சொல்லி முடிக்கறதுக்குள்ள கடைசி டெஸ்க்ல இருந்து குரல் மட்டும் வந்தது "இதோ பாரு டீச்சர்.. இப்ப இவங்க உயிரோட இல்ல"ன்னு.

ரத்தம்

ஒரு டீச்சர் ரத்தத்தைப் பத்தி பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

டீச்சர்: நான் தலைகீழா நிக்கும் போது ரத்தம் தலைக்கு போய் மூஞ்சி செவப்பா ஆகுது இல்லையா?
பசங்க: ஆமா டீச்சர்!
டீச்சர்: அப்படின்னா நான் நேரா நிக்கும் போது ஏன் காலுக்கு ரத்தப் போய் செவப்பா ஆவறதில்லை?
பசங்க: ஏன்னா உங்க காலு காலியா இல்லை டீச்சர்!

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மதிய உணவு நேரம்,

பெரிய மேஜையில் பல விதமான உணவை வைத்து பசங்களை எடுத்து போட்டு சாப்பிட சொன்னாங்க. ஆப்பிள் வச்சிருந்த இடத்துல "ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" அப்டின்னு போர்டு வச்சிருந்தாங்க.

அந்த மேஜையின் இன்னொரு கடைசியில ஐஸ்கிரீம் வச்சிருந்த இடத்துல யாரோ ஒரு குறும்பு குழந்தை "எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ! கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கிட்டு இருக்கார்"ன்னு கிறுக்கி வச்சிருந்தது

பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

5 கருத்து(க்கள்):

பெயரில்லா |

அன்பு சொன்னது...

கலக்கல்... இப்படி எதாவது குட்டிகுட்டியா எழுதுப்பா... எங்களுக்கு இன்னிக்கும், உனக்க்கு நாளைக்கும் தேவைப்படும்:)


பெயரில்லா |

Murali சொன்னது...

hello Gopi
the one abt ice cream was super.


பெயரில்லா |

துளசி கோபால் சொன்னது...

:-)))))))))


NambikkaiRAMA |

சும்மா தூள் கிளப்புறீங்க! அந்த குட்டி குழந்தை கோபிதானே?


enRenRum-anbudan.BALA |

Very Nice :))))))