எதிர்பாராது வந்த பிறந்தநாள் பரிசு
Google Buzz Logo

பொதுவா பிறந்தநாளை அமைதியா குடும்பத்தோட ஏதாவது ஒரு குழந்தைகள் வாழும் கோவிலுக்கு(எதுன்னு அங்கு சென்றவர்களுக்கு புரியும்) சென்று நிம்மதியா இருந்து சந்தோசமா திரும்பி வருவேன்.

இந்த முறை திருமணத்துக்கு முன் கடைசி பிறந்தநாள் என்பதால் நண்பர்களோடு மகிழ்ந்திருக்க எண்ணி ஹைத்ராபாத்துலயே தங்கிட்டேன். நள்ளிரவு கேக் வெட்டி அழுகிய முட்டை/கேக் அடித்து விளையாடி மேற்கத்திய முறையில் அழிச்சாட்டியம் பண்ணி முடிச்சி குறைத்தூக்கம் போட்டு எந்திரிச்சி காலைக்கடன் எல்லாம் முடிச்சா அம்மணி கிட்ட இருந்து தொலைபேசி! (எல்லாரும் நள்ளிரவு 12:00 வாழ்த்துவாங்க, ஆனா எங்க அம்மணி நான் பிறந்த மணித்துளியில் கூப்பிட்டு பேசுவாங்க)

அதுல பேசி முடிச்சி, தயாராகி இனிப்பெல்லாம் வாங்கிகிட்டு அலுவலகம் போய் வேலைய ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆச்சி, அப்றமா தனி மின்னஞ்சல்களை பார்க்க ஆரம்பித்தேன். நெருங்கிய நண்பர்களின் வாழ்த்துச் செய்திகள்.. எல்லாம் படிச்சுட்டு பாத்தா மதுரையைச் சேர்ந்த பத்திரிக்கையாள நண்பரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். அதுல தினமலர் டாட்காம் பகுதி சுட்டி கொடுத்து (இல்லைன்னா இன்றைய தினமலர் நாளிதழில் இரண்டாம் பக்கம்) போய் பாருன்னு எழுதியிருந்தாரு!

அட! இந்தப் பாமரனின் வலைப்பூவைப் பத்தி ஒரு பத்தி!

கணங்கள்,ப்ருந்தாவனம்,என்றென்றும் அன்புடன் பாலா,இட்லிவடை,அல்வாசிட்டி,மாயவரத்தான்,லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.. ஆகியவற்றின் சுட்டிகளோட...

இன்று என் பிறந்தநாள் என்று அறியாமலேயே எனக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசளித்த அந்த மதுரைப் பத்திரிக்கையாளருக்கு(பேரைச் சொல்லவா.. அது நியாயமாகுமா...)

இதயத்திலிருந்து நன்றி!

11 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

யோவ் கோபி,

முதல்ல உங்க பத்திரிக்கை நண்பருக்கும், என் பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி. நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்ந்ததில் ஒரு ஃபுல் அடிச்ச சந்தோசம்.

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு. இனிமேல் ஆயிரம் பேர் வாழ்த்தினாலும் அம்மணி வாழ்த்துற மாதிரி இருக்காது தான். அதுக்கு என்ன பண்ண முடியும்?

அப்புறம் higopi.com -க்கு மின்னஞ்சல் அனுப்பிச்ச பதில் போட மாட்டீங்களா?


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

தப்பு நடந்து போச்சிங்க எஜமான்!

உங்க மின்னஞ்சலை படிச்சி பதில் அனுப்ப எடுத்து வச்சனுங்க.. எப்படியோ மறந்து போச்சிங்க..

இப்ப உடனே பதில் போட்றனுங்க...


பெயரில்லா |

மணிக்கு வீ. எம் சொன்னது...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி ..

வீ. எம்


வீ. எம் |

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி ..

வீ. எம்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி வீ.எம்


பெயரில்லா |

மணிக்கு anbudan BALA சொன்னது...

http://dinamalar.com/2005june01/flash.asp
வாழ்த்துக்கள்...

Birthday wishes too :)


பெயரில்லா |

மணிக்கு பாலா சுப்ரா சொன்னது...

பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி :-)


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி.. பாலா, பாலா சுப்ரா.

ஹூம்... இந்த தினமலர் விஷயத்தக் கூட அரசியலாக்கி குத்தம் சொல்ல சில பேர் இருக்காங்க.

அவங்க படைப்பு எப்படி இருக்குன்னு பாக்கலாம்னா, அவங்களுக்கு சொந்தமா வலைப்பூவே இல்லை

என்னத்தை சொல்ல! போய் பாருங்க

http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_28.html


பெயரில்லா |

மணிக்கு mayavarathaan சொன்னது...

கோபி அண்ணாச்சி.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! பிறந்த நாள் பரிசுக்கும் சேர்த்து தான்!!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

மாயவரத்தான்,

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள் ;-)


பெயரில்லா |

கோபி சொன்னது...

ஜூன் 18, 2005 அன்றைய தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில் ல் தமிழ் வலைப்பூக்களின் தொகுப்பு குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது